Published:Updated:

மூக்கை நுழைக்கும் அமைச்சர் மூர்த்தி முதல் கடுப்பான புதுச்சேரி ஆளுநர் மாளிகை வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

பொதுக்குழு வரும் பின்னே... | வடக்கே போகும் பெண் அதிகாரி... | ஊட்டியில் ‘ஈவினிங் பஜார்’ | கடுப்பான புதுச்சேரி ஆளுநர் மாளிகை! | உருகும்ம் தாமரை ராஜேந்திரன்!|

மூக்கை நுழைக்கும் அமைச்சர் மூர்த்தி முதல் கடுப்பான புதுச்சேரி ஆளுநர் மாளிகை வரை! - கழுகார் அப்டேட்ஸ்

பொதுக்குழு வரும் பின்னே... | வடக்கே போகும் பெண் அதிகாரி... | ஊட்டியில் ‘ஈவினிங் பஜார்’ | கடுப்பான புதுச்சேரி ஆளுநர் மாளிகை! | உருகும்ம் தாமரை ராஜேந்திரன்!|

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
மூக்கை நுழைக்கும் அமைச்சர் மூர்த்தி...
மதுரையில் மல்லுக்கட்டு!

தி.மு.க மதுரை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக மணிமாறன் இருந்தாலும்கூட, அங்கே தன்னை மீறி எந்தக் கட்சி, அரசு நிகழ்ச்சியும் நடந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறாராம் வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான மூர்த்தி. ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளும்கூட தன் ஆட்களாகவே இருக்க வேண்டுமென நிர்பந்திப்பதாகவும் சொல்கிறார்கள். சமீபத்தில் நடந்த ஒன்றியச் செயலாளர் தேர்தலில், தன் ஆதரவாளர்களுக்குத் தெற்கு மாவட்டத்தில் பதவி கொடுக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்திருக்கிறார் மூர்த்தி.

மூர்த்தி
மூர்த்தி

அதற்கு மணிமாறன் உடன்படவில்லையாம். விவகாரம் அறிவாலயத்தில் பஞ்சாயத்துக்கு வந்தபோது, ‘உங்களோட மாவட்டத்துல, உங்களுக்கு வேண்டியவங்களுக்குப் பதவி கொடுக்க வேண்டியதுதானே... ஏன்யா மணிமாறன் ஏரியாவுல மூக்கை நுழைக்குறீங்க?’ என்று கடிந்துகொண்டாராம் சீனியர் அமைச்சர் நேரு.

பொதுக்குழு வரும் பின்னே...
புதிய பதவிகள் வரும் முன்னே!

அ.தி.மு.க ஒற்றைத் தலைமைப் பிரச்னையில் தனக்குப் பக்கபலமாக இருந்துவரும் வைத்திலிங்கத்துக்கு, இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்து அழகுபார்த்திருக்கிறார் பன்னீர். இந்தச் சூழலில், கடந்த வாரம் தஞ்சாவூரில் தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், ‘வெகு விரைவில் அனைத்துப் பதவிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமனம் செய்யவிருக்கிறோம்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

அதன் பிறகு போட்டிப் பொதுக்குழு நடக்கும். அதற்கான ஏற்பாட்டை நானே கவனித்துவருகிறேன்’ என்று கூறியிருக்கிறார். டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுக்கு ஆள் எடுப்பதுபோல, ‘நிர்வாகிகள் தேர்வு மேளா’ நடக்கப்போகிறது என்று உற்சாகத்தில் இருக்கிறார்கள் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்.

வடக்கே போகும் பெண் அதிகாரி...
இடத்தைப் பிடிக்கப் போட்டி!

தீயணைப்புத்துறையின் உச்சப் பதவியில் இருக்கும் அன்பான பெண் அதிகாரி விரைவில் வடமாநிலத்துக்கு மாறிச் செல்லவிருக்கிறாராம். அதற்கான ஃபைல் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. அன்பான அதிகாரி பணியாற்றிய இடத்தைப் பிடிக்க, சென்னையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் தீயாய் வேலை செய்கிறாராம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“நடந்தே வந்துக்குறேன்...’’
கோபப்பட்ட நெல்லை கமிஷனர்!

நெல்லை மாநகராட்சி மேயராக சரவணன் தேர்வானதும் அவருக்காக புதிய ‘இன்னோவா’ கார் வாங்கப்பட்டது. உடனே, ஐ.ஏ.எஸ் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்திக்கும் புதிதாக ‘இன்னோவா’ கார் வாங்க ஆசைவந்துவிட்டது. மாநகராட்சிக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, ‘நிதிநிலை மோசமாக இருக்கும்போது ஆணையருக்குப் புதிய கார் அவசியம்தானா?’ என தி.மு.க கவுன்சிலர்கள் கொந்தளித்துவிட்டனர்.

நெல்லை மாநகராட்சி
நெல்லை மாநகராட்சி

கடுப்பான ஆணையர் ஒரு கட்டத்தில், ‘சரிங்க விடுங்க... நான் வேணும்னா நடந்தே வந்துக்குறேன்...’ என்று காட்டமாகச் சொன்னாராம். அமைதியடைந்த கவுன்சிலர்கள், கடைசியில் புதிய காருக்கான தீர்மானத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஊட்டியில் ‘ஈவினிங் பஜார்’
முதல் நாள் திறப்பு... மறுநாள் மூடல்!

‘ஈவினிங் பஜார்’ என்ற பெயரில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை உழவர் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் நடைமுறைப்படுத்தியது. இதன்படி, நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள உழவர் சந்தையில், 10 உழவர் உற்பத்தியாளர்களுக்கு விற்பனை அனுமதி வழங்கப்பட்டது. ஈவினிங் பஜாரை, உள்ளூர் அமைச்சர் ரிப்பன் வெட்டி, திறந்தும்வைத்தார்.

மூக்கை நுழைக்கும் அமைச்சர் மூர்த்தி முதல் கடுப்பான புதுச்சேரி ஆளுநர் மாளிகை வரை! - கழுகார் அப்டேட்ஸ்

`உழவர் உற்பத்தியாளர்கள்’ என்ற பெயரில் கொஞ்சம் பொருள்களுடன் சிலர் கடையும் விரித்திருந்தனர். அமைச்சர் கிளம்பியதும் கடை விரித்தவர்களும் நடையைக்கட்ட, மறுநாள் ஈவினிங் பஜாரைத் தேடிவந்த உள்ளூர் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிட்டது. ‘திறந்த அடுத்த நாளே மூடுவதற்கு எதுக்கு இந்த வீண் பில்டப்?’ என்று கேட்கிறார்கள் ஊட்டி மக்கள்.

சாவர்க்கர் உருவ பொம்மை எரிப்பு...
கடுப்பான புதுச்சேரி ஆளுநர் மாளிகை!

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுவரும் தியாகச் சுவரில் ஆளுநர் தமிழிசை, சாவர்க்கரின் பெயர்ப் பலகையைப் பதித்த விவகாரம் கடும் விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, ‘பெரியார் சிந்தனையாளர் இயக்கம்’ என்ற அமைப்பினர் சாவர்க்கரின் உருவ பொம்மையை எரித்திருக்கின்றனர். உஷ்ணமான ஆளுநர் மாளிகை, ‘சாவர்க்கரும் தேசத்தந்தைதான்.

மூக்கை நுழைக்கும் அமைச்சர் மூர்த்தி முதல் கடுப்பான புதுச்சேரி ஆளுநர் மாளிகை வரை! - கழுகார் அப்டேட்ஸ்

அவர் உருவ பொம்மையை எரித்தவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறது. அதையடுத்து மதக் கலவரத்தைத் தூண்டினார்கள் என்று ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு போட்டு ஏழு பேரைக் கைதுசெய்தது காவல்துறை. ஆனால், ‘இதில் எங்கே மதக் கலவரம் இருக்கிறது?’ என்று கேள்வியெழுப்பிய நீதிமன்றம், அவர்களை மறுநாளே விடுவித்துவிட்டது. அதனால் ஆளுநர் மாளிகை அதிருப்தியில் இருக்கிறதாம்.

“எடப்பாடிக்குத்தான் விஸ்வாசமாக இருப்பேன்...”
உருகும் தாமரை ராஜேந்திரன்!

அரியலூர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தாமரை ராஜேந்திரன், ஒருகாலத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் தீவிர விஸ்வாசியாக வலம்வந்தவர். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவு கொடுத்த சில நாள்களிலேயே, இ.பி.எஸ்-ஸுக்கே அமோக ஆதரவு இருப்பதைப் புரிந்துகொண்டு எடப்பாடி பக்கம் தாவிவிட்டார் தாமரை ராஜேந்திரன்.

தாமரை ராஜேந்திரன்
தாமரை ராஜேந்திரன்

இந்த நிலையில், பெரம்பலூர் ஆர்.டி.ராமசந்திரனிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார் எடப்பாடி. இதனால் அதிர்ந்துபோன தாமரை ராஜேந்திரன், தனது பதவியும் பறிக்கப்படலாம் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகிய முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்தாராம். அவர்களிடம், “நான் எப்போதும் எடப்பாடி அண்ணனுக்குத்தான் விஸ்வாசமாக இருப்பேன். வைத்திலிங்கம் நெருக்கடி கொடுத்ததால்தான் முதலில் ஓ.பி.எஸ் அணிக்குச் சென்றேனே தவிர, முழுமனதோடு செல்லவில்லை. எனது மா.செ பதவியைப் பறித்துவிட வேண்டாம்” என்று உருகிவருகிறாராம்.