Published:Updated:

மதுபான கொள்முதல்... கமிஷனில் கறார்... வாரிய இடத்தை ‘வாரியது’ அமைச்சரின் உறவினரா? - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

கடற்கரை ஊரில் கனஜோர் வசூல்! | வாரிய இடத்தை ‘வாரியது’ யார்? | “கட்சி வேற... தொழில் வேற!” | தி.நகருக்கு புதிய காக்கி! | மூடி மறைக்கப்படும் பாலியல் புகார்கள்! | கமிஷன் கேட்கும் பிரதிநிதிகள்... |

மதுபான கொள்முதல்... கமிஷனில் கறார்... வாரிய இடத்தை ‘வாரியது’ அமைச்சரின் உறவினரா? - கழுகார் அப்டேட்ஸ்

கடற்கரை ஊரில் கனஜோர் வசூல்! | வாரிய இடத்தை ‘வாரியது’ யார்? | “கட்சி வேற... தொழில் வேற!” | தி.நகருக்கு புதிய காக்கி! | மூடி மறைக்கப்படும் பாலியல் புகார்கள்! | கமிஷன் கேட்கும் பிரதிநிதிகள்... |

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
கமிஷன் கேட்கும் பிரதிநிதிகள்...

அமைச்சரை கைக்காட்டும் பிரதிநிதிகள்...

சென்னையை ஒட்டியிருக்கும் கடற்கரை பேரூராட்சியின் 5-ம் எண் பிரதிநிதியும், 7-ம் எண் பிரதிநிதியும் இணைந்து அடிக்கும் வசூல் வேட்டையைக் கண்டு உள்ளூர் தொழில் பிரமுகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். இதுபற்றி பேசும் அந்த ஏரியாவின் தொழில் பிரமுகர்கள் சிலர், “இங்குள்ள சுற்றுலா விடுதிகள், பார்கள், டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்கள் என ஒன்றுவிடாமல் மாதம் சராசரியாக ஐந்தாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை மாமூல் வசூலிக்கிறார்கள்.

மதுபான கொள்முதல்... கமிஷனில் கறார்... வாரிய இடத்தை ‘வாரியது’ அமைச்சரின் உறவினரா? - கழுகார் அப்டேட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பானிபூரி விற்கும் தள்ளுவண்டி கடைகளைக்கூட விடாமல் தினசரி அவர்களிடமும் 100 ரூபாயைப் பிடுங்கிவிடுகிறார்கள். கடற்கரையில் ஊசிமணி, பாசிமணி விற்பவர்களைக்கூட கணக்கெடுத்துள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்... கேட்டால், ‘நாங்களா மூட்டைக்கட்டிக்கொண்டு போகிறோம்... ‘அன்பான’ அமைச்சர் சொல்லித்தான் வசூலிக்கிறோம்...’ என்று ‘தாமாக’ முன்வந்து சொல்கிறார்கள். இது பற்றி கட்சியின் தலைமைக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை” என்று புலம்புகிறார்கள்!

வாரிய இடத்தை ‘வாரியது’ யார்?
பின்னணியில் அமைச்சரின் உறவினர்...

சென்னையின் எலைட் கடற்கரை ஏரியாவின் பேருந்து நிலையம் அருகில் அரசுத்துறை வாரியத்துக்கு சொந்தமான இடம் ஒன்று இருக்கிறது. நகரின் காஸ்ட்லியான அந்த இடத்தில் வீடு மற்றும் கடைகளை கட்ட முடிவெடுத்து, டெண்டர் விட்டிருக்கிறது வாரியம். டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், கட்டடப் பணிகளைத் தொடங்கச் சென்றபோது, அந்த வளாகத்திலிருக்கும் 10 சென்ட் நிலத்தை மட்டும் நெருங்க முடியவில்லையாம். விசாரித்ததில், அந்த 10 சென்ட் இடத்தை தனியார் ஒருவர் வாங்கியிருப்பது தெரியவந்திருக்கறது. இதையடுத்து, வாரியத்தின் இடத்தை எந்த ஆட்சியில், கிரயம் செய்து கொடுத்தார்கள்? சட்டப்படிதான் கொடுத்தார்களா, விதிகளை மீறி கொடுத்தார்களா, இவ்வளவு காலம் ஏன் இந்த விஷயம் வெளியே தெரியவில்லை என்றெல்லாம் அதிகாரிகள் விசாரித்துவருகிறார்கள். இதில் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய அமைச்சரின் நெருங்கிய உறவினர்தான் இடத்தை வாங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து இதில் விதிமீறல்கள் ஏதும் நடந்திருந்தால், முதல்வர் அலுவலகத்துக்கு நோட் போட்டு அனுப்பவும் தயாராகிவருகிறார்கள் அதிகாரிகள்!

“கட்சி வேற... தொழில் வேற!”
கமிஷன் வசூலில் கறார் காட்டும் வி.ஐ.பி

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மதுபான கொள்முதலில் மிடாஸ் நிறுவனம் முன்னணியில் இருந்த நிலையில், தற்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூன்று வி.ஐ.பி-க்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்குதான் அதிகளவு கொள்முதல் ஆர்டர்கள் வழங்கப்படுகின்றன.

மதுபான கொள்முதல்... கமிஷனில் கறார்... வாரிய இடத்தை ‘வாரியது’ அமைச்சரின் உறவினரா? - கழுகார் அப்டேட்ஸ்

இதுபோக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்த துறையின் வி.ஐ.பி வீட்டில் அதிகாலையில் தவறாமல் ஆஜரான மூன்றெழுத்து நிறுவன பிரமுகர், இப்போதும் அதேபோல ஆஜராகிவிடுகிறார். இதனால், மேற்கண்ட நால்வர் தரப்புக்குதான் பெருமளவு மதுபான கொள்முதல் ஆர்டர்கள் அளிக்கப்படுகின்றன என்கிறார்கள் டாஸ்மாக் வட்டாரத்தில். பொதுவாகவே, அதிகளவு கொள்முதல் ஆர்டர்களைத் தருவதற்காக டாஸ்மாக் துறையின் வி.ஐ.பி தொடங்கி உயரதிகாரிகள் வரை குறிப்பிட்ட பர்சன்ட் கமிஷனாகக் கொடுப்பது வழக்கம். இம்முறை, “நாங்களே கட்சியில சீனியர்கள்தான்... நாங்க எதுக்கு கமிஷன் தரணும்?” என்று கேட்டு சில அதிபர்கள் முரண்டு பிடிக்க... “கட்சி வேற... தொழில் வேற. கமிஷன் கொடுத்தாதான் ஆர்டர் கிடைக்கும்” என்று சொல்லி கறாராக கமிஷனை வசூலித்துவிடுகிறாராம் வி.ஐ.பி!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தி.நகருக்கு புதிய காக்கி!
அறிவுரை சொல்லியனுப்பிய உயரதிகாரி...

சென்னையின் தி.நகரின் காவல் அதிகாரி ஒருவர் சமீபத்தில் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த ஏரியாவுக்கு யாரை நியமிக்கலாம் என்று தீவிர பரிசீலனையில் ஈடுபட்டுவந்தது காவல்துறை தலைமை. முதல்வர் ஸ்டாலினின் இல்லம் இருக்கும் செனடாப் சாலை அந்த அதிகாரியின் எல்லைக்குள் வருவதுதான் இந்த தீவிர பரிசீலனைக்குக் காரணம். இந்தநிலையில், உளவுத்துறை உயரதிகாரி ஒருவர் பரிந்துரையின் பேரில் இந்தப் பதவிக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி ஆதர்ஷ் பச்சோரா நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.நகர்
தி.நகர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றிய இவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்ட கையோடு, இவரை தி.நகருக்கு நியமித்துள்ளார்கள். இவருக்கு பணி ஆர்டரை வழங்கியபோதே, “சென்சிட்டிவ்வான ஏரியா... பார்த்து பதமா நடந்துக்கோங்க” என்று காதில் கிசுகிசுத்தாராம் மற்றொரு உயரதிகாரி!

குளிர் பிரதேசத்தின் வில்லங்க ஆசிரியர்கள்...
மூடி மறைக்கப்படும் பாலியல் புகார்கள்!

குளிர் பிரதேசத்தின் அரசு கல்லூரியில் சமீப காலமாக எழும் வில்லங்க சர்ச்சைகள் எல்லை மீறி போகின்றன. மாணவிகள் மற்றும் பெண் பேராசிரியர்கள் பலரும் அங்குள்ள பேராசிரியர்கள் சிலர் மீது பாலியல் புகார்கள் கொடுத்த நிலையில், அவை மூடி மறைக்கப்படுகின்றனவாம். இரு மாதங்களுக்கு முன்பு தமிழ் துறை பேராசிரியர் மீது, பெண் பேராசிரியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரும் இப்படித்தான் கட்டப்பஞ்சாயத்து பேசி அமுக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

இதுபோன்று தொடர் புகார்கள் எழுந்ததால், அந்தக் கல்லூரியின் முக்கியமான ஆசிரியரை சமீபத்தில் இடமாற்றம் செய்தது துறையின் மேலிடம். ஆனால், உள்ளூர் வி.ஐ.பி-களைப் பிடித்து, மீண்டும் அதே இடத்தில் உட்கார்ந்துவிட்டார் அந்த முக்கிய ஆசிரியர். இதையடுத்து, எங்களுக்கு விடிவு காலமே இல்லையா என்று புலம்புகிறார்கள் அந்தக் கல்லூரியின் பெண் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள்!

“மிரட்டவில்லை... தாழ்மையோடு கேட்டுக்கொண்டேன்!”
தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஒப்புதல்

ஆளுநர் ரவி தருமபுர ஆதீன மட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசிய அன்பழகன், “எங்கள் ஊரின் பழமையான ஶ்ரீ உத்தாலேஸ்வரர் ஆலயத்தின் திருப்பணிக்கு நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது 10 லட்சம் ரூபாய் ஒதுக்கினேன். அந்தப் பணிகள் இப்போதுதான் நடக்கின்றன.

மதுபான கொள்முதல்... கமிஷனில் கறார்... வாரிய இடத்தை ‘வாரியது’ அமைச்சரின் உறவினரா? - கழுகார் அப்டேட்ஸ்

அதைப் பார்வையிட வந்த குரு மகா சந்நிதானத்திடம் ‘எங்களது தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் மதிக்கவில்லை. அவரை உங்கள் மடத்திற்கு அழைத்து விழா நடத்த வேண்டாம்’ என்று தாழ்மையோடுதான் கேட்டுக்கொண்டேன். இதைப்போய் நான் மிரட்டினேன், தடுத்தேன் என்றெல்லாம் திரித்துவிட்டார்கள். என்னோடு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமாரும் இருந்தார்... வேண்டுமானால் அவரைக்கூட கேட்டுப்பாருங்கள்” என்று புலம்பினாராம். இதையடுத்து, “அண்ணனே இப்படி சரண்டர் ஆகலாமா...” என்று கமென்ட் அடிக்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்!

தொடங்கப்படாத குடிநீர் திட்டம்
கமிஷன் கேட்கும் பிரதிநிதிகள்... விழிபிதுங்கும் அதிகாரிகள்...

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் நகராட்சிகளுக்கு சீவலப்பேரியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரும் பணிக்காக ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 550 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் அருகிலிருக்கும் நகராட்சிகளான அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூரில் இந்த திட்டப்பணிகள் நிறைவடையவிருக்கும் சூழலில், விருதுநகரில் மட்டும் பணிகளை இன்னும் தொடங்கவே இல்லை.

இந்த திட்டத்துக்காக விருதுநகர் நகராட்சிக்கு மட்டும் 44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு கமிஷன் தராமல் வேலையைத் தொடங்கக் கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறாராம் ஏரியாவின் பிரதிநிதி. அவருடன் சேர்ந்துக்கொண்டு நகரப் பிரதிநிதியும் கமிஷன் கேட்பதால், விழிபிதுங்கிப் போயிருக்கிறார்கள் நகராட்சி அதிகாரிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism