Published:Updated:

கழுகார் பதில்கள்

குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
குஷ்பு

சொந்தக் கட்சியினர் தன் பேச்சைப் புரிந்துகொண்டு நடக்கிறார்களா என்பதைப் பிரதமர் உறுதிசெய்துகொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று!

கழுகார் பதில்கள்

சொந்தக் கட்சியினர் தன் பேச்சைப் புரிந்துகொண்டு நடக்கிறார்களா என்பதைப் பிரதமர் உறுதிசெய்துகொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று!

Published:Updated:
குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
குஷ்பு

இல.கண்ணன், நங்கவள்ளி.

“பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், தி.மு.க-வுடனான உறவை முறித்துக்கொள்ள காங்கிரஸ் தயாரா?” என்று குஷ்பு கேட்கிறாரே?

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தரப் பகைவர்களும் இல்லை என்பது குஷ்புவுக்குத் தெரியாதா என்ன!?

கழுகார் பதில்கள்

சீ.பாஸ்கர், கூடுவாஞ்சேரி.

அரசியல் என்பது சேவையா, தொழிலா?

இந்தக் கேள்வியை ஒவ்வோர் அரசியல்வாதியும் ஒரு முறையாவது தன் வாழ்வில் கேட்டுக்கொண்டால், நிறைய மாற்றங்கள் வரும்!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

நடிப்பைக் கற்றுக்கொள்ளும் இடம் சினிமாவா, அரசியலா?

‘சினிமாவைவிட, நடிப்பைக் கற்றுக்கொள்ள சிறந்த இடம் அரசியல்தான்’ என்கிறார்கள் நன்கு நடிப்புப் பயிற்சிபெற்றவர்கள்!

அரவிந்தன், மைசூர்.

நிறைய செல்வம் சேர்க்க வேண்டும் என்று கணக்கு வழக்கே இல்லாமல் சேர்த்துக்கொண்டே இருப்பவர்கள் எப்போதுதான் திருப்தியடைவார்கள்?

ஒரு மன்னர், துறவி ஒருவரிடம் “நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன்’’ என்று சொன்னாராம். “அப்படியா?” என்று கேட்ட துறவி, தன்னிடமுள்ள ஒரு மண்டையோட்டைத் திருப்பி, திருவோடு மாதிரி ஏந்தி, “இது நிறைய பொற்காசுகள் கொடு” என்று கேட்டார். மன்னன் பொற்காசுகளை அள்ளி அள்ளிக் கொட்டியபோதும் காசுகளை மண்டையோடு உள்வாங்கிக்கொண்டே இருந்ததேயொழிய திருவோடு நிறையவில்லை. மன்னன் புரியாமல் விழிக்க, துறவி சொன்னாராம்: “இது பேராசைக்காரனின் மண்டை ஓடு. நிறையவே நிறையாது!”

இல.கண்ணன், நங்கவள்ளி.

`தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும்’ என்றும், `தமிழில் பேச வேண்டும்’ என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியிருக்கிறாரே?

அது என்னமோ தெரியவில்லை... மத்தியிலுள்ள பலருக்கும் சமீபகாலமாகத் தமிழ்ப்பற்று அதிகமாகிக்கொண்டே வருகிறது... இந்த முறை ரயில்வே அமைச்சருக்கு!

கிடையூர் மாணிக்கம், சங்ககிரி.

``மோடி உரக்கப் பேசினால் அமெரிக்காவே கேட்கும்’’ என்கிறாரே அண்ணாமலை?

‘அவ்வளவு சத்தமாவா கேக்குது’ காமெடிதான் நினைவுக்கு வருகிறது. அவ்வளவு உரக்கப் பேச முடிகிறவரால், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு “ஓ மை காட்”தான் சொல்ல முடிகிறது!

ச.ராமதாசு சடையாண்டி, வானூர், விழுப்புரம்.

“2024 தேர்தல், கோபாலபுரம் குடும்பத்தின் கடைசித் தேர்தலாக இருக்கும்” என்ற தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் இந்தக் கருத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கருத்துக்கு பதில் சொல்லலாம். அவரது ஆசைக்கெல்லாமா பதில் சொல்ல முடியும்?!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

“மொழியின் அடிப்படையில் சர்ச்சைகளை உண்டாக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. சமுதாயத்தில் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்தி மொழிரீதியாகவோ, மதரீதியாகவோ அல்லது சாதிரீதியாகவோ தீய விளைவுகளை ஏற்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறாரே?

மே 21-ம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் நீமுச் என்ற ஊரில் ஒரு பெரியவரிடம் “நீ முஸ்லிம்தானே... உன் ஆதார் கார்டைக் காட்டு” என்று திரும்பத் திரும்ப கன்னத்தில் அறைகிறான் ஒருவன். வயதான காரணத்தாலும், நினைவுக் குழப்பத்தாலும் பேச முடியாமல் தவிக்கிற அவரை, மீண்டும் மீண்டும் ஒருவன் அறைகிற அந்தக் காணொலியைப் பார்க்கவே முடியவில்லை. அன்றிரவே அந்தப் பெரியவரின் சடலம் அந்தப் பகுதியில் கிடந்துள்ளது. தாக்கப்பட்ட பெரியவர் பன்வர்லால், ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை முஸ்லிம் என நினைத்துத் தாக்கியவன் அந்தப் பகுதியின் முன்னாள் பா.ஜ.க கவுன்சிலரின் கணவன்.

உங்கள் கேள்வியில் உள்ள ஸ்டேட்மென்ட், பாரதிய ஜனதா கட்சிப் பொறுப்பாளர்களுக்கான காணொலிக் கூட்டத்தில், மே 20-ம் தேதி அன்று மோடி பேசியது. சொந்தக் கட்சியினர் தன் பேச்சைப் புரிந்துகொண்டு நடக்கிறார்களா என்பதைப் பிரதமர் உறுதிசெய்துகொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று!

கழுகார் பதில்கள்

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி.

“தி.மு.க-வின் ஐந்து ஆண்டுக்கால ஆட்சி நிறைவடையும் போது மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் பொருளாதாரத்தைப்போல் தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின் உயர்த்துவார்” என்று அமைச்சர் சேகர் பாபு கூறியிருப்பது சாத்தியமா?

உயர்த்தினால் மகிழ்ச்சிதான். எப்படி என்பதைச் சொன்னால், நம்ப ஏதுவாக இருக்கும்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism