Published:Updated:

`நானும் அமைச்சர்தான்யா...’ முதல் போர்க்கொடி தூக்கும் திமுக கூட்டணிக் கட்சி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

புயலைக் கிளப்பக் காத்திருக்கும் வாக்குமூலம் | தி.மு.க கோஷ்டிப்பூசலில் விழுப்புரம் | ‘வடபோச்சே...’ கவலையில் அமைச்சர் | டெல்லி பிரமுகர்மீது பாயும் அமைச்சர் | மூன்று முறை தள்ளிப்போன தலைவர் தேர்தல்... | கழுகார் அப்டேட்ஸ்

`நானும் அமைச்சர்தான்யா...’ முதல் போர்க்கொடி தூக்கும் திமுக கூட்டணிக் கட்சி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

புயலைக் கிளப்பக் காத்திருக்கும் வாக்குமூலம் | தி.மு.க கோஷ்டிப்பூசலில் விழுப்புரம் | ‘வடபோச்சே...’ கவலையில் அமைச்சர் | டெல்லி பிரமுகர்மீது பாயும் அமைச்சர் | மூன்று முறை தள்ளிப்போன தலைவர் தேர்தல்... | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
வீட்டுக்கு முன் போர்டுவைத்த அமைச்சர்...
கடுகடுக்கும் உடன்பிறப்புகள்!

தலைநகரில் ஓர் அமைச்சர், தன் வீட்டில் வைத்திருக்கும் அறிவிப்புப் பலகை கட்சியினரைக் கடுப்பாக்கியிருக்கிறது. `யாரும் சிபாரிசுக்கோ, பணியிட மாறுதலுக்கோ இங்கே வரக் கூடாது’ என்ற வாசகமே அவர்களின் கோபத்துக்குக் காரணம். “தேர்தல் நேரத்திலும் இப்படியே இருந்துவிடுவாரா... அப்போது நம்மிடம் வந்துதானே ஆக வேண்டும்... அப்ப வெச்சுக்குறோம்” என்று தங்களுக்குள் பேசியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். இந்த அறிவிப்பால் மற்ற அமைச்சர்களும் ‘அப்செட்’டில் இருக்கிறார்கள். அந்தந்த மாவட்டங்களிலிருந்து வரும் சிபாரிசுகளை துறை அமைச்சரான இவரிடம் ஃபார்வர்டு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் அமைச்சர் பெருமக்கள்.

கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர்...
புயலைக் கிளப்பக் காத்திருக்கும் வாக்குமூலம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸ்: சித்திரிப்புப் படம்
போலீஸ்: சித்திரிப்புப் படம்

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில், முன்னாள் இன்ஸ்பெக்டர் சரவணனை சமீபத்தில் கைதுசெய்தனர் சென்னை சி.பி.சி.ஐ.டி போலீஸார். இன்ஸ்பெக்டர் சரவணன் சிக்கினாலும் முன்னாள் உதவி கமிஷனர் சிவக்குமார் இன்னமும் போக்கு காட்டிக்கொண்டே இருக்கிறாராம். தற்போது சரவணனை போலீஸ் காவலில் எடுத்திருக்கும் சி.பி.சி.ஐ.டி போலீஸார், இந்தக் கடத்தலில் காவல்துறையின் பங்கு குறித்து துருவித் துருவி விசாரிக்கிறார்கள். சரவணன் எதையாவது உளறிவிடுவாரோ என்று இந்த வழக்கில் தொடர்புடைய காக்கிகளெல்லாம் பதற்றத்தில் இருக்கிறார்களாம். அவர் சொல்லப்போகும் தகவல்கள் நிச்சயம் புதிய புயலைக் கிளப்பும் என்று காவல்துறையில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது!

நானும் அமைச்சர்தான்யா...
தி.மு.க கோஷ்டிப்பூசலில் விழுப்புரம்!

விழுப்புரம் மாவட்ட தி.மு.க-வில் வடக்கு மாவட்டச் செயலாளராக மஸ்தானும், மத்திய மாவட்டச் செயலாளராக புகழேந்தியும் இருக்கின்றனர். புகழேந்தி, அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர் என்பதால் மத்திய மாவட்ட தி.மு.க., பொன்முடியை மையப்படுத்தியே செயல்படுகிறது. அண்மையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பட்டமளிப்புவிழா அழைப்பிதழில் பொன்முடி பெயரை மட்டும் போட்டுவிட்டு, மஸ்தானின் பெயரைப் போடவிடாமல் தடுத்துவிட்டாராம் மாவட்டச் செயலாளர் புகழேந்தி.

அமைச்சர்கள்: மஸ்தான் மற்றும் பொன்முடி
அமைச்சர்கள்: மஸ்தான் மற்றும் பொன்முடி

ஆனாலும், ‘நானும் அமைச்சர்தான்யா...’ என்று விழாவுக்குப் போனதுடன், மேடை ஏற மறுத்து முன்வரிசையில் அமர்ந்துவிட்டார் அமைச்சர் மஸ்தான். தனக்கு எதிரான அரசியலை மஸ்தான் முன்னெடுப்பதை விரும்பாத பொன்முடிதான் இத்தனைக்கும் காரணம் என்கிறார்கள். விழுப்புரம் மாவட்ட தி.மு.க கோஷ்டி மோதல் மேலும் மேலும் முற்றிக்கொண்டே போகிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அதிகாரியின் கட்டுப்பாட்டில் துறை...
‘வடபோச்சே...’ கவலையில் அமைச்சர்!

பசுமை அமைச்சருக்கும், அந்தத் துறையின் உச்சப் பொறுப்பிலிருக்கும் பெண் ஐ.ஏ.எஸ் ஒருவருக்கும் ஏழாம் பொருத்தமாம். துறைக்கு பெண் அதிகாரியைக் கொண்டு வந்ததே அமைச்சர்தான் என்றாலும், அவரையே ‘டாமினேட்’ பண்ணுகிறாராம் அதிகாரி. டிரான்ஸ்ஃபர் முதல் அப்பாயின்ட்மென்ட் வரை எல்லாவற்றையும் பெண் அதிகாரியே பார்த்துக்கொள்வதால் எந்த வருமானமும் இல்லை எனப் புலம்புகிறாராம் மாண்புமிகு. எப்படியாவது அந்த அதிகாரியை மாற்ற வேண்டும் என மேலிடத்தில் கோரிக்கை வைத்திருந்தார் அமைச்சர். ஆனால், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப் பட்டியலில் பெண் அதிகாரியின் பெயர் இல்லாதது அமைச்சருக்கு பெருத்த ஏமாற்றம். `வடபோச்சே...’ ஃபீலிங்கில் இருக்கிறார் அமைச்சர்.

``எனது துறையில் அவர்களுக்கென்ன வேலை?’’
டெல்லி பிரமுகர் மீது பாயும் அமைச்சர்

திருச்சியிலிருந்து பிரிந்த மாவட்டம் ஒன்றில் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்துவந்தவர், ‘அரசி’ மாவட்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் மீதான முறைகேடு புகார்களை விசாரிக்க ஆறு பேர்கொண்ட குழுவை நியமித்திருக்கிறார் நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர். விசாரணை முடியும் வரை அந்த ஆணையர் அந்த ஊரிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும், உயரதிகாரிகளின் முன் அனுமதி பெறாமல் வெளியூர் எங்கும் செல்லக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்தச் சிக்கல்களிலிருந்து மீள்வதற்காக, ஆளுமை கொண்ட தி.மு.க எம்.பி மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ இருவரையும் ‘இனிப்புகளுடன்’ சந்தித்தாராம் அதிகாரி. இதைத் தெரிந்துகொண்ட துறையின் மாண்புமிகு, “எனது துறையில் அவர்களுக்கென்ன வேலை?” என்று கொதித்துவிட்டாராம். ஏற்கெனவே அமைச்சருக்கும், அந்த டெல்லி பிரமுகருக்கும் ஆகாது என்பதுதான் கோபத்துக்குக் காரணம்.

மூன்று முறை தள்ளிப்போன தலைவர் தேர்தல்...
போர்க்கொடி தூக்கும் தி.மு.க கூட்டணிக் கட்சி!

உள்ளாட்சித் தேர்தலின்போது கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியை கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியிருந்தது தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1-வது வார்டு கவுன்சிலர் கலாராணி என்பவர், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டார். “ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் இத்தனை பேர் இருக்கும்போது, அவருக்குத் தலைவர் பதவியா?” என்று தலைவருக்கான தேர்தலையே நடத்தவிடாமல் தடுத்துவருகின்றனர் ஆளுங்கட்சியினர்.

கம்யூனிஸ்ட் கட்சி
கம்யூனிஸ்ட் கட்சி

கோபமடைந்த இந்திய கம்னியூஸ்ட் கட்சியினர், “மாவட்ட அமைச்சருக்குத் தெரியாமலா இப்படியெல்லாம் நடக்குது... அடுத்த மாவட்டம் வரை போய் தி.மு.க-வினரைத் தன்வசப்படுத்தி, அரசியல் செய்யும் அவரால், சொந்த மாவட்டத்தில் கட்சியினரை கட்டுப்படுத்த முடியாதா... எங்க கட்சி கவுன்சிலரை தலைவராக்க அவருக்கு விருப்பமில்லை. அதோடு, பட்டியலினப் பெண்ணை நாங்க தலைவர் பதவிக்கு நிறுத்தியதால், அமைச்சர் சாதியும் பார்க்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கு” என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்!

ஆதீன கலைக் கல்லூரி பவளவிழா...
பங்கேற்பாரா மு.க.ஸ்டாலின்?

மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்துக்கு சமீபத்தில் வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நாற்காலி போடச் சொன்னதும், “அது மரபல்ல” என்று மறுக்கப்பட்டதால் பலகை போடச் சொன்னதும், ஆதீனகர்த்தரிடம் விபூதி பிரசாதம் வாங்கிக்கொள்ள மறுத்ததும் சர்ச்சையானது. இதைச் சரிசெய்யும்விதமாக சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தருமபுரம் ஆதீனத்துக்குச் சென்றார். அவருக்கு ஆதீன நிர்வாகம் சார்பில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்து அமைச்சர் மெய்யநாதன் ஆசிபெற்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்போது, ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும், ஆதீன கலைக் கல்லூரி பவளவிழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கடிதத்தை அமைச்சர் மெய்யநாதனிடம் ஆதீனகர்த்தர் வழங்கினார். ஓர் அமைச்சர் நெருப்பு... இன்னோர் அமைச்சர் தண்ணீரா என்று கேட்கிறார்கள் ஆதீன பக்தர்கள். அதேநேரத்தில் `இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா’ என்ற விவாதமும் தொடங்கியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism