Published:Updated:

துரை வைகோ கொடுத்த கேரன்டி; முன்னணி நடிகர் படம்... தயாரிப்பு நிறுவனம் மிரட்டல்? - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

பா.ம.க-விலிருந்து ஆட்களை உருவும் அ.தி.மு.க! | “போட்ட முதலை எடுக்க வேணாமா!” | கெத்து காட்டிய ‘தாம்பரம்’ நாராயணன் | ஆவடியில் கல்லா கட்டும் கரைவேட்டிகள் | “எங்களை அழிச்சுத்தான் இவங்க வளரணுமா?” | துரை வைகோ கொடுத்த கேரன்டி... கழுகார் அப்டேட்ஸ்

துரை வைகோ கொடுத்த கேரன்டி; முன்னணி நடிகர் படம்... தயாரிப்பு நிறுவனம் மிரட்டல்? - கழுகார் அப்டேட்ஸ்

பா.ம.க-விலிருந்து ஆட்களை உருவும் அ.தி.மு.க! | “போட்ட முதலை எடுக்க வேணாமா!” | கெத்து காட்டிய ‘தாம்பரம்’ நாராயணன் | ஆவடியில் கல்லா கட்டும் கரைவேட்டிகள் | “எங்களை அழிச்சுத்தான் இவங்க வளரணுமா?” | துரை வைகோ கொடுத்த கேரன்டி... கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
மிரட்டல் விடுத்த தயாரிப்பு நிறுவனம்
அரண்டு போன தியேட்டர் நிர்வாகம்

பெங்களூரைச் சேர்ந்த விநியோகஸ்தர்களுடன் ஏற்பட்ட பிரச்னையில், சமீபத்தில் வெளியான முன்னணி நடிகரின் படத்தை தமிழகத்தில் திரையிட மறுத்திருக்கிறது முன்னணி தியேட்டர் நிறுவனம் ஒன்று. இதையடுத்து, கடுப்பான தயாரிப்பு தரப்பினர் தியேட்டர் நிர்வாகத்தினரிடம், “வெளி மாநிலங்களில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால், தமிழ்நாட்டில் நீங்கள் திரையிடவில்லை என்றால் அடுத்து எந்தப் படமும் உங்களுக்கு இங்குக் கிடைக்காது!” என்று மிரட்டும் தோனியில் சொல்லியிருக்கிறார்கள். அரண்டுபோன தியேட்டர் நிறுவனம், அதன் பிறகே படத்தை திரையிட்டிருக்கிறது. முதல் நாள் பட ரிலீஸின்போது அந்த நிறுவனத்தின் தியேட்டர்களில் முன்பதிவு தாமதமாக தொடங்க இதுதான் காரணமாம்!

பா.ம.க-விலிருந்து ஆட்களை உருவும் அ.தி.மு.க!
செவ்வனே செய்யும் செம்மலை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்படும்’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததற்கு பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.

துரை வைகோ கொடுத்த கேரன்டி;  முன்னணி நடிகர் படம்... தயாரிப்பு நிறுவனம் மிரட்டல்? - கழுகார் அப்டேட்ஸ்

ஒருபக்கம் இப்படி பா.ம.க., தி.மு.க-விடம் நெருக்கம் காட்டிவரும் நிலையில் மறுபக்கம், பா.ம.க-வில் ஆட்களை இழுக்கும் பணியை சத்தமில்லாமல் செய்துவருகிறது அ.தி.மு.க. இதற்கான அசைன்மென்ட் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செம்மலையிடம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சமீபத்தில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சுமார் 100 பா.ம.க நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் இணைத்திருக்கிறார் செம்மலை. இதையடுத்து, விரைவில் அ.தி.மு.க-வுக்கு எதிராக டாக்டர் பயங்கரமாக கொந்தளிப்பார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

“போட்ட முதலை எடுக்க வேணாமா!”
டிரான்ஸ்ஃபரை ரத்து செய்த ‘ஷாப்பிங்’ ஏரியா இன்ஸ்பெக்டர்...

சென்னை ஷாப்பிங் ஏரியாவின் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ மீது தொடர் புகார்கள் வரவே மூன்று மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்கும் டிரான்ஸ்ஃபர் உத்தரவு வந்தது. ஆனால், மூன்று மாதங்களாக அங்கிருந்து நகராமல் மேலிடத்தில் டீல் பேசிய இன்ஸ்பெக்டர், இப்போது இருவரின் டிரான்ஸ்ஃபர் உத்தரவையும் ரத்து செய்யவைத்துவிட்டார். இதுபற்றி சக காக்கிகளிடம் அவர்கள், “சும்மா ஒண்ணும் இந்த இடத்துக்கு வரலை. கோடிகளைக் கொட்டித்தான் வந்திருக்கோம். போட்ட முதலை எடுக்க வேணாமா...” என்கிறார்களாம் கோரஸாக!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கெத்து காட்டிய ‘தாம்பரம்’ நாராயணன்
சூடான எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா!

சமீபத்தில் மறைமலைநகரில் முதல்வர் கலந்துக்கொண்ட தி.மு.க பொதுக்கூட்டத்துக்கு 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆட்களைத் திரட்டிச் சென்றிருக்கிறார் ‘தாம்பரம்’ நாராயணன். இதையடுத்து, ``கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர், முதல்வர் கலந்துகொண்ட கூட்டத்தில் கூட்டத்தைக் கூட்டி சீன் போடப் பார்க்கிறாரா?” என்று சூடாகியிருக்கிறது தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா தரப்பு.

எஸ்.ஆர்.ராஜா
எஸ்.ஆர்.ராஜா

சில மாதங்களுக்கு முன்பு எஸ்.ஆர்.ராஜாவும், அவரின் மைத்துனர் காமராஜும் தன்னை தாக்கியதாக அறிவாலயத்தில் புகார் கொடுத்திருந்தார் நாராயணன். ஆனால், அந்த புகார்மீது கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காததுடன், மைத்துனர் காமராஜுக்கு கவுன்சிலர் பதவிக்கு வாய்ப்பு கொடுத்து, மண்டலத் தலைவராகவும் ஆக்கியிருக்கிறது. இதனால் கடுப்பில் இருக்கும் நாராயணன், ‘எனக்கும் கட்சியில் ஆட்கள் இருக்கிறார்கள்’ கெத்து காட்டுவதற்காகவே இப்படி ஆட்களை அழைத்துவந்தார் என்கிறார்கள் தாம்பரம் உடன்பிறப்புகள். ஏற்கெனவே ராஜாவுடன் உரசலில் இருக்கும் அமைச்சர் தரப்போ இந்த மோதலை பார்த்து உள்ளூர ரசிக்கிறதாம்!

ஆவடியில் கல்லா கட்டும் கரைவேட்டிகள்
கூட்டணி போட்ட ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள்!

ஆவடி தொகுதியில் தி.மு.க-வினருடன் அ.தி.மு.க-வினர் சிண்டிக்கேட் அமைத்துக்கொண்டு செயல்படுவதால் மக்கள் பிரச்னைகளை யாரும் கண்டுக்கொள்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஆவடி மாநகராட்சியில் மக்கள் பிரச்னைகள் குறித்த தகவல்கள் அ.தி.மு.க-வினரின் கவனத்துக்கு வந்தாலும் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

இதுகுறித்து பேசுபவர்கள், “எம்.எல்.ஏ-க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமல்ல... இந்த மாவட்டத்தின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய அமைச்சரும் அண்ட் கோ போட்டுக்கொண்டு பல பிசினஸ்களை செய்துவருகிறார்கள். அதேபோல தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வினர் கூட்டணி போட்டுக்கொண்டு ஒரு நம்பர் லாட்டரி பிசினஸில் கல்லா கட்டுகிறார்கள். கட்சியினர் என்பதால் காவல்துறையும் கண்டுக்கொள்வதில்லை” என்கிறார்கள்!

பார் டெண்டர் முறைகேடு...
ஆளுநருக்குச் சென்ற புகார்!

தி.மு.க அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புகார் ஒன்று ஆளுநருக்குச் சென்றுள்ளது. அதில், ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் பார் டெண்டரில் நடைபெற்ற முறைகேடு குறித்து எழுதியிருக்கிறார்களாம். ஈரோட்டில் சட்டவிரோதமாக பல பார்கள் செயல்பட்டுவரும் நிலையில், பார் டெண்டரை ரத்துசெய்துவிட்டு, மறு டெண்டர் நடத்த உத்தரவிடுபடியும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாஸ்மாக்
தமிழ்நாடு டாஸ்மாக்

இதற்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை பார்த்த பிறகு, மற்ற மாவட்டங்களிலிருந்தும் புகார்கள் வரிசைக் கட்டும் என்கிறார்கள் பார் உரிமையாளர்கள். ஆளும் தரப்பின் கரூர் பிரமுகரை குறிவைத்து பா.ஜ.க-வின் கரூர் பிரமுகர் தொடுத்திருக்கும் அஸ்திரங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் இதன் உள்விவரம் அறிந்தவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“எங்களை அழிச்சுத்தான் இவங்க வளரணுமா?”
கொந்தளிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்...

ஆளுங்கட்சி ஆசியுடன் கோவையில் வேகமாக வளர்ந்துவரும் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஃபைல்களுக்கு அரசு அலுவலகங்களில் ராஜ மரியாதை அளிக்கப்படுகிறதாம். அந்த நிறுவனம் அளிக்கும் லே-அவுட்களுக்கு மறு பேச்சு இல்லாமல் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மேலிடத்து குடும்பப் பிரமுகர் ஒருவரிடமிருந்தே உத்தரவு வந்துள்ளது என்கிறார்கள்.

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்

இதுபற்றி பேசும் மற்ற கட்டுமான நிறுவனத்தினரோ, “அவங்களுக்கு உடனே அனுமதி கொடுக்குறதுல எந்தப் பிரச்னையும் இல்லை... அவங்க லே-அவுட் பக்கத்துல இருக்குற சின்ன சின்ன ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் ஃபைல்களைக்கூட வேணும்னே கிடப்புல வெச்சிருக்காங்க. எங்களைப் போன்ற நிறுவனங்களை அழிச்சுத்தான் இவங்க வளரணுமா?” என்று கொந்தளிக்கிறார்கள்!

கோவில்பட்டி நமக்குதான்!
துரை வைகோ கொடுத்த கேரன்டி...

ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் துரை வைகோ, கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுவருகிறார். கோவில்பட்டியில் நடந்த செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட துரை வைகோவிடம், “இந்தத் தொகுதியில நம்ம கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி இருந்துச்சு. ஆனா, கடம்பூர் ராஜூ அதை அ.தி.மு.க பக்கம் திருப்பிட்டாரு.

துரை வைகோ
துரை வைகோ

நாம இப்பயிருந்தே ஃபீல்டு வொர்க் செஞ்சாதான் அடுத்த தேர்தல்ல கோவில்பட்டி தொகுதியை கைப்பத்த முடியும்” என்று சீனியர் நிர்வாகிகள் சொல்ல, “கவலையே படாதிங்க. அடுத்த தேர்தல்ல நாமதான் கோவில்பட்டியில போட்டியிடுறோம். நாமதான் ஜெயிக்குறோம்... அதுக்கு நான் கேரண்டி” என்று உற்சாகமாக பேசியிருக்கிறார் துரை வைகோ. இதையடுத்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தை பிடித்த உள்ளூர் சி.பி.எம் கட்சியினரோ, “அடுத்த தேர்தல் வரைக்கும் முதல்ல கட்சியை கரையாம பார்த்துக்கோங்க... அப்புறம் இங்க போட்டியிடுறதைப் பத்தி யோசிக்கலாம்” என்று கமென்ட் அடிக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism