Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

கற்காலத்துக்கே கூட்டிட்டுப் போய் பச்சையாவே சாப்பிடுற நிலைமைக்கு நம்மளைக் கொண்டு போயிடுவாங்கபோல!

கழுகார் பதில்கள்

கற்காலத்துக்கே கூட்டிட்டுப் போய் பச்சையாவே சாப்பிடுற நிலைமைக்கு நம்மளைக் கொண்டு போயிடுவாங்கபோல!

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

@சரோஜா பாலசுப்ரமணியன்

பன்னீர்செல்வத்தின் மனைவி இறந்ததை அடுத்து, அவரைச் சந்தித்து சசிகலா ஆறுதல் கூறியிருக்கிறாரே, அரசியலில் (அ.தி.மு.க-வில்) அதிரடி மாற்றம் ஏற்படுமா?

எல்லாத்தையும் அரசியலாவே பார்த்தா எப்படிங்க சரோஜா... சக மனுஷனுக்கு ஒரு துன்பம் வர்றப்ப ஆறுதல் சொல்றதுதானே பண்பாடு... ஆனா, நம்ம ஊர்கள்ல துக்க வீட்லதான் பல சுபகாரியங்களுக்கான அடித்தளமும் போடப்படும்னு சொல்வாங்க!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் (மா).

``பிரதமர் ஆகும் தகுதியே மு.க.ஸ்டாலினுக்கு உண்டு’’ என்கிறாரே அமைச்சர் கே.என்.நேரு?

சொல்லித்தானே ஆகணும்!

இல.கண்ணன், நங்கவள்ளி.

“கொரோனாவால் பாதித்த பொருளாதாரத்தை உயிர்ப்பித்துவருகிறோம்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது பற்றி?

கொரோனா பாவம்... இன்னும் எத்தனை பழியைத்தான் தாங்கப்போகுதோ!

கழுகார் பதில்கள்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

கழுகாரே, ‘விறகு அடுப்புக்கே மாறிடலாம்னு’ நம்மை நினைக்கவைத்துவிடுவார்கள் போலிருக்கே?

என்னது... விறகடுப்பா... விலை ஏர்ற வேகத்தைப் பார்த்தா கற்காலத்துக்கே கூட்டிட்டுப் போய் பச்சையாவே சாப்பிடுற நிலைமைக்கு நம்மளைக் கொண்டு போயிடுவாங்கபோல!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

சிரிக்கச் சிரிக்கப் பேசும் அரசியல்வாதிகளின் மத்தியில், சிந்திக்குமாறு பேசும் அரசியல்வாதிகள் யாராவது உண்டா?

பல அரசியல்வாதிகள் பேசறப்ப நாம சிந்திக்க வேண்டியதா இருக்கு. என்ன சிந்திக்கறோம்கறதுதான் கேள்வி!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘தியாகி’ என்று பெயர் பெற என்ன செய்ய வேண்டும் கழுகாரே?

இப்பல்லாம் தியாகி ஆகறதுக்கு தியாகம் செய்ய வேண்டாம்... துரோகம் செய்யாம இருந்தாலே தியாகி ஆக்கிடுறாங்க!

சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை (மா).

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு, மதுரை பறக்கும் பாலம் போன்ற எந்தச் சீர்கேட்டுக்கும் அதிகாரிகள் என்ற அம்புகள்தானே முதல் பலிகடா ஆகிறார்கள்?

ஆட்சியாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி வந்தாலும், தொடர்ந்து அரசு இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருப்பது படித்த அதிகாரிகள்தான். ஆட்சியாளர்கள் தவறு செய்ய முற்பட்டாலோ, தூண்டினாலோ அதைத் தடுத்து நல்ல நிர்வாகத்தைத் தருவதை விடுத்து, தவறுக்கு உடந்தையாக இருந்ததற்கான பலனே இது. ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்’ என்று பாரதி சொன்னது நினைவிருக்கிறதுதானே!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

பெரும் சமூக மக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு நமது முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவிக்காதது சரியா?

இந்த ரெண்டு பண்டிகையுமே இன்னும் வரவே இல்லையே... அதுக்குள்ள ‘தெரிவிக்கலை’னு முடிவுக்கு வந்துட்டீங்க. கொஞ்சம் பொறுத்துப் பார்த்துட்டு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம்!

கழுகார் பதில்கள்

சண்முகசுந்தரம், குளச்சல்.

பேசுபவர்கள் முக்கியமா... கேட்பவர்களா?

கேட்கும் காதுகளால்தான் பேசும் உதடுகள் அழகாகின்றன. வடமாநிலங்களில் நாட்டுப்புறக் கலைகளின்போது, ‘கதைசொல்லி’ சொல்வதை ‘உம்’ கொட்டிக் கேட்பவர்களுக்குக் கதைசொல்லிக்கு நிகரான சன்மானமும் மரியாதையும் கிடைக்கும். சில இடங்களில் கதைசொல்லியைவிடவும் ‘உம்’ கொட்டுபவர்களை மக்கள் பரிசுகளால் மகிழ்விப்பார்கள். அந்த ‘உம்’ கொட்டுபவர், தங்களில் ஒருவர் என்று மக்கள் நினைப்பதுதான் காரணம். சில மனப் பிரச்னைகளை பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, காதுகொடுத்துக் கேட்டாலே போதும். சம்பந்தப்பட்டவர்களுக்கு ஐம்பது சதவிகிதம் மனரீதியாகச் சரியாகிவிடும் என்பார்கள் உளவியலாளர்கள்.

சொன்னா கேளுங்க பாஸ்..!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism