Published:Updated:

சுரண்டப்பட்ட கோல்டு மெடல் முதல் தலைமைக்கு தெரியாமல் புதிய பதவி வரை... கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

றெக்கையில் மழைநீர் சொட்டச் சொட்ட வீடியோ காலில் அழைத்த கழுகார், ``வணக்கம். மெயில் பாருங்க” என்றார். திறந்து பார்த்தோம்... கழுகாரின் கட்டுரை வந்திருந்தது.

சுரண்டப்பட்ட கோல்டு மெடல் முதல் தலைமைக்கு தெரியாமல் புதிய பதவி வரை... கழுகார் அப்டேட்ஸ்

றெக்கையில் மழைநீர் சொட்டச் சொட்ட வீடியோ காலில் அழைத்த கழுகார், ``வணக்கம். மெயில் பாருங்க” என்றார். திறந்து பார்த்தோம்... கழுகாரின் கட்டுரை வந்திருந்தது.

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
நீலகிரி பயணம்... புகார் புத்தகத்தோடு தயாராகும் நிர்வாகிகள்...

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஊட்டியில் மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளதால் அதைத் தொடங்கி வைக்கச் செல்கிறார் முதல்வர். அவரின் இதமான இந்தப் பயணத்தை அனலாக்கத் திட்டமிடுகின்றன இரு கோஷ்டிகள். ஒன்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோஷ்டி. மற்றொன்று மாவட்டச் செயலாளர் முபாரக் கோஷ்டி.

சுரண்டப்பட்ட கோல்டு மெடல் முதல் தலைமைக்கு தெரியாமல் புதிய பதவி வரை... கழுகார் அப்டேட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உள்ளாட்சித் தேர்தலில் மா‌‌வட்டச் செயலாளர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செய்த அடாவடிகளை முதல்வரிடம் ஆதாரத்துடன் எடுத்துரைக்க அமைச்சர் கோஷ்டியினர் தயாராகிறார்களாம். அதேவேளையில், அரசுப் பணிகளில் அமைச்சரின் உறவினர்கள் தலையீடு அதிகரித்திருப்பது குறித்து முதல்வரிடம் புகார் வாசிக்க மா‌‌வட்ட செயலாளர் கோஷ்டி தயாராகிவருகிறது. முதல்வரின் வருகைக்குப் பின்னர் நீலகிரி தி.மு.க-வில் பெரும் களேபரமே நடக்கும் என்று தெரிகிறது.

கோல்டு மெடலைச் சுரண்டிய அதிகாரிகள்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கோல்டு மெடல்களையே (தங்கப் பதக்கம்) சுரண்டிவிட்டார்களாம். ஆய்வில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. முறைகேடு செய்த பணத்தை சம்பந்தப்பட்ட பேராசிரியரிடமிருந்து பிடித்தம் செய்ய பல்கலைக்கழகம் முடிவு செய்திருந்தது.

அண்ணா பல்கலைக் கழகம்
அண்ணா பல்கலைக் கழகம்

ஆனால், எந்தச் சேதாரமும் இல்லாமல் சமீபத்தில் ஓய்வு பெற்றுவிட்டார் அந்தக் கில்லாடி மனிதர். அவருக்கு சேர வேண்டிய அனைத்துப் பண பலன்களையும் அப்படியே கொடுக்க டீல் பேசி, பல்கலைக்கழக அதிகாரிகள் இருவர் சில ‘லட்டு’களைப் பெற்றதாகச் சொல்கிறார்கள். விஷயம் உயர்கல்வித்துறை காதுக்குப் போனதால், அந்த இரு அதிகாரிகளும் ஓய்வுபெற்ற பேராசிரியரிடமிருந்து பணத்தை வசூலிக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்...
முதல்வரின் அடுத்த பயணத்திட்டம்...

அடுத்த வெளிநாட்டுப் பயணத்துக்குத் தயாராகிவிட்டார் முதல்வர். அரசுமுறைப் பயணம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், கூடவே முதல்வரின் மருத்துவ சிகிச்சைக்கான பயணமாகவும் இது இருக்கும் என்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக லண்டன் சிகிச்சைக்கு செல்லாமல் இருந்த முதல்வர், இப்பயணத்தின்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் சில பரிசோதனைகளை முடித்துவிட்டு, அமெரிக்கா செல்வதாகவும் தகவல். அப்போது அமெரிக்காவில் தொழில் கூட்டமைப்பினரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்கள். சுமார் 20 நாள் பயணமாக இது இருக்கக்கூடும். அதற்கு முன்பாகவே உதயநிதி அமைச்சரவைக்குள் வர வாய்ப்பிருக்கிறதாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சிவா மகனுக்கு அண்ணாமலையின் அசைன்மெண்ட்...

திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை பா.ஜ.க பக்கம் இழுத்ததில் முக்கியப் பங்கு வி.பி.துரைசாமியேச் சேரும் என்கிறார்கள். கனிமொழியின் ஆதரவாளர்களாக இருந்த மனோ தங்கராஜ், கிள்ளை ரவிந்தரன் என பலரும் முக்கியத்துவம் கிடைக்காததால், கனிமொழி அணியில் இருந்து கழன்றுவிட்ட நிலையில், புறக்கணிக்கப்பட்ட சூர்யா கட்சியே மாறிவிட்டார்.

பாஜக-வில் இணைந்த திருச்சி சிவா மகன் சூர்யா சிவா
பாஜக-வில் இணைந்த திருச்சி சிவா மகன் சூர்யா சிவா
ட்விட்டர்

தி.மு.க-வில் உள்ள வாரிசு பிரமுகர்களின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுங்கள் என்பதே சூர்யாவுக்கு அண்ணாமலை கொடுத்திருக்கும் முதல் அசைன்மெண்டாம்.

தி.மு.க-வில் புதிய பதவி... தலைவருக்குத் தெரியுமா?

புதுச்சேரி தி.மு.க-வின் மாநில அமைப்பாளராக இருக்கும் எம்.எல்.ஏ சிவா, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, கதிர்காமம், மணவெளி, ஏம்பலம் உள்ளிட்ட தொகுதிகளில் தனது ஆதரவாளர்களுக்கும் தொகுதிப் பொறுப்பாளர் பதவியை வழங்கியிருக்கிறாராம். “இப்படி ஒரு பதவியே தி.மு.க அமைப்பு விதிகளில் கிடையாது. தலைமைக்கே தெரியாமல் சிவா போட்டுத்தாக்குகிறார். அவர்களும் அந்தப் பதவிகளை விளம்பரத்திலும், நோட்டீஸிலும் போட்டுக்கொள்கிறார்கள்” என்று புலம்புகின்றனர் நிர்வாகிகள்.

வாரிசை வளர்க்கும் அமைச்சர்...
கொதிப்பில் திருவண்ணாமலை தி.மு.க...

வாரிசை வளர்த்தெடுக்கும் அமைச்சர்கள் பட்டியலில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் இணைந்திருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் தனக்கு அடுத்த முகமாக மகன் எ.வே.கம்பனை முன்னிறுத்தும் அவர், அரசு திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட நியாயவிலைக் கட்டட கல்வெட்டிலும் மகன் பெயரை இடம்பெறச் செய்திருக்கிறார். அந்தக் கட்டடத்தை தன் கையாலேயே திறந்து வைத்தும் அகம் மகிழ்ந்திருக்கிறார் அமைச்சர்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

கடைக்குள் முதலமைச்சரின் புகைப்படத்தைவிட, அமைச்சர் எ.வ.வேலுவின் புகைப்படம் பெரிதாக வைக்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் எம்.பி சீட்டுக்கு இப்போதே தொடங்கியது போட்டி

ஒரு காலத்தில் கரூர் மாவட்ட தி.மு.க-வில் கோலோச்சியவர் கே.சி.பழனிசாமி. தொழிலில் தொடர் சறுக்கலைச் சந்தித்தவர், அரசியலிலும் ஒதுங்கியிருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் மகன் சிவராமனுக்கு அரவக்குறிச்சி தொகுதியில் சீட் கேட்டுவந்த அவரை, நம்பவைத்து ஏமாற்றிவிட்டாராம் செந்தில் பாலாஜி.

கே.சி.பழனிசாமி, கரூர்.
கே.சி.பழனிசாமி, கரூர்.

மனம் தளராத பழனிசாமி, வரும் 2024 எம்.பி தேர்தலில் கரூர் தொகுதியை தனது மகனுக்குப் பெற்றுத்தர, இப்போதே ‘துண்டு’ போட்டுவருகிறாராம். செந்தில் பாலாஜியோ, தனது தம்பி அசோக்குமாரை எம்.பி ஆக்கும் கனவில் இருக்கிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism