Published:Updated:

கழுகார் பதில்கள்

குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
News
குஷ்பு

தொழில், கடை என்ப தெல்லாம் ஒருவரின் சொந்த மூலதனத்தில் உருவாவது. ஒரு கட்சி அப்படி அல்ல. பலரின் உழைப்பு, வேர்வை, ரத்தம் என்று உரமிட்டு வளர்வது.

ராஜூ கண்ணப்பன், வேலூர்.

“ஆயிரம் விளக்கு தொகுதியை, `தி.மு.க-வின் கோட்டை’ என்று கூறுவதே கேலியாக இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறாரே குஷ்பு?


குஷ்பு இப்படிப் பேசியபோது, சிட்டிங் எம்.எல்.ஏ-வான கு.க.செல்வம் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும்... சுவாரஸ்யமாக இருந்திருக்கும்!

கழுகார் பதில்கள்

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் (மா).

ஓர் அரசியல் கட்சிக்குக் கொள்கை, கோட்பாடு, லட்சியம் முக்கியமா... வெற்றி, பதவி, ஆட்சி முக்கியமா?


என்னது... கொள்கை, கோட்பாடு, லட்சியமா..? இன்றைய அரசியல்வாதிகளிடம் இதைப் பற்றியெல்லாம் கேட்டால், “அப்படின்னா என்ன?” என்று கேட்கிறார்கள்.

தாமஸ் மனோகரன், உழவர்கரை, புதுச்சேரி.

யாருடைய தேர்தல் அறிக்கை கதாநாயகன்?


தேர்தலில், மக்களைத் தவிர எதுவுமே, யாருமே கதாநாயகன் கிடையாது!

ரகுவரன், மதுரை.

கமல், ஹெலிகாப்டரில் சுற்றுவது விமர்சிக்கப்படுகிறதே?


மோடி, அமித் ஷா, ராகுல் இவ்வளவு ஏன்... நமச்சிவாயம் கூட புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு ஹெலிகாப்டரில் போகும்போது கமல்ஹாசன் மீது மட்டும் ஏன் இவ்வளவு விமர்சனங்கள்?

சுகன்யா, சென்னை.

அப்பாவுக்குப் பிறகு மகன் ஒரு தொழிலையோ, கடையையோ நிர்வகிப்பது சாதாரணம்தானே... வாரிசு அரசியலை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

தொழில், கடை என்ப தெல்லாம் ஒருவரின் சொந்த மூலதனத்தில் உருவாவது. ஒரு கட்சி அப்படி அல்ல. பலரின் உழைப்பு, வேர்வை, ரத்தம் என்று உரமிட்டு வளர்வது. அதை ஒரு குடும்பம் சுவீகரித்துக் கொள்வது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

அ.தி.மு.க அமைத்தால், எம்.ஜி.ஆர் ஆட்சி அமையுமா... ஜெயலலிதா ஆட்சி அமையுமா?


தேர்தல் முடிந்தால்எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படமெல்லாம் குடோனுக்குப் போய்விடும்!

@கே.வெங்கட்

இந்தத் தேர்தலில் முதன்முறை வாக்களிக்கப்போகும் வாக்காளர்களுக்கு உங்கள் அறிவுரை?


புதிதாக வேறென்ன இருக்கப்போகிறது... `அறம் சார்ந்து வாக்களியுங்கள்’ என்பதைத் தவிர!

@பி.மணி, வெள்ளக்கோவில்.

ஒரு கட்சியில், வேட்பாளரை அந்தக் கட்சியின் தலைமை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறது?


மக்களுக்கு அவர்கள் செய்த சேவைகள், தியாகங்கள், மக்களிடம் அவருக்கு இருக்கும் நன்மதிப்பு இதையெல்லாம் வைத்துத்தான்.

படிச்சுட்டு நல்லா சிரிச்சீங்களா மணி?

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

``பா.ஜ.க-வினர் தமிழைத் தூக்கிப் பிடிக்க, நான்தான் காரணம்’’ என்கிறாரே சீமான்?


‘சீமான்தான் பா.ஜ.க-வின் பி டீம்’ என்று சொல்லும் வாதத்துக்கு இவரே பாயின்ட் எடுத்துக் கொடுக்கிறாரே!

@V.பாலசுப்ரமணியன், மன்னார்குடி.

இதுவரை வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்க தேர்தல் கமிஷன் எடுத்த அதிகபட்ச நடவடிக்கை என்ன?


பொதுமக்களைப் பாடாய்ப் படுத்துவதைத் தவிர வேறொன்றும் இல்லை!

@மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

இன்றைய தேதியில், திருமங்கலம் சூத்திரத்தைத் தூக்கிச் சாப்பிட்டுவிடக்கூடிய ஃபார்முலாக்கள் பல வந்துவிட்டன என்று சொல்லலாம்தானே..?


பெல்பாட்டம் போய், பேகிஸ் போய், பென்சில் ஃபிட் வந்துடுச்சு பாஸ். ஆனால், இதில் பெருமைப்பட எதுவுமில்லை!

@நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.

சமூக வலைதளத்தின் ஆதிக்கம் யாருக்கு ஆப்பு வைக்கும்?


மொத்த மக்களில் 50% பேருக்கு மேல் இணையம் பயன்படுத்துவதே இல்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆகவே ஆப்போ காப்போ களத்தில் இருக்கும் மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்!

@குகன் நாதன்.ஆ, கல்பாக்கம்.

தொகுதி பெறுவதற்காகக் கொள்கையைச் சமரசம் செய்துகொண்ட தமிழக அரசியல் அமைப்புகள் எவையெவை??

இவ்வளவு கடினமாகவெல்லாம் கேள்வி கேட்காதீங்க குகன்... எது இல்லைனு கேட்டாக்கூட கொஞ்சம் யோசிக்கலாம்!

கழுகார் பதில்கள்

@காந்தி, திருச்சி.

வேட்பாளர்கள் பரோட்டா போடுவதும், தோசை சுடுவதும், டீ ஆற்றுவதும், பிரியாணி கிண்டுவதும் எனத் தொகுதியில் வலம்வருகிறார்களே?


நாடகம் என்று வந்த பிறகு பல்வேறு வேஷங்களைப் போட்டுத்தானே ஆக வேண்டும். என்னவொன்று... இந்தப் பிரசார களைப்பெல்லாம் தீர்வதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் ஓய்வெடுப்பார்களே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!