Published:Updated:

கழுகார் பதில்கள்

மனிதநேயம்
பிரீமியம் ஸ்டோரி
மனிதநேயம்

`அனைவருக்கும் கம்பளிப் போர்வைகள் தருவோம் என்ற வாக்குறுதியுடன் களமிறங்குகின்றன நரிகள்.

கழுகார் பதில்கள்

`அனைவருக்கும் கம்பளிப் போர்வைகள் தருவோம் என்ற வாக்குறுதியுடன் களமிறங்குகின்றன நரிகள்.

Published:Updated:
மனிதநேயம்
பிரீமியம் ஸ்டோரி
மனிதநேயம்
கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

சரத்குமாரைப் பற்றி ஏதேனும் செய்தி?

வெளிவரவிருக்கும் புனித் ராஜ்குமார் படத்தில் வில்லன், `பொன்னியின் செல்வனி’ல் ஒரு கேரக்டர், ஓடிடி சீரீஸ்களில் பிஸி என்று பரபரப்பாக இருக்கிறார். ஓ... நீங்க சமத்துவ மக்கள் கட்சித் தலைவரைப் பற்றி கேட்கறீங்களா... சாரி பாஸ்!

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர். தேனி.

ஓர் அரசியல் பழமொழி ப்ளீஸ்..?

`அனைவருக்கும் கம்பளிப் போர்வைகள் தருவோம் என்ற வாக்குறுதியுடன் களமிறங்குகின்றன நரிகள். கம்பளிக்கு ரோமம் எங்கிருந்து வரும் என்று சிந்திக்கத் தெரியாத ஆடுகள் தலையாட்டுகின்றன!’

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

‘மக்கள்தான் எஜமானர்கள்’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னது எப்போது உண்மையாகும்?

அது அல்ரெடி உண்மைதானே பாஸ்!

தே.மாதவராஜ், ராமநாதபுரம்.

அண்ணாமலை 20,000 புத்தகங்களைப் படித்ததாகச் சொல்கிறாரே?

ஒன்பது கிரகங்களிலும் உச்சம் பெற்ற ஒருவர்...

ஸ்ரீகாந்த் ரமேஷ், விருதுநகர்.

ஒருசில நேர்மையான, திறமை வாய்ந்த அரசியல்வாதிகள், அவர்களின் கட்சியினராலேயே மதிக்கப்படுவதில்லையே?

ஒரு நீதிக்கதை. தன் மகனை அழைத்த தந்தை, “இது பல தலைமுறைகளாக நம் வீட்டிலுள்ள கைக்கடிகாரம். இதன் விலை என்னவென்று அறிந்து வா!” என்று அனுப்பினார். மகன் சென்று தெருவோரக் கடையில் கேட்டான். “மிகவும் பழையது. 50 ரூபாய் தருகிறேன்” என்றான் கடைக்காரன். தந்தை, பழைய பொருள்கள் விற்கும் கடைக்குச் சென்று கேட்கச் சொன்னார். அவர்கள் “நல்ல பழங்காலப் பொருளாக இருக்கிறதே... இதற்கு 5,000 ரூபாய் தரலாம்” என்றனர். அடுத்து தந்தை, “பழங்காலப் பொருள்களை வைத்திருக்கும் மியூசியம் ஒன்றுக்குச் சென்று கொடுத்துப் பார்” என்றார். அவர்கள் அதைப் பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டு, “ஆஹா... மன்னர்காலக் கடிகாரமாயிற்றே. ஒரு கோடிக்கு மேல் போகும்” என்றார்கள். திரும்பி வந்த மகனிடம் தந்தை சொன்னார். “பிழையான இடத்தில் இருந்து கொண்டு, உனக்கு மதிப்பு கிட்டவில்லை என்று எண்ணாதே. சரியான இடத்தில் நீ இருக்கப் பழகு” என்றார்.

பெ.பச்சையப்பன், கம்பம்.

கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரம் மீண்டுவருகிறதா, கழுகாரே..?

உங்கள் பர்ஸ் என்ன சொல்கிறது?

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

தேர்தலில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து, மக்கள் பிரதிநிதிகள் ஆகி, தங்கள் மீதுள்ள வழக்குகளைப் பொருட்படுத்தாமல், மக்களுக்காகத் தங்களை அர்ப்பணிக்கத் தயாராக உள்ள மக்கள் பிரதிநிதிகள், சொர்க்கத்தில் இடம்பிடிப்பதற்குத் தகுதியானவர்கள்தானே?

காமெடி பண்ணலாம் சார்... இவ்வளவு கோவமா காமெடி பண்ணக் கூடாது!

கழுகார் பதில்கள்

கிருஷ்ணா, தி.நகர், சென்னை.

எளிமையான வரிகளில் ஆனா, புரிந்தும் புரியாத மாதிரி ஒரு கவிதை சொல்லுங்களேன்?

வந்தவன் கேட்டான்

“என்னைத் தெரியுமா?”

“தெரியவில்லையே” என்றேன்.

“உன்னைத் தெரியுமா?”

என்று கேட்டான்.

“தெரியவில்லையே” என்றேன்.

“பின் என்னதான் தெரியும்?”என்றான்.

“உன்னையும் என்னையும் தவிர

வேறு எல்லாம் தெரியும்” என்றேன்.

- நகுலன்

கழுகார் பதில்கள்

சுப்பிரமணியன், மேட்டுப்பாளையம்.

போரினால் மனிதநேயம் அழிந்து கொண்டிருக்கிறதுதானே?!

உக்ரைனிலிருந்து இத்தாலி, போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சுமார் 30 லட்சம் மக்கள் அகதிகளாகச் சென்றுகொண்டிருக்கின்றனர். இவர்களில் பள்ளி மாணவர்களும் அடக்கம். அப்படிச் சென்ற இரண்டு மாணவர்களுக்கு, இத்தாலியில் ஒரு பள்ளி பிரமாண்ட வரவேற்பு அளித்திருக்கிறது. உக்ரைன் கொடியை ஏந்தியும், மலர்கள், இனிப்புகள் வழங்கியும் அந்த மாணவக் குழந்தைகளை வரவேற்றுள்ளனர் அந்தப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். ‘இந்த உலகம் அனைவருக்குமானது. அவர்களுக்கு இணக்கமான சூழல் இங்கே உள்ளது. அவர்கள் கல்விக்கு எந்த இடையூறும் இருக்காது’ என்பதை உணர்த்த, இத்தாலி பள்ளி செய்திருக்கும் இந்தச் செயல், மற்ற நாடுகளிலும் வைரலாகி அங்கு படிக்க, வசிக்க வரும் அனைவருக்கும் இணக்கமான சூழலை உருவாக்க வழிசெய்திருக்கிறது. மனிதம் எதையும் தாண்டி முளைத்துக்கொண்டே இருக்கக்கூடியது. நம்பிக்கைகொள்வோம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism