Published:Updated:

கழுகார் பதில்கள்

கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்

உங்கள் ஆசையை குஷ்பு நினைத்தால் மட்டும் நிறைவேற்ற முடியாது.

கழுகார் பதில்கள்

உங்கள் ஆசையை குஷ்பு நினைத்தால் மட்டும் நிறைவேற்ற முடியாது.

Published:Updated:
கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

“காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பதவி சுகத்தை அனுபவித்த பிறகு கட்சி மாறுவது மோசமான செயல்” என்ற சிவசேனாவின் குற்றச்சாட்டு?

இப்படி எல்லாரும் புத்திமதி சொல்ற மாதிரி ஆயிட்டியே குமாரு!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

அரசு கடனில் உள்ளபோது, அரசியல் கட்சிகள் கடன் இல்லாமல் லாபத்தில் இயங்குகின்றனவே எப்படி?

அரசு பொதுச்சொத்து. அரசியல் கட்சிகள் தனிச்சொத்து. புரிகிறதுதானே..?

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

அரசியல்வாதிகளின் ஏற்ற இறக்கம் எதைப் பொறுத்து அமையும்?

கொடுக்கல் வாங்கலைப் பொறுத்து!

தே.மாதவராஜ், ராமநாதபுரம், கோவை.

தேர்தல் தோல்விகளை மறைக்கவா ஐந்தாவது `பிக் பாஸ்’?

அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்... தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே அவர் `பிக் பாஸை’த் தொகுத்திருக்கிறாரே. அரசியல் அவரது ஆர்வம். நடிப்பு அவரது தொழில்!

கழுகார் பதில்கள்

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

நடிகை குஷ்புவை ஒரு எம்.எல்.ஏ-வாக அல்லது ஒரு எம்.பி-யாகப் பார்க்க ஆசை. இந்த ரசிகனின் ஆசையை நிறைவேற்றுவாரா?

உங்கள் ஆசையை குஷ்பு நினைத்தால் மட்டும் நிறைவேற்ற முடியாது. அதற்கு மக்கள் மனதுவைக்க வேண்டும்!

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

‘பெட்ரோல் விலையில் 35 ரூபாயைக் குறைக்க மத்திய அரசு தயார்’ என்று சொல்லியிருக்கிறாரே தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை?

வழக்கமா ஏதாவது சொல்லிட்டு ‘அந்த அர்த்தத்துல சொல்லலை’னு மறுப்பு கொடுப்பாரு. இந்த விஷயத்துல எப்போ, என்ன சொல்லப் போறாரோ?

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

‘அடுத்து நம்முடைய ஆட்சி அமைவதுதான் நியாயம், நீதி. அனைவரும் தயாராக இருங்கள்’ என்று தன் கட்சித் தொண்டர்களிடம் கூறியிருக்கிறாரே அன்புமணி?

அவருக்கும் பசிக்கும்ல!

இல.கண்ணன், நங்கவள்ளி.

“விமர்சனங்களை வரவேற்கிறேன், அதையே அதிகம் விரும்புகிறேன். ஆனால் இப்போது விமர்சனங்கள் செய்ய ஆளில்லை. குற்றச்சாட்டு கூறுபவர்களே அதிகம்” என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி..?

குற்றச்சாட்டு என்பதும் ஒருவகை விமர்சனம்தான். அவற்றை எதிர்கொண்டு, குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொன்னால், குறைகூறுதல் குறையுமே!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை மக்கள் சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்களா?

மக்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினால்தான், அரசியல்வாதிகளும் வாக்குறுதியை சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள்!

மாணிக்கம், திருப்பூர்.

‘உங்களில் யார் அடுத்த ஜெயலலிதா?’ என்று ஒரு போட்டிவைத்தால், யாரெல்லாம் போட்டிக்கு வர வாய்ப்பிருக்கிறது?

ஏன் உங்களுக்கு இப்படி ஒரு விபரீத ஆசை!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

பா.ஜெயப்பிரகாஷ், தேனி.

“இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடைவேன்” என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரித்திருப்பது குறித்து..?

“பன்முகத்தன்மைதான் இந்திய ஜனநாயகத்தின் பலம்” என்று அமெரிக்காவில் முழங்கிய மோடியின் காதுல இந்தச் செய்தி விழுந்தா என்ன ஆகும்... பயம்மா இருக்குல்ல?!

கழுகார் பதில்கள்

டி.ஜெய்சிங், கோவை.

‘பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும்’ என்ற அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆரூடம் பற்றி..?

அவரோட ஆசையை ஆரூடமா சொல்றாரு. விடுங்க பாவம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!