Published:Updated:

கழுகார் பதில்கள்

ஜெயலலிதா, சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா, சசிகலா

“சிந்திப்பதற்கான உன்னுடைய உரிமையைப் பத்திரப்படுத்து. நீ நினைப்பது தவறாகக்கூட இருக்கலாம். ஆனால்...

கழுகார் பதில்கள்

“சிந்திப்பதற்கான உன்னுடைய உரிமையைப் பத்திரப்படுத்து. நீ நினைப்பது தவறாகக்கூட இருக்கலாம். ஆனால்...

Published:Updated:
ஜெயலலிதா, சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா, சசிகலா

சோ.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

ஜெயலலிதா மீது உண்மையான அபிமானம் கொண்டவர்களால் சசிகலாவை ஏற்றுக்கொள்ள முடியாதுதானே?

இப்படித்தான் எம்.ஜி.ஆர் மீது உண்மையான அபிமானம் கொண்டவர்களால், ஜெயலலிதாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லப்பட்டது. ஏற்றுக்கொள்வதையும் எதிர்ப்பதையும், காலமும் மக்களும்தான் தீர்மானிப்பார்கள். ஆனால், சசிகலா இப்போது ஆன்மிகச் சுற்றுப்பயணம் அல்லவா சென்றுகொண்டிருக்கிறார். அவரைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்?

கழுகார் பதில்கள்

கௌசிக் சௌந்தர், அரியலூர்.

சமீபத்தில் வாசித்த சுவாரஸ்யமான புத்தகம்?

பிரதமராக இருந்தபோது, 1947 அக்டோபர் 15-ல் ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் இரண்டு கடிதங்கள் மாநில முதலமைச்சர்களுக்கு அனுப்புவதை வழக்கமாகக்கொண்டிருந்தார் நேரு. ஒவ்வொரு மாதமும் 1, 15 ஆகிய தேதிகளில் மிகச் சரியாக அனுப்பியும் இருக்கிறார். தன் மறைவுக்குச் சில மாதங்கள் முன்புவரை இந்தப் பணியைச் செய்தார். இவற்றை மாதவ் கோஸ்லா தொகுத்து புத்தகமாகவே வெளியிட்டிருக்கிறார்.

நா. வீரபாண்டியன் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தை வாசித்தால், ஒவ்வொரு மாநிலத்தையும் அவர் எப்படி உற்று நோக்கி, பல்வேறு விஷயங்களை அந்த மாநில முதல்வர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளலாம்.

கழுகார் பதில்கள்

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

“பயங்கரவாதம் என்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறாரே?

அவர் தெரிவித்திருக்கும் கருத்து சரிதான். அதேசமயம் ‘மனித உரிமை மீறல் என்பது மிகப்பெரிய பயங்கரவாதம்’ என்பதை அவருடைய தொண்டர்களுக்கும் அவர் சொல்லலாம்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு இல்லாமல், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படாது’ என்ற ஏ.கே.அந்தோணியின் பேச்சு?

அதை அவரது கட்சியினரே உணர்ந்துகொண்டார்களா என்பது தெரியவில்லையே... யாராவது பிடித்து இழுத்தால் மட்டுமே ஓடும் தேராக நின்றுகொண்டிருக்கிறதே அக்கட்சி!

குணசீலன், கிருஷ்ணகிரி.

மனிதனால் இலகுவாகச் செய்யக்கூடிய செயல், ஆனால் செய்யாமல் இருக்கிறார்களே என்று நீங்கள் நினைப்பது எது?

சிந்திப்பது. உலகின் முதன் பெண் கணிதவியலாளரும் தத்துவவியலாளருமான ஹைபாஷியா-வின் ஒரு மேற்கோள் உண்டு. “சிந்திப்பதற்கான உன்னுடைய உரிமையைப் பத்திரப்படுத்து. நீ நினைப்பது தவறாகக்கூட இருக்கலாம். ஆனால், சிந்திக்காமலேயே இருப்பதைவிட, தவறாகச் சிந்திப்பது சிறந்தது!’’

கழுகார் பதில்கள்

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி.

“வன்முறையால் இங்கு யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. வன்முறையை விரும்பும் சமுதாயம் தற்போது தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளாரே ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்?

உண்மைதான். தெளிவாகச் சொல்லியிருக்கிறார். புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி!

கழுகார் பதில்கள்

கிருஷ்ணா, தி.நகர்.

எவ்வளவுதான் தர்க்கபூர்வமான காரணங்கள் சொல்லப்பட்டாலும், போர் என்பது அபத்தம்தான் இல்லையா?

பிரெஞ்சு கவிஞர் ழாக் ப்ரெவெர் எழுதிய கவிதை இதற்கான சுவாரஸ்யமான பதிலாக இருக்கும்:

காவியம்

முடிவின்றி சென்றுகொண்டிருக்கிறது

அரசரின் கட்டைவண்டி

ஒரு கையால் நடக்கும் ஊனமுற்றவன்

ஓட்டிச் செல்கிறான் அதை

வெண் உறை அணிந்திருக்கிறது ஒரு கை

நுகத்தடியைப் பற்றியிருக்கிறது மறு கை

கால்களிரண்டை அவன் இழந்தது வரலாறு

என்றோ நிகழ்ந்துவிட்டது அது

கால்கள் அங்கேயே

உலவிக்கொண்டிருக்கின்றன

வரலாற்றில்தான்

ஒவ்வொரு காலும் அதனதன் போக்கில்

நேருக்கு நேர் அவை சந்திக்கும்போது

ஒன்றையொன்று உதைத்துக்கொள்கின்றன

போர் என்றால் அப்படித்தான்

வேறென்ன செய்யச் சொல்கிறீர்கள்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism