Published:Updated:

கிளப்பிவிட்ட இ.பி.எஸ் - எரிச்சலான ஓ.பி.எஸ் முதல்... கடுகடுத்த ஆ.ராசா வரை! கழுகார் அப்டேட்ஸ்...

கழுகார்

பொதுக்குழுவில் வெடிக்கப்போகும் பூகம்பம்! | மா.செ-க்கள் இடையே கோஷ்டி சண்டை... | அலைக்கழித்த அமைச்சர்கள்... அதிகாரிகள்! | கண் சிவக்கும் எடப்பாடி தரப்பு! | முதல்வரைப் பார்க்கவிடாத அமைச்சர்... | “ஏம்ப்பா எங்கிட்ட வர்றீங்க..?”

கிளப்பிவிட்ட இ.பி.எஸ் - எரிச்சலான ஓ.பி.எஸ் முதல்... கடுகடுத்த ஆ.ராசா வரை! கழுகார் அப்டேட்ஸ்...

பொதுக்குழுவில் வெடிக்கப்போகும் பூகம்பம்! | மா.செ-க்கள் இடையே கோஷ்டி சண்டை... | அலைக்கழித்த அமைச்சர்கள்... அதிகாரிகள்! | கண் சிவக்கும் எடப்பாடி தரப்பு! | முதல்வரைப் பார்க்கவிடாத அமைச்சர்... | “ஏம்ப்பா எங்கிட்ட வர்றீங்க..?”

Published:Updated:
கழுகார்
கிளப்பிவிட்ட இ.பி.எஸ்... எரிச்சலான ஓ.பி.எஸ்...
பொதுக்குழுவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

ஜூன் 23-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. கட்சியின் இரட்டைத் தலைமைகளான ஓ.பி.எஸ்-ஸும் இ.பி.எஸ்-ஸும் தங்களது ஆதரவாளர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசிவருகிறார்கள். இந்தமுறை ஒற்றைத்தலைமை கோஷம் வலுவாக எழும் என்கிறார்கள். ஆனால், ‘இப்படியொரு பேச்சைக் கிளப்பிவிட்டதே இ.பி.எஸ்-தான்’ என்கிறது எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள்.

எடப்பாடி... பன்னீர்!
எடப்பாடி... பன்னீர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாங்கள்தான்எதிர்க்கட்சி என்று பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டு வருவதற்கு அ.தி.மு.க வலுவான எதிர்ப்பைக் காட்ட வேண்டும். தி.மு.க-வைக் கடுமையாக எதிர்த்தால்தான், தொண்டர்கள், நிர்வாகிகள் உங்கள் பக்கம் வந்து, தலைமையை ஏற்பார்கள் என்று மூத்த நிர்வாகிகள் இ.பி.எஸுக்கு அட்வைஸ் செய்துள்ளனர். இதையடுத்து, கூடுதல் உஷாராக ஓ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகளையும் நேரில், தொலைபேசியில் தொடர்புகொள்ளும் இ.பி.எஸ்., “என்ன... கட்சி வேலைகள் எப்படிப் போகுது?’’ என்று அன்பொழுக விசாரித்து வருகிறாராம். அதேபோல, செய்தியாளர்களையும் தினமும் சந்தித்து, தி.மு.க அரசுமீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார். இதுதவிர, இ.பி.எஸ் பேட்டிகளை குறு வீடியோக்களாக சமூக வலைதளத்தில் பதிவுசெய்யவும் சிலரை சேலத்தில் பணியமர்த்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது இ.பி.எஸ் தரப்பு. இதெல்லாம் ஓ.பி.எஸ் தரப்பை ரொம்பவே எரிச்சலாக்கியிருக்கிறது என்பதால், நிச்சயம் பொதுக்குழுவில் பூகம்பம் வெடிக்கும் என்று விமர்சகர்களும் கணிக்கிறார்கள்!

பா.ம.க-வின் இளைஞரணித் தலைவர் யார்?

அன்புமணி பா.ம.க-வின் தலைவராகப் பொறுப்பேற்றதை அடுத்து, அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் பதவி காலியாக இருக்கிறது. இந்தப் பதவிக்கு பா.ம.க-வின் துணை அமைப்புகளில் ஒன்றான பசுமைத் தாயகத்தின் செயலாளராகவும் மருத்துவர் ராமதாஸின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவருமான இரா.அருளை நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அன்புமணி
அன்புமணி

அதேவேளை, ‘இளைஞரணித் தலைவர் பதவியை ஒருவருக்கு மட்டும் அளித்து அதை வலிமையான பதவியாகக் கட்டமைக்காமல், கூடவே இரண்டு மூன்று பேரையும் இளைஞரணித் தலைவர் ஆக்கிவிடுவதன் மூலம், அன்புமணியை மட்டும் கட்சியில் வலிமையானவராகக் கட்டமைக்கலாம் என்கிற திட்டமும் பா.ம.க நிறுவனர் ராமதாஸிடம் இருக்கிறது என்கிறார்கள். அப்படி மூன்று பேரை நியமிப்பதாக இருந்தாலும் அந்த லிஸ்ட்டிலும் கண்டிப்பாக அருள் இருப்பார் என்கிறார்கள் மாங்கனி வட்டாரத்தில்!

மா.செ-க்கள் இடையே கோஷ்டி சண்டை...
ஆள் பிடிக்கும் வேலையில் நிர்வாகிகள்!

ராமநாதபுரத்தில் தி.மு.க உட்கட்சித் தேர்தல் பஞ்சாயத்தில், தற்போதைய மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கமும், அமைச்சர் ராஜகண்ணப்பனும் தங்களுடைய ஆதரவாளர்களை நியமிப்பதில் மல்லுக்கட்டி வருகின்றனர். இதில், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், ‘தனக்கு ஆதரவாக இருந்த ஒன்றியச் செயலாளர்களே தனக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டதால்தான் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை’ என நினைத்து அவருடைய ஆதரவு ஒன்றியச் செயலாளர்களையே ஒதுக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பு, ஒதுக்கப்பட்ட ஒ.செ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இப்படி ராமநாதபுரத்தைக் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரித்து மாவட்டத்தைத் தன்னுடைய முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு ராஜகண்ணப்பன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில் ராஜகண்ணப்பன் மீது அதிருப்தியிலிருந்து வரும் அவரது ஆதரவாளர்களைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு தன்னுடைய அணியைப் பலப்படுத்தும் பணியில் காதர்பாட்ஷாவும் ஈடுபட்டு வருகிறார். இருவருக்கும் இடையேயான இந்த உள்ளடி அரசியலில், ராமநாதபுரம் தி.மு.க உட்கட்சித் தேர்தல் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அலைக்கழித்த அமைச்சர்கள்... அதிகாரிகள்!

கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றில் 7 பேர் உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியது. இதையடுத்து இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் அறிவித்த இழப்பீட்டுக்கான காசோலையை வழங்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோர் ‘உயிரிழந்தவர்களின் பெற்றோர்களை அதிகாரிகள் மூலம் அழைத்துவரும்படி’ கூறியிருக்கிறார்கள்.

கெடிலம் ஆறு
கெடிலம் ஆறு

பிள்ளைகளை இழந்து கதறிக்கொண்டிருந்த பெற்றோர்களை அழைத்து வந்த அதிகாரிகள், அமைச்சர்கள் காசோலையை வழங்குவதுபோல போட்டோ ஷூட் நடத்தி முடித்திருக்கிறார்கள். “இப்படியான உயிரிழப்புகளின்போது, அரசின் உதவிகளை நேரில் சென்று வழங்குவதுதான் சரியான நடைமுறை. ஆனால், இவர்களின் விளம்பரத்திற்காக, முதல்வருக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில், பாதிக்கப்பட்டவர்களையே அலைக்கழித்திருக்கிறார்கள்” என்று உடன்பிறப்புகளே முகம் சுழிக்கிறார்கள்!

நிலைப்பாட்டை மாற்றிய வைத்தி...
கண் சிவக்கும் எடப்பாடி தரப்பு!

பட்டுக்கோட்டையில் ஜூன் 9-ம் தேதி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் பங்கேற்ற திருமண விழாவில் வைத்திலிங்கமும் பங்கேற்றார். அங்கிருந்து தன் தலைமையில் ஒரத்தநாட்டில் நடைபெறவிருந்த திருமணத்துக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்துச் சென்ற வைத்திலிங்கம், ஓ.பி.எஸ் தலைமையிலேயே திருமணத்தையும் நடத்திவைத்துள்ளார்.

ஓ.பி.எஸ், வைத்திலிங்கம்
ஓ.பி.எஸ், வைத்திலிங்கம்

சமீபகாலமாக வைத்திலிங்கம் ஓ.பி.எஸ் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக்கொள்வதுடன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெளிப்படையாகவே செயல்படுவதாகவும் அ.தி.மு.க-வினர் பேசிவருகின்றனர். வைத்திலிங்கமோ, இந்தப் பேச்சை எதிர்க்கவுமில்லை... மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்தச் சூழலில்தான் “ஆமாம்... நான் ஓ.பி.எஸ் ஆதரவாளர்தான் என வெளிப்படையாகக் காட்டும்படி வைத்திலிங்கம் வேண்டுமென்றே நடந்துகொண்டிருக்கிறார்” என்று எடப்பாடி தரப்பினர், கடும் கோபத்தில் கண்சிவக்கிறார்கள்!

முதல்வரைப் பார்க்கவிடாத அமைச்சர்...
கோட்டைக்குச் கிளம்பும் பேருந்து!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உட்கட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களையே முன்னிருத்துகிறார். சீனியர்கள், கட்சிக்காரர்களுக்கு மதிப்பில்லை. தன்னிச்சையாகச் செயல்படுகிறார்’ என்று அமைச்சர் ரகுபதி மீது வரிசையாகப் புகார் சொல்லிக் கொந்தளிக்கிறார்கள் உடன்பிறப்புகள். அறந்தாங்கியில் தனது ஆதரவாளரை பதவிக்குக் கொண்டுவருவதற்காக, ஓட்டுப்போடும் அதிகாரத்திலிருந்த 5 நிர்வாகிகளையே ரகுபதி மாற்றிவிட்டாராம்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

இதையெல்லாம், மாவட்டத்துக்கு வரும் முதலமைச்சரிடம் விவரிப்பதற்காக அமைச்சருக்கு எதிரான உடன்பிறப்புகள் ரோஜா இல்லத்தில், மனுவோடு காத்திருந்தனர். ஆனால், அவர்களை முதலமைச்சர் அருகே நெருங்கவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது ரகுபதி தரப்பு. அதேநேரத்தில், அமைச்சர் ரகுபதி தனது தீவிர ஆதரவாளர்களை மட்டும் முதலமைச்சரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதைக் கண்டுக் கொதித்துப்போன உடன்பிறப்புகள், “புதுக்கோட்டையில் பார்க்க முடியவில்லையென்றால் என்ன... சென்னைக் கோட்டையில் போய் முதல்வரைப் பார்த்துக்கொள்கிறோம்’’ என்று கடுப்பாய் கலைந்து சென்றிருக்கின்றனர். விரைவில், புதுக்கோட்டை டூ கோட்டைக்கு பேருந்து வந்துசேரும் என்கிறது கட்சி வட்டாரம்!

“ஏம்ப்பா எங்கிட்ட வர்றீங்க..?”
கடுகடுத்த ஆ.ராசா!

ஆ.ராசா ஆதரவு மாவட்டச் செயலாளரான குன்னம் ராஜேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ ராஜ்குமார் மற்றும் ஒன்றியச் செயலாளர்களில் ஒருசிலர் எனப் பலரும் அமைச்சர் சிவசங்கரை மறைமுகமாகச் சந்தித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது ராசாவுக்குத் தெரியவர, இவர்கள்மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

ஆ.ராசா
ஆ.ராசா

இந்த நிலையில், கடந்த வாரம் தன்னைச் சந்திக்க வந்த தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் “ஏம்ப்பா எங்கிட்ட வர்றீங்க... உங்களுக்குத்தான் அமைச்சர் இருக்கிறாரே... அவரைப் போய் பாருங்க. அதுக்கும் மேல எதுவும் செய்யணும்னா திருச்சியில ஒருத்தர் இருக்காருல்ல... அவரைப் போய்ப் பாருங்க” எனக் கடுகடுத்திருக்கிறார். “இவர்கள் இருவருக்குமிடையிலான ஈகோ பிரச்னையால், எங்களுக்கு எதுவும் செய்துகொடுக்க மாட்டேன் என்கிறார் ராசா” என்று வெளிப்படையாகவே புலம்பும் உடன்பிறப்புகள், ராசா அணிக்குச் செல்வதா அல்லது அமைச்சர் சிவசங்கர் அணிக்குச் செல்வதா எனக் குழம்பிக்கிடக்கிறார்களாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism