Published:Updated:

பாரிவேந்தரின் மகன் பாசம் முதல் அவசரப்பட்ட அமைச்சர்கள் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்

அலைபேசியில் அழைத்தார் கழுகார். ``வணக்கம். வாட்ஸ்அப்பை செக் செய்யவும்” என்றார். திறந்து பார்த்தோம். கழுகாரின் தகவல்கள் கோடையிலும் கொட்டியது!

பாரிவேந்தரின் மகன் பாசம் முதல் அவசரப்பட்ட அமைச்சர்கள் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

அலைபேசியில் அழைத்தார் கழுகார். ``வணக்கம். வாட்ஸ்அப்பை செக் செய்யவும்” என்றார். திறந்து பார்த்தோம். கழுகாரின் தகவல்கள் கோடையிலும் கொட்டியது!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
சிக்கலில் தொழிலதிபர்...
கைவிட்ட அமைச்சர்

திருநெல்வேலி தட்சண மாற நாடார் சங்கத்தில், முன்னாள் நிர்வாகிகள் சிலரின் மீது மோசடிப் புகார் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக, மே 4-ம் தேதி தண்டபத்துவில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், முந்தைய நிர்வாகிகள்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரின் சகோதரர் வசமாகச் சிக்கியிருக்கிறார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரத்த உறவுமீது சிக்கல் இறுகுவது தெரிந்தவுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைச் சந்தித்த அந்தத் தொழிலதிபர், 'எப்படியாவது காப்பாத்துங்க. உங்க வம்பு தும்புக்கே வர மாட்டோம்' எனச் சரண்டராகிவிட்டாராம். மையமாகப் புன்னகைத்ததோடு சரி, அனிதா எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்... ஒரு மரமானாலும்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மதுரை டீன் விவகாரத்தில் அவசரப்பட்ட அமைச்சர்கள்...

சம்ஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தால் மாற்றப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலுவுக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட நற்பெயர். அ.தி.மு.க., பா.ஜ.க., அரசு மருத்துவர் சங்கம், மருத்துவ மாணவர் பேரவையினரின் கோரிக்கை என்பதைத் தாண்டி, மக்களும் இதற்காக அணி திரளக்கூடும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையாலேயே அவரின் இடமாற்றம் திரும்பப் பெறப்பட்டதாம்.

இந்த விஷயத்தில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜனும் மா.சுப்பிரமணியனும் இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் என்று உள்ளூர் தி.மு.க-வினரே பேசத் தொடங்கிவிட்டார்கள். அது மட்டுமல்லாமல் பிரச்னையின் மையமான தேசிய மருத்துவக் கல்வி அமைப்பு சிபாரிசு செய்துள்ள சம்ஸ்கிருத உறுதிமொழியை நீக்க தமிழக அரசு வலியுறுத்தாததும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணே, உணர்ச்சிவசப்படாதீங்கண்ணே... உணர்ச்சிவசப்படாதீங்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`இந்தக் கட்சி விளங்காது!’
சாபமிட்ட நிர்வாகி...

தி.மு.க-வில் வார்டு செயலாளர்களுக்கான உட்கட்சித் தேர்தல் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. கடந்த வாரம் கடலூர் தி.மு.க அலுவலகத்தில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் முன்னிலையில் கட்சிக்காரர்களை வரிசையாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் நகரச் செயலாளர் ராஜா. அப்போது 18-வது வார்டுக்காக ராமலிங்கம் என்பவரை அறிமுகப்படுத்திய ராஜா, “இவர் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

”இவனைப் பார்த்தா அப்படித் தெரியலையே... எம்டன் மாதிரி இருக்கான்...” என்று நக்கலடித்திருக்கிறார் அமைச்சர். கடுப்பான ராமலிங்கம், “எல்லாரையும் இப்படி மட்டமாப் பேசினா கட்சி விளங்காது. மரியாதை கொடுத்துப் பேசுங்க. பாரம்பர்ய தி.மு.க-காரன் நான். என் குடும்பத்தில் எல்லாரும் ஐ.ஏ.எஸ்., ஆர்.டி.ஓ., டி.ஆர்.ஓ பதவிகளில் இருக்காங்க. என்னை வாடா போடான்னு சொல்றீங்க. நீங்களும் வேணாம்... உங்க கட்சியும் வேணாம்” என்று கட்சிக்காரர்கள் முன்னிலையில் அமைச்சரை விளாசிவிட்டு வெளியேறியிருக்கிறார்.

இதுக்குப் பேர்தான் சுயமரியாதை!

மகனுக்காக இப்போதே காய்நகர்த்தும் எம்.பி!

பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர். மனக்கசப்பு காரணமாக தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறிய பாரிவேந்தரால், சுறுசுறுப்பான எம்.பி-யாகவும் செயல்பட முடியவில்லை. கொரோனா, வயது முதிர்வைக் காட்டி தொகுதிப் பக்கமே தலைகாட்டாமல் இருக்கிறார். இதனால், தங்களின் தேவைகளையும் குறைகளையும் சொல்ல மக்கள் தி.மு.க நிர்வாகிகளையே அணுகுகிறார்கள்.

ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர்
ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர்

அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டு, வரும் மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தன் மகன் ரவி பச்சமுத்துவைக் களமிறக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம் வேந்தர். இதற்காக சில பா.ஜ.க தலைவர்கள் மூலம் இப்போதே காய்நகர்த்தத் தொடங்கிவிட்டார் என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.

வாரிசாவது கட்சியை வளர்ப்பாரா?

ஸ்டாலின் அண்ணாச்சி... சொன்னது என்னாச்சு?!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அதனால் கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதற்குக்கூட பாஸ்போர்ட் எடுக்க முடியாத நிலை உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்வோம் எனத் தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஸ்டாலின் - கனிமொழி
ஸ்டாலின் - கனிமொழி

ஆனால் இன்னும் தங்கள் மீதான வழக்குகள் ரத்துசெய்யப்படாததால் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடியவில்லை என கொந்தளிக்கின்றனர் அந்த இளைஞர்கள். கூடங்குளம் அணு மின் நிலைய வேலைகளில் தங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் கேரளா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படுவதால் ஏற்கெனவே உள்ளூர் இளைஞர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

கனிமொழி எம்.பி-யின் கனிவான கவனத்துக்கு...

இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கிறதா புதுவை திமுக?

புதுச்சேரி தி.மு.க-வின் மாநில இளைஞரணி அமைப்பாளரான முகமது யூனுஸ், ரம்ஜான் தினத்தன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். புதுச்சேரி மாநில அமைப்பாளரான எம்.எல்.ஏ சிவா, தன்னையும் இஸ்லாமியர்களையும் தொடர்ந்து புறக்கணிக்கிறார் என்று யூனுஸ் கூறிய புகார் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்லாமியர்களின் வாக்குகளைக் குறிவைத்து, தொகுதி மாறி, வில்லியனூரில் நின்று வெற்றிபெற்ற எம்.எல்.ஏ சிவா, ரம்ஜானுக்கு அந்தத் தொகுதியில் இஃப்தார் நோன்பை நடத்தாமல் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தொகுதியான மண்ணாடிப்பட்டுக்குச் சென்றிருக்கிறார்.

இதைவைத்து, “ஓட்டுக்கு மட்டும்தான் இஸ்லாமியர்களா?” என்று அறிவாலயத்துக்குப் புகாரைத் தட்டிவிட்டிருக்கிறார் முகமது யூனுஸ். ``அவர் பா.ஜ.க-விடம் விலைபோய்விட்டார், அதனால்தான் இப்படியெல்லாம் பேசுகிறார்” என்று பா.ஜ.க அமைச்சர் நமச்சிவாயத்துடன் முகமது யூனுஸ் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைத் தலைமைக்கு அனுப்பியிருக்கும் சிவா தரப்பு, மண்ணாடிப்பட்டு பள்ளிவாசலில் தனது இஃப்தார் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கும் யூனுஸே காரணம் என்றும் கொளுத்திப்போட்டது. தாயகம் கவி இதில் பஞ்சாயத்து செய்ததை அடுத்து கொஞ்சம் அமைதிக்கு வந்திருக்கிறது புதுச்சேரி தி.மு.க.

அடுத்த பஞ்சாயத்து எப்ப?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism