Published:Updated:

அன்பில் பிடிவாதம் இறங்கிவந்த ஸ்டாலின்; படப்பை குணாவிடம் மாமூல் வாங்கிய காக்கிகள் -கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்

``மெயில் செக் செய்யவும்” - கழுகாரிடமிருந்து மெசேஜ் வந்தது. வேறென்ன... சூடான செய்திகளால் தகித்தது இன்பாக்ஸ்.

அன்பில் பிடிவாதம் இறங்கிவந்த ஸ்டாலின்; படப்பை குணாவிடம் மாமூல் வாங்கிய காக்கிகள் -கழுகார் அப்டேட்ஸ்!

``மெயில் செக் செய்யவும்” - கழுகாரிடமிருந்து மெசேஜ் வந்தது. வேறென்ன... சூடான செய்திகளால் தகித்தது இன்பாக்ஸ்.

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
“உங்க வாழ்த்து வாங்கியே ஆகணும்...”
அன்பில் பிடிவாதம்... இறங்கிவந்த ஸ்டாலின்!

‘கொரோனா பரவல் காரணத்தால் பொங்கல் நாள் அன்று தன்னை யாரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற முயற்சிக்க வேண்டாம்’ என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, பொங்கலன்று அவரைச் சந்திக்க சீனியர் அமைச்சர்கள்கூட வரவில்லை.

ஸ்டாலின், அன்பில் மகேஷ்
ஸ்டாலின், அன்பில் மகேஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், முதல்வருக்கு போன் போட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “எந்த பொங்கலுக்கும் உங்க வாழ்த்து வாங்காமல் நான் இருந்ததே இல்லை. கண்டிப்பாக உங்களைப் பார்க்கணும்” என்று கேட்டிருக்கிறார். அன்பிலுக்கு ஆதரவாக துர்கா ஸ்டாலினும் பரிந்து பேச, முதல்வரை தன் குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் அன்பில் மகேஷ்.

“ஊரே காய்ச்சலா கிடக்கு!”
தயங்கிய சசிகலா

ஜனவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காக அ.தி.மு.க சார்பில் ஏற்பாடுகள் தடதடக்கின்றன. சசிகலாவையும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து, அ.தி.மு.க முகாமுக்கு பதிலடி கொடுக்க சசிகலாவின் ஆதரவாளர்கள் முயன்றிருக்கிறார்கள்.

சசிகலா
சசிகலா

இதற்காக தி.நகர் எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் முன்னாள் அ.ம.மு.க மாவட்ட துணைச் செயலாளர் வைத்தியநாதன். ஆனால், விழா பற்றிய தகவலைச் சொன்னவுடன், “ஏம்பா, ஊரே காய்ச்சல்ல கிடக்கு. இந்த நேரத்துல விழா தேவையா?” என்று தயங்கினாராம். ஆனாலும், பெரும்பாடுபட்டு சசிகலாவை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். இதையடுத்து, “சொந்தக் காசையும் எடுக்குறது இல்ல. காசு செலவழிச்சு கட்சிக்காரங்க ஏற்பாடு செய்ற விழாவுக்கு வர்றதுக்கும் தயக்கம் காட்டுறாங்க... இப்படி இருந்தா எப்படி அரசியல் பண்றது?” என்று நொந்துக்கொள்கிறார்கள் சசிகலாவின் ஆதரவாளர்கள்.

பஞ்சாப்புக்கு நோ என்ட்ரி...
தமிழக காங்கிரஸுக்கு அட்வைஸ்!

சிரோன்மணி அகாலிதளம் கட்சிக்காக தேர்தல் ஆலோசனை அளிக்கச் சென்ற பிரபல தேர்தல் வல்லுநரை ஆலோசனைக் குழுவிலிருந்து வெளியேறுமாறு சொல்லிவிட்டதாம் அக்கட்சி. தவறான நேரத்தில் ‘பாதல்தான் வர்றாரு’ கணக்காக அந்த தேர்தல் வல்லுநர் ஓட்டிய காட்சிகள் களத்தில் எடுபடாததே இந்த வெளியேற்றத்துக்குக் காரணமாம்.

சத்தியமூர்த்தி பவன்
சத்தியமூர்த்தி பவன்

இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்திருக்கும் அந்த தேர்தல் வல்லுநர், ‘தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கட்டமைப்பை வலுப்படுத்தி தருகிறேன். தனித்தே உங்களால் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு நிகராக தேர்தல் களத்தைச் சந்திக்கும் அளவுக்கு உரிய மாற்றங்களை செய்து தருகிறேன்’ என்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறாராம். இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட வாரிசு கதர் பிரமுகர் ஒருவர், “ஏற்கெனவே சத்திய மூர்த்தி பவனுக்குள் ஆயிரம் கோஷ்டிகள் இருக்கின்றன. இதில் இவர் வேறு புதிய கோஷ்டியை வளர்க்கப் போகிறாரா?” என்று கிண்டல் அடித்திருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நில அபகரிப்பில் ஈடுபட்டாரா நீலகிரி அ.தி.மு.க மா.செ?

நீலகிரி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத்தும், அவரின் சகோதரரும் சேர்ந்துகொண்டு உறவினர் ஒருவரின் ஐந்து ஏக்கர் விளை நிலத்தை அபகரித்து அடாவடி செய்வதாக சமீபத்தில் புகார் கிளம்பியது. வினோத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறி கிருஷ்ணன், ரீனா தம்பதியர் முதல்வரின் தனிப்பிரிவு வரை இந்த புகாரை அனுப்பியிருக்கிறார்கள்.

அன்பில் பிடிவாதம் இறங்கிவந்த ஸ்டாலின்; படப்பை குணாவிடம் மாமூல் வாங்கிய காக்கிகள் -கழுகார் அப்டேட்ஸ்!

“எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம்” என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் ஆபீஸ் படியேறி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலுக்கான பேச்சு அடிபட்டு வரும் நிலையில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்மீதே நில அபகரிப்பு சர்ச்சை எழுந்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போலி மதுபாட்டில் விற்பனை
தூக்கியடிக்கப்பட்ட காக்கி

சமீபத்தில் தஞ்சை சரகத்தைச் சேர்ந்த ஒரு காவல் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதன் பின்னணியில் போலி மதுபாட்டில் விவகாரமிருப்பதாகக் கூறுகிறது காக்கிகள் வட்டாரம். தஞ்சாவூர் மாவட்டத்தின் தி.மு.க பிரமுகரான திலீப் என்பவரிடமிருத்து சமீபத்தில் போலி மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். திலீப்புக்கு ஆதரவாக கோதாவில் குதித்த தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர், சம்பந்தப்பட்ட சரக காவல் உயரதிகாரியிடம் அழுத்தம் கொடுத்திருக்கிறார். தொடக்கத்தில் அந்த உயரதிகாரி மசியாத நிலையில், ஸ்வீட் பாக்ஸ் கைமாறிய பிறகே, திலீப்புக்கு பதிலாக பரத் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த விவகாரமெல்லாம் காவல்துறை மேலிடத்திற்கு தெரிய பிறகே சம்பந்தப்பட்ட உயரதிகாரியை பணியிட மாற்றம் செய்தார்களாம்!

‘படப்பை’ குணாவுடன் தொடர்பு
மாற்றப்பட்ட காவலர்கள்!

ரெளடி ‘படப்பை’ குணாவுடன் தொடர்பிலிருந்த 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதுதான் காஞ்சிபுரம் காக்கிகள் மத்தியில் ஹாட் டாபிக். கான்ஸிடபிள் மற்றும் ரோந்து காவலர்களாக பணியாற்றிய இவர்கள்தான், போலீஸாரின் ‘மூவ்’ குறித்து உடனுக்குடன் குணா தரப்புக்கு தகவல் தெரிவித்தனராம்.

படப்பை குணா
படப்பை குணா

மாற்றப்பட்ட காவலர்கள் பட்டியலில் மூன்று காவல் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். இதையடுத்து, ‘ஒவ்வொரு மாதமும் குணா தரப்பிலிருந்து இவர்களுக்கு வந்த மாமூல் எவ்வளவு?’ என்பதைத் துருவ ஆரம்பித்திருக்கிறது எஸ்.பி.சி.ஐ.டி காவல் பிரிவு.

“சீனியர்களை மதிக்குறது இல்லை!”
சர்ச்சையில் திருச்சி தி.மு.க மா.செ

திருச்சி தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளராக இருப்பவர் வைரமணி. இவர் அமைச்சர் கே.என்.நேருவின் வலதுகரம் என்பதால் அமைச்சருக்கு நிகரான முக்கியத்துவத்தை தி.மு.க நிர்வாகிகள் கொடுக்க வேண்டும் என்பது வாய்மொழி உத்தரவாம். அதனால், உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட நினைக்கும் நிர்வாகிகள் நேருவைச் சந்திப்பதில் காட்டும் முனைப்பைவிட இவரைச் சந்திப்பதில்தான் முனைப்பு காட்டுகிறார்கள்.

இதையடுத்து, “தேர்தல் தொடர்பா எந்த ஆலோசனை என்றாலும், இவர்தான் தலையிடுறாரு. திருச்சி மாவட்டத்துல இருக்குற சீனியர் கட்சிக்காரங்களைக்கூட மதிக்குறது இல்லை” என்று புலம்புகிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism