Published:Updated:

மேயர் பதவியில் திமுக புதுக்கணக்கு முதல் குமரியில் தொடங்கும் கூட்டணி குஸ்தி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

`மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் ஃபீவர் ஆரம்பித்துவிட்டது. இனி தகவல்கள் கொட்டும். மெயில் செக் பண்ணுங்க’ என்ற மெஸ்சேஜ் அனுப்பி இருந்தார் கழுகார்.

மேயர் பதவியில் திமுக புதுக்கணக்கு முதல் குமரியில் தொடங்கும் கூட்டணி குஸ்தி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

`மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் ஃபீவர் ஆரம்பித்துவிட்டது. இனி தகவல்கள் கொட்டும். மெயில் செக் பண்ணுங்க’ என்ற மெஸ்சேஜ் அனுப்பி இருந்தார் கழுகார்.

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
மேயர் பதவி நிரந்தரம் இல்லை...
தி.மு.க தலைமை போடும் கணக்கு!

சென்னை மாநகராட்சி, பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், மேயர் கனவிலிருந்த தலைமைக்கு நெருக்கமான சிலர் வருத்தத்தில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மறைமுகத் தேர்தல் மூலமே மேயர் தேர்தலை நடத்தும் முடிவில் தமிழக அரசு இருப்பதால், அமைச்சர்களை மாற்றுவதுபோல நினைத்த நேரத்தில் பெண் கவுன்சிலர்களில் யாரை வேண்டுமானாலும் மேயர் பதவிக்கு மாற்றிக்கொள்ள தலைமைக்கு வசதியாக இருக்கும் என்று அரசுத் தரப்பு கணக்கு போடுகிறது.

தி.மு.க-அண்ணா அறிவாலயம்
தி.மு.க-அண்ணா அறிவாலயம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, கோவை, மதுரை என முக்கிய மாநகராட்சிகள் அனைத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்கிறார்கள்!

இப்போதைக்கு இல்லை வாரியப் பதவி!

தாட்கோ வாரியத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் மதிவாணனை நியமித்திருக்கிறது தமிழக அரசு. அதேபோல் காலியாக இருக்கும் வாரியங்களின் பதவிகளை எதிர்பார்த்து தி.மு.க-வினர் பலரும் கனவில் இருக்கிறார்கள்.

மதிவாணன்
மதிவாணன்

`உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் வாரியங்களுக்கான பதவிகளும் நிரப்பப்படும்’ என்கிற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் இருக்கிறது. ஆனால், பல வாரியங்கள் தற்போது அதிகாரிகள் கட்டுபாட்டில் சிறப்பாகச் செயல்படுவதால், வாரியப் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாவதில் தாமதமாகலாம் என்கிறது அறிவாலயப் பட்சி!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
புகலிடம் தேடும் புதிய தமிழகம் நிர்வாகிகள்!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கடந்த ஓரிரு வருடங்களாகவே பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டிவருகிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

விரைவில் வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலாவது தங்களுக்குச் சாதகமான நகர்ப்புறங்களில் போட்டியிட்டு வெற்றிபெறலாம் என்று கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ள நிலையில், கிருஷ்ணசாமியிடமிருந்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அதனால் குழப்பம் அடைந்துள்ள கட்சியின் நிர்வாகிகள் மாற்றுப் புகலிடம் தேடிவருகிறார்களாம்!

வனத்துறை அமைச்சருக்கு ராசா அட்வைஸ்!

நீலகிரி எம்.பி-யும், தி.மு.க துணைப் பொதுச்செயலாளருமான ராசா தலைமையில், குன்னூரில் கட்சிக்குப் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் சமீபத்தில் நடைபெற்றது. மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கிய ராசாவை இடைமறித்த கீழ்கோத்தகிரி தி.மு.க தொண்டர் ஒருவர், ``ஒத்தப் பைசா வாங்காம ராமச்சந்திரனுக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்கவெச்சோம். அவர் வனத்துறை அமைச்சராகி இத்தனை மாசம் ஆச்சு... நன்றி சொல்லக்கூட தொகுதிப் பக்கம் எட்டிப் பார்க்கலை” என்று அதிருப்தியை போட்டுடைத்தார்.

ராமச்சந்திரன் மற்றும்  எம்.பி ஆ.ராசா
ராமச்சந்திரன் மற்றும் எம்.பி ஆ.ராசா

கடுப்பான ராசா, அன்று இரவே ஊட்டியில் இருக்கும் அவரின் முகாம் அலுவலகத்தில்வைத்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு கடுமையான குரலில் அட்வைஸ் செய்தாராம்.

அரசு அலுவலக உதவியாளர் பணி...
நால்வரின் காட்டில் நல்ல மழை!

மயிலாடுதுறை மாவட்டத்தில், 12 அரசு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட அதிகாரி ஒருவர் என நால்வரும் தலா மூன்று இடங்கள் என்று பங்கு பிரித்துக்கொண்டார்களாம். மூன்று முதல் ஆறு சிறு ஸ்வீட் பாக்ஸ்கள் வரை இதற்காக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால் நால்வரின் காட்டிலும் நல்ல மழை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜோராக நடந்த திருவாரூர் தைப்பூசத் தேரோட்டம்...
அழுத்தம் கொடுத்த ஆளுங்கட்சி நிர்வாகிகள்!

கொரோனா பரவல் காரணமாக முருகன் கோயில்களில் தைப்பூசத் தேரோட்டம் நடத்துவதற்கு தடைவிதித்துவிட்டது தமிழக அரசு. ஆனால், திருவாரூர் எண்கண் முருகன் கோயிலில் தி.மு.க மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான பூண்டி கலைவாணனின் வலதுகரமான சேகர் என்கிற கலியபெருமான் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கோயில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தேர்த் திருவிழாவை நடத்தவைத்திருக்கிறார்கள்.

மேயர் பதவியில் திமுக புதுக்கணக்கு முதல் குமரியில் தொடங்கும் கூட்டணி குஸ்தி வரை! - கழுகார் அப்டேட்ஸ்
file photo

இந்த விழாவில் ஏகப்பட்ட கூட்டம் முண்டியடித்துக்கொண்டு தேர் தரிசனம் செய்த நிலையில், ``ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் ஆட்களே அரசு உத்தரவை மதிக்காமல் விழாவை எப்படி நடத்தலாம்... எம்.எல்.ஏ-வுக்கு இந்த விவரங்கள் தெரியாதா?" என்று நொந்துகொள்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

உடன்பிறப்புகளுடன் மோதும் கதர் வேட்டிகள்!
குமரியிலிருந்து தொடங்குகிறதா கூட்டணி குஸ்தி?

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சிகள் தவிர்த்து மற்ற இடங்களில் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க முடியாது என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ், தீர்மானம்போட்டு கட்சியின் மாநிலத் தலைமைக்கு அனுப்பியிருக்கிறது.

மேயர் பதவியில் திமுக புதுக்கணக்கு முதல் குமரியில் தொடங்கும் கூட்டணி குஸ்தி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

இதையடுத்து, ``குமரி மாவட்டத்தில் வலுவாக இருந்தால் மட்டுமே காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிடுமா?” என்று பதிலுக்கு மல்லுக்கட்டுகிறார்கள் குமரி உடன்பிறப்புகள். அநேகமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குஸ்தி இம்முறை குமரியிலிருந்தே தொடங்கலாம் என்கிறார்கள் கதர் வேட்டிகள்!

உள்ளாட்சி நிர்வாகத்தில் குடும்பத்தினர் தலையீடு!
கொந்தளித்த தி.மு.க ஊராட்சி கவுன்சிலர்...

தென்காசி மாவட்ட ஊராட்சியின் தி.மு.க பெண் கவுன்சிலர் கனிமொழி, தனது வார்டு மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கும்படி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் தமிழ்செல்விக்கு கோரிக்கை விடுக்க... தலைவரின் உதவியாளரோ, “நிதி ஒதுக்க வேண்டுமென்றால் தலைவரின் கணவரைத் தொடர்புகொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து, “உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் பொறுப்புக்கு வந்தாலும், அவர்களின் குடும்பத்தினர் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள்” என்று ஊராட்சி மன்றக் கூட்டத்தில் கனிமொழி ஓப்பனாகப் பேசியது அனலைக் கிளப்பியிருக்கிறது.

இந்த விவகாரம் முதல்வர் அலுவலகம் வரை செல்லவே... தமிழகம் முழுவதும் பெண்கள் தலைமை வகிக்கும் உள்ளாட்சிகளைக் கண்காணித்து, நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் சென்றிருக்கிறதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism