Published:Updated:

கழுகார் பதில்கள்

கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்

மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் சட்டமன்றத்தில், மக்கள் பிரச்னைகளைத் தவிர தன்னைத் துதிபாடுதல் வேண்டாம் என்ற முதல்வரின் அறிவிப்பு சரிதான்

கழுகார் பதில்கள்

மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் சட்டமன்றத்தில், மக்கள் பிரச்னைகளைத் தவிர தன்னைத் துதிபாடுதல் வேண்டாம் என்ற முதல்வரின் அறிவிப்பு சரிதான்

Published:Updated:
கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

கொடநாடு விவகாரம் குறித்துக் கவலைப்படாத அ.தி.மு.க பிரபலம் யார்?

கொடநாட்டிலே பரபரப்பு... சட்டமன்றத்திலே விவாத நெருப்பு... நடுவிலே ஒருவரின் சிரிப்பு!

ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்.

தேர்தல் அறிக்கையில் ‘வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்’ என்று சொன்ன அ.தி.மு.க., வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென்ற தி.மு.க-வின் தீர்மானத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தது எதனால்?

“அதான் தேர்தல் முடிஞ்சிருச்சுல்ல!” - அப்படிங்கற அ.தி.மு.க மைண்ட் வாய்ஸ் உங்களுக்குக் கேட்கலியா?

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்-2.

சட்டசபையில் தன்னைப் புகழ்ந்துபேசும் எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் பேச்சு?

மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் சட்டமன்றத்தில், மக்கள் பிரச்னைகளைத் தவிர தன்னைத் துதிபாடுதல் வேண்டாம் என்ற முதல்வரின் அறிவிப்பு சரிதான். அந்த அறிவிப்பு, உதயநிதியைப் புகழ்ந்து பேசுகிறவர்களுக்கும் சேர்த்துத்தான் என்பதைக் கூடுதலாகத் தெளிவுபடுத்தினால்தான் பலருக்கும் புரியும்போல.

ராம் சண்முகம், கன்னியாகுமரி.

ஆட்சி மாற்றத்துக்கு முன் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு சிலர் ஆட்சி மாறியதும், அமைதி காப்பதற்கு என்ன காரணம்?

கரன்ட் கட் ஆகிருச்சுன்னா, லைட் அணையத்தானே செய்யும்!

கழுகார் பதில்கள்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘`எந்த வேகத்தில் வீழ்ந்தோமோ அந்த வேகத்தில் எழுவோம்’’ என்று கமல் கூறியுள்ளாரே?

`விழுவதில் எந்த அவமானமும் இல்லை. எழுவதில்தான் வெற்றி இருக்கிறது’ என்கிறது ஒரு பொன்மொழி. அரசியல் களத்தில் விழாத கட்சிகள் இல்லை என்பது வரலாறு. வீழ்ந்ததைப் புரிந்து

கொள்வதே ஒரு நல்ல பக்குவத்துக்கான அடையாளம்தான்!

கழுகார் பதில்கள்

பாலசுப்ரமணியன், சூளைமேடு.

யார் ஞானி?

பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வன் து செந்த் - எக்சுபெரி எழுதிய ‘குட்டி இளவரசன்’ படித்திருக்கிறீர்களா? முக்கியமான ஒரு நூல். அதில் வரும் அரசன் ஒருவன், குட்டி இளவரசனிடம் இவ்வாறு சொல்கிறான்:

“நீயே உனக்கு நீதி வழங்கிக்கொள். அதுதான் மிகக் கடினம். மற்றவர்களுக்கு நீதி வழங்குவதைக் காட்டிலும், தனக்குத் தானே நீதி வழங்கிக்கொள்வது மிகவும் கடினம். நீயே உனக்குச் சரியானபடி நீதி வழங்கிக்கொள்வதில் வெற்றி கண்டால், நீ ஓர் உண்மையான ஞானி”

கழுகார் பதில்கள்

ஜெயகுமார், திருப்பத்தூர்.

ஆஸ்திரேலியாவில் தமிழர் பெயரில் வீதி... கேள்விப்பட்டீர்களா கழுகாரே?

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்பர்ன் நகரத்தின் தெரு ஒன்றுக்கு, ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் பெயர் வைக்கப்படவிருக்கிறது. அங்கு அமையவுள்ள புதிய குடியுருப்புப் பகுதியில் ஒரு தெரு, ‘கவிக்கோ ஸ்ட்ரீட்’ (Kavikko Street) என்று குறிப்பிடப்படும் என அறிவித்துள்ளனர். இதில் பாராட்டப்படவேண்டியவர், சிங்கப்பூர் தொழிலதிபர் எம்.ஏ.முஸ்தபா. அவர்தான் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, ஆஸ்திரேலிய அரசிடம் முறையாக விண்ணப்பித்து இந்தப் பெயர்வைக்கக் காரணமாக இருந்திருக்கிறார்.

கழுகார் பதில்கள்

மதிவாணன், தூத்துக்குடி.

சமீபத்தில் யாருமே உளறவே இல்லையா கழுகாரே?

நம் நாட்டு அரசியலில் யாரும் உளறாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். அஸ்ஸாம் பா.ஜ.க அமைச்சர் சந்திரமோகன் பட்டோவரி, சமீபத்தில் சொன்னதைக் கேட்டால் நமக்குத் தலைசுற்றும். “யாருக்குத் தொற்று ஏற்பட வேண்டும், யாருக்கு ஏற்படக் கூடாது, யார் இறக்க வேண்டும் என இயற்கை முடிவுசெய்துவிட்டது. இதெல்லாம் கடவுளின் சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் நடக்கிறது. கோவிட் வைரஸை அந்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் அனுப்பியிருக்கிறது” என்று கூறியிருக்கிறார் சந்திரமோகன். ம்ஹூம்... என்னத்தச் சொல்ல!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!