அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

தேனுக்கு மலரிடம் மன்றாடும் வண்டைப்போல, பெண்ணிடம் கெஞ்சி, கொஞ்சி இப்படி கன்வின்ஸ் செய்வது போன்ற வரிகளை எழுதுவதில் வெண்தாடி கில்லாடி!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தங்களுக்கு எடைக்கு எடையாக எதைக் கொடுத்தால் வாங்கிக்கொள்வீர்கள்?

புத்தகம்!

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

ஆகப்பெரிய அறியாமை எது..?

தான் அறியாமையில் இருக்கிறோம் என்பதையே அறியாமல் இருப்பது.

கி.சரஸ்வதி, ஈரோடு.

ஒரு நாள் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால்?

சாரிங்க... எனக்கு அவ்வளவு நல்லா வடை சுட வராது.

முருகன், நெல்லை.

பெரிய வலி எது?

நம்பிக்கை துரோகம்.

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

காதல்... போதையா, போதிமரமா?

காதலிக்கும்போது போதை... காதலில் தோற்றதும் போதிமரம்.

வாலி
வாலி

அமுதரசன், கோவை.

வாலியின் ‘சேட்டை’ மிகுந்த காதல் பாடல் வரிகள் ஏதாவது?

‘ஈரெட்டு வயதில் ஈரத்தாமரை

வாய்விட்டுச் சிரிக்காதா?

வாய்விட்டுச் சிரிக்கும் மாலை வேளையில்

தேன் சொட்டு தெறிக்காதா?

தேகத்தில் உனக்கு தேன்கூடு இருக்கு

தாகத்தை தணித்திட வா.

ஆனாலும் நீ காட்டும் வேகம்...

ஆத்தாடி ஆகாதம்மா!

பொன்வண்டு கூத்தாடும்போது...

பூச்செண்டு நோகாதம்மா!

போதும்... போதும்... போ!

தேனுக்கு மலரிடம் மன்றாடும் வண்டைப்போல, பெண்ணிடம் கெஞ்சி, கொஞ்சி இப்படி கன்வின்ஸ் செய்வது போன்ற வரிகளை எழுதுவதில் வெண்தாடி கில்லாடி!

சரஸ்வதி பத்மநாபன், சென்னை.

ஜி ஸ்கொயர் என்றால் என்ன?

உடனடியாக, அடுத்த பக்கத்துக்குச் செல்லவும்!

கி.சீனிவாசன், சிவகங்கை.

முறைகேடுகளைத் தட்டிக்கேட்ட வி.ஏ.ஓ வெட்டிக் கொல்லப்படுகிறார். சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறதே?

கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதிலும், கொள்ளைக்கு எதிராகப் போராடிக் குரல் கொடுக்கும் போராளிகள் வன்முறைக்கும் கொலைக்கும் ஆளாகும்போது ‘உச்’ கொட்டிவிட்டு, அடுத்த நாளே மறந்துவிடுவதிலும் இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். இவர்களுக்கு நம்மீதும் நம் வளங்கள்மீதும் கொஞ்சமும் அக்கறை இல்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி விதவிதமாக போஸ் கொடுத்ததைப் பார்த்தீரா?

அவரின் அரசியல் வரலாறு ஆரம்பித்த இடத்தில், அவர் கொடுத்த முதல் போஸே இன்னும் யாரும் கொடுக்காததுதானே பாஸ்?!

பெ.பச்சையப்பன், கம்பம்.

அரசியல் கேலிக்கூத்து எப்படியிருக்கும் கழுகாரே..?

சமீபகாலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோமே... இப்படித்தான் இருக்கும்.

கி.சரஸ்வதி, ஈரோடு.

லவ் டார்ச்சர் செய்பவர்களை என்ன செய்து திருத்தலாம்?

அட்வைஸ் டார்ச்சர் செய்யவேண்டியதுதான்.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

தொடுதிரை அலைபேசிகள்
தொடுதிரை அலைபேசிகள்

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி.

தொடுதிரை அலைபேசிகள், இன்றைய குழந்தைகளுக்கு உடல் நலமும் பலமும் தரும் விளையாட்டுகளைக் காலிசெய்துவிட்டனவே?

உண்மைதான். அலைபேசிகளை நாம் பயன்படுத்திய காலம் போய்... இப்போது நம்மை அலைபேசிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. உங்கள் குழந்தைகள் ஏதேனும் ஒரு விளையாட்டை அல்லது தற்காப்புக்கலையை அவசியம் கற்றுக்கொள்ளும்படி செய்யுங்கள்.தொடுதிரையில் ஒற்றை விரலால் எதையும் திறக்க முடியும், எதையும் நகர்த்த முடியும் என்கிற உளவியல், குழந்தைகளை ரொம்பவே பாதிக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். நிஜ வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல. இயன்ற அளவு அலைபேசியின் மெய்நிகர் உலகத்தில் குழந்தைகள் செலவழிக்கும் நேரத்தைக் குறைக்க முயலுங்கள்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!