Published:Updated:

கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள்... திருச்சியில் காலியாகும் அதிமுக கூடாரம் - கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்

வாரிக்குவித்த செய்தித்துறை அதிகாரி! | மதுரையில் பொங்கும் உடன்பிறப்புகள்! | திருச்சியில் பற்றியெரியும் கோஷ்டிப்பூசல்! | புறக்கணிக்கும் வஹாப்... டீல் பேசும் மாலைராஜா...| நிலத்தை கேட்டு மிரட்டும் பா.ஜ.க எம்.எல்.ஏ! | காக்கிகள் நடத்திய வசூல்வேட்டை!

கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள்... திருச்சியில் காலியாகும் அதிமுக கூடாரம் - கழுகார் அப்டேட்ஸ்!

வாரிக்குவித்த செய்தித்துறை அதிகாரி! | மதுரையில் பொங்கும் உடன்பிறப்புகள்! | திருச்சியில் பற்றியெரியும் கோஷ்டிப்பூசல்! | புறக்கணிக்கும் வஹாப்... டீல் பேசும் மாலைராஜா...| நிலத்தை கேட்டு மிரட்டும் பா.ஜ.க எம்.எல்.ஏ! | காக்கிகள் நடத்திய வசூல்வேட்டை!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
லஞ்ச ஒழிப்புத்துறை டு அமலாக்கத்துறை!
கலக்கத்தில் அ.தி.மு.க மாஜிக்கள்...

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்கள்மீது வழக்குகளைப் பதிவு செய்துள்ளது தெரிந்ததே. இந்தநிலையில், சமீபத்தில் அந்த வழக்குகளின் மொத்த ஆவணங்களையும் ஆஃப் தி ரெக்கார்டாக கேட்டு வாங்கியிருக்கிறதாம் மத்திய அமலாக்கத்துறை.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து, அமலாக்கத்துறை ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தங்கள் தரப்பில் ஏதேனும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று தீவிர முனைப்பில் இருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. இருதரப்பும் போட்டி போட்டுக்கொண்டு தோண்டித் துருவிவருவதால் கடும் பதற்றத்தில் இருக்கிறார்கள் மாஜிக்கள்!

வாரிக்குவித்த செய்தித்துறை அதிகாரி!
மெமோ கொடுக்கப்பட்ட பின்னணி...

செய்தித்துறையில் விரைவில் ஓய்வுபெறவிருக்கும் நால்வரில் ஒருவருக்கு சமீபத்தில் மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து கல்லா கட்டியதில் சொந்த ஊரிலும், சென்னையிலும் வீடுகள், நிலங்களை வாங்கிக் குவித்துவிட்டாராம் அந்த அதிகாரி.

கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள்... திருச்சியில் காலியாகும் அதிமுக கூடாரம் - கழுகார் அப்டேட்ஸ்!

சமீபத்தில் தன் வாரிசின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியவர், அதற்காக விளம்பர ஏஜென்சிகளிடம் லட்சங்களில் கல்லா கட்டிவிட்டாராம். இந்தத் தகவல்கள் எல்லாம் மேலிடத்துக்குச் சென்றதால்தான், தற்போது மெமோ கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அநேகமாக ஓய்வுபெறும் நாளில் அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்கிறது செய்தித்துறை வட்டாரம்!

முன்பு போஸ்டர் யுத்தம்... இப்போது தற்கொலை முயற்சி...
மதுரையில் பொங்கும் உடன்பிறப்புகள்!

கடந்தாண்டு மதுரை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்.முத்துராமலிங்கம் மீது ‘பணம் வாங்கிக்கொண்டு கட்சிப் பொறுப்புளை நியமிக்கிறார்’ என்று மதுரை உடன்பிறப்புகள் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். இந்தநிலையில், தற்போது ‘மதுரையின் 34 வட்டங்களுக்கும் கட்சிக்கு தொடர்பே இல்லாதவர்களை செயலாளர்களாக நியமிக்கத் திட்டமிட்டுள்ளார்’ என்று பொன்.முத்துராமலிங்கம் மற்றும் அவரின் மகன் பொன்.சேதுராமலிங்கம் மீது கட்சி நிர்வாகிகள் அறிவாலயத்துக்கு தொடர் புகார்கள் அனுப்பிவருகிறார்கள். இதற்கிடையே சில நாள்களுக்கு முன்பு பொன்.முத்துராமலிங்கத்தின் பாரபட்சமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டச் செயலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுபற்றி பேசும் கட்சி நிர்வாகிகள் சிலர், “86 வயதாகியும் அவருக்கு பதவி ஆசை போகலை. அதாச்சும் பரவாயில்லை... கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவங்களை பதவிக்கு கொண்டுவர்றதை பார்க்குறப்போதான் வேதனையா இருக்கு” என்று கொந்தளிக்கிறார்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காலியாகிறதா அ.தி.மு.க கூடாரம்?
திருச்சியில் பற்றியெரியும் கோஷ்டிப்பூசல்!

அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப் பூசலை புட்டு புட்டு வைத்திருக்கிறது திருச்சியில் சமீபத்தில் நடந்த உட்கட்சித் தேர்தல்.

அங்கு திருச்சி மாநகர், மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் போட்டியிட்ட நிலையில், அவருக்கு எதிராக இருவர் களமிறங்கினர். இதேபோல புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மற்றும் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் எம்.பி ப.குமார் ஆகியோருக்கு எதிராகவும் ஐந்துக்கும் மேற்பட்டோர் களமிறங்கினர்.

பரஞ்சோதி
பரஞ்சோதி

இதுபற்றி பேசிய திருச்சி அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், “அஞ்சு வருஷமா கட்சியை வளர்க்காம, தங்களோட சுய ஆதாயத்துக்காக செயல்பட்டதாலேயே கடந்த சட்டமன்றத் தேர்தல்ல இங்க கட்சி வாஷ் அவுட் ஆயிடுச்சு... இவங்களை எதிர்த்து இத்தனை பேர் போட்டியிட்டப்பவே, தலைமை அழைச்சு விசாரிச்சிருக்கணும். அதை விட்டுட்டு, மறுபடியும் சிட்டிங் ஆட்களுக்கே பதவியைக் கொடுத்திருக்காங்க. இதனால பலரும் தி.மு.க பக்கம் தாவத் தயாராகிட்டாங்க. சீக்கிரம் திருச்சியில அ.தி.மு.க கூடாரமே காலியாகிடும்” என்றார்கள் ஆதங்கத்துடன்!

புறக்கணிக்கும் வஹாப்... டீல் பேசும் மாலைராஜா...
நெல்லை தி.மு.க சடுகுடு!

‘எங்களை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல், நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் புறக்கணிக்கிறார்’ என்று கொந்தளிக்கும் தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோர் அவருக்கு எதிராக அணி திரட்டிவருகிறார்கள். ஏற்கெனவே அப்துல் வஹாப் மீது அதிருப்தியில் இருக்கும் மாவட்டப் பொருளாளர் அருண்குமார், இளைஞரணிச் செயலாளர் கருப்பசாமி கோட்டையப்பன், பகுதிச் செயலாளர்கள் எனப் பலரையும் ஒருங்கிணைத்த இந்த டீம், நடக்கவிருக்கும் உட்கட்சித் தேர்தலில் அவருக்கு எதிராக களமிறங்கவும் திட்டமிட்டிருக்கிறது.

கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள்... திருச்சியில் காலியாகும் அதிமுக கூடாரம் - கழுகார் அப்டேட்ஸ்!

இதையடுத்து, அடுத்த மாநகரச் செயலாளராக தன்னை தேர்வு செய்ய இப்போதே கட்சி நிர்வாகிகளிடம் டீல் பேசிவருகிறார் மாலைராஜா! இதனால், நெல்லை தி.மு.க-வில் கோஷ்டிப்பூசல் உச்சத்தை எட்டியிருக்கிறது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிலத்தை கேட்டு மிரட்டும் பா.ஜ.க எம்.எல்.ஏ!
புதுச்சேரி அட்ராசிட்டி...

புதுச்சேரியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் நண்பர் ஒருவர், லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு பின்புறம் இருந்த தனது 13 ஏக்கர் நிலத்தை, கடந்த ஆண்டு மூன்று கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். தற்போது புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடந்துவரும் நிலையில், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகக் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்படும் என்பதால்,

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்

அந்த நிலத்தை அதே விலைக்கு தனக்குக் கொடுத்துவிடும்படி நிலத்தின் உரிமையாளரிடம் கேட்டிருக்கிறார், பா.ஜ.க எம்.எல்.ஏ. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் டென்ஷனான எம்.எல்.ஏ., அந்த நிலம் தனக்கு ஏற்கெனவே குத்தகை விடப்பட்டதாகப் போலி பத்திரம் தயார் செய்ததுடன், அந்த இடத்தில் கூடாரத்தையும் போட்டுவிட்டாராம். இதையடுத்து, என்ன செய்வதென்று தவித்து வருகிறார் நிலத்தின் உரிமையாளர்.

அரசு இடத்தை அபகரிப்பதில் கூட்டணி...
ஆவடியில் டீல் பேசும் கரைவேட்டிகள்!

ஆவடி மாநகராட்சி பகுதியில் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் ஒதுக்கிய ஒரு ஏக்கர் நிலத்தை தி.மு.க மற்றும் அ.ம.மு.க பிரமுகர்கள் சிலர் அபகரித்துள்ளனர். இதில் அ.ம.மு.க பிரமுகர் ஒருவர் அந்த இடத்துக்கு பட்டா, பத்திரம், பிளான் எல்லாம் தயார் செய்து கட்டடமும் கட்டத் தொடங்கிவிட்டார்.

ஆவடி மாநகராட்சி
ஆவடி மாநகராட்சி

இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த அ.தி.மு.க மற்றும் தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் இதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு பதிலாக, தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று டீல் பேசிவருகிறார்கள். டீல் இழுத்துக்கொண்டே செல்வதால், எந்நேரமும் ‘ஆக்கிரமிப்பு கட்டடம்’ என அறிவிப்பு வரவும் வாய்ப்பு இருக்கிறது என்று காதை கடிக்கிறார்கள் இதன் உள்விவரம் அறிந்தவர்கள்!

காக்கிகள் நடத்திய வசூல்வேட்டை!
ஆடிப்போன ஆவடி அதிகாரி...

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில காக்கிகள் ஒன்று சேர்ந்து நடத்திய வசூலை கண்டுபிடித்த அந்த உயரதிகாரி தொகையைப் பார்த்து ஆடிப்போயிருக்கிறார். ஆவடி சுற்றுவட்டாரத்திலுள்ள தொழிலதிபர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்களிடம் பொதுசேவை என்று பல லட்சங்களை வசூலித்த இந்த காக்கிகள், அப்படி வசூலித்த பணத்தில் சொற்ப தொகையை மட்டும் காவல் நிலைய கட்டடப் பணிகளுக்கும், சமூக சேவைக்கும் பயன்படுத்திருக்கிறார்கள். மாநில உளவுத்துறையினருக்கும் வசூலில் பங்கு கொடுத்துவிட்டதால் அவர்களும் கமுக்கமாகிவிட்டார்களாம்.

சமீபத்தில் நடந்த கொலை சம்பவத்தை விசாரித்தபோதுதான் இந்த போலீஸ் டீமின் குட்டு வெளிப்பட்டிருக்கிறது. இதையடுத்து, முதற்கட்டமாக சிலரை மட்டும் இடமாற்றம் செய்த நிலையில், அடுத்த லிஸ்ட் தயாராகிவருகிறது. இதில் ஒரு அதிகாரி, பெண் காக்கிகளுடன் டூயட் பாடிய தகவலும் கசிந்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism