Published:Updated:

எடப்பாடி மீதான அதிருப்தியில் முனுசாமி | தலைமையிடம் பற்றவைத்த பி.டி.ஆர் தரப்பு - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

சசிகலா – எடப்பாடி போட்டா போட்டி! | எடப்பாடி மீதான கோபத்தில் முனுசாமி... எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைப் புறக்கணித்த பின்னணி! | தலைமையிடம் பற்றவைத்த பி.டி.ஆர் தரப்பு! | “என் மனைவியை அபகரிச்சுட்டார்...” | தூதுவிட்ட பெண் தொழிலதிபர்...

எடப்பாடி மீதான அதிருப்தியில் முனுசாமி | தலைமையிடம் பற்றவைத்த பி.டி.ஆர் தரப்பு - கழுகார் அப்டேட்ஸ்

சசிகலா – எடப்பாடி போட்டா போட்டி! | எடப்பாடி மீதான கோபத்தில் முனுசாமி... எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைப் புறக்கணித்த பின்னணி! | தலைமையிடம் பற்றவைத்த பி.டி.ஆர் தரப்பு! | “என் மனைவியை அபகரிச்சுட்டார்...” | தூதுவிட்ட பெண் தொழிலதிபர்...

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
எம்.ஜி.ஆர் இல்லத்தில் அ.தி.மு.க ஆண்டுவிழா...

அ.தி.மு.க ஐம்பதாவது ஆண்டு நிறைவுவிழா மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை சென்னை ராமாவரத்திலுள்ள எம்.ஜி.ஆர் இல்ல வளாகத்தில் இருக்கும் பள்ளி ஆடிட்டோரியத்தில் கொண்டாட முடிவுசெய்தார் சசிகலா. ஆனால், பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்திருக்கிறது. இதனால், தோட்டத்தில் எம்.ஜி.ஆர் சிலை இருக்கும் வளாகத்தில் மேடை அமைத்து விழா நடத்த முடிவுசெய்து அதற்கான பணிகளைச் செய்துவருகிறது சசிகலா தரப்பு. இது ஒருபுறமிருக்க, அதேநாளில், “எம்.ஜி.ஆர் வீட்டில் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கவிருக்கிறார். அதற்கு அனுமதிக்க வேண்டும்” என சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவர் மணப்பாக்கம் காமராஜ் போலீஸ் அனுமதி கேட்டிருக்கிறார்.

சசிகலா, எடப்பாடி பழனிசாமி
சசிகலா, எடப்பாடி பழனிசாமி

ஆனால், “எங்கள் வளாகத்தில் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுவிழா நடப்பதால் வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது” என அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டருக்குக் கடிதம் எழுதியிருக்கிறது பள்ளி நிர்வாகம். `நம்முடைய ஆட்சியாக இருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?’ என்று கேட்கிறது எடப்பாடி தரப்பு.

எடப்பாடி மீதான கோபத்தில் முனுசாமி...
எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைப் புறக்கணித்த பின்னணி!

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி நடத்திய அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், மா.செ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி. கடந்த மாதம் டெல்லிக்குச் சென்று அமித் ஷாவைச் சந்தித்தபோது வேலுமணியையும், சி.வி.சண்முகத்தையும் அழைத்துச் சென்றிருந்தார் எடப்பாடி. சி.வி.சண்முகத்தை அழைத்துச் சென்றது கே.பி.முனுசாமியைக் கோபப்படுத்தியிருக்கிறதாம்.

எடப்பாடி மீதான அதிருப்தியில் முனுசாமி | தலைமையிடம் பற்றவைத்த பி.டி.ஆர் தரப்பு - கழுகார் அப்டேட்ஸ்

தொடர்ந்து, சி.வி.சண்முகத்தின் ஆதிக்கம் கட்சிக்குள் அதிகமாவதை கே.பி.முனுசாமி ரசிக்கவில்லையாம். வன்னியர் பிரதிநிதியாகத் தன்னைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறாராம் அவர். அந்தக் கோபத்தில்தான் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், மா.செ-க்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள் கட்சியில் சிலர்.

பா.ஜ.க., அ.தி.முக-விடம் நெருக்கம் காட்டும் மூர்த்தி...
தலைமையிடம் பற்றவைத்த பி.டி.ஆர் தரப்பு!

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை விமர்சிக்கும் மதுரை மாவட்ட பா.ஜ.க-வினர், மற்றொரு தி.மு.க அமைச்சரான பி.மூர்த்தியை மட்டும் விமர்சிப்பதே இல்லை. காரணம், மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவர் சுசீந்திரன் பி.மூர்த்தியின் உறவினராம். மாநில நிர்வாகி ராம ஸ்ரீனிவாசனும் மூர்த்திக்கு நெருக்கமானவர். மூர்த்தி வீட்டுத் திருமணத்தில் ராம ஸ்ரீனிவாசனும் சுசீந்திரனும் கலந்துகொண்டது மட்டுமல்ல, பா.ஜ.க-விலுள்ள நிர்வாகிகளையும் அழைத்துச் சென்றதுகூட இதனால்தானாம்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

இதேபோல முன்னாள் அதி.மு.க அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரிடமும் அநியாயத்துக்கு நெருக்கம் காட்டுகிறாராம் மூர்த்தி. இவையெல்லாவற்றையும் தலைமையிடம் சுட்டிக்காட்டி, “மூர்த்தி பா.ஜ.க-வுக்கு இணக்கமாகச் செல்கிறார்” என தலைமையிடம் பற்றவைத்திருக்கிறது பி.டி.ஆர் தரப்பு. என்ன பதில் சொல்லிச் சமாளிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறது மூர்த்தி தரப்பு!

“என் மனைவியை அபகரிச்சுட்டார்...”
மாவட்ட நிர்வாகிமீது புகார் சொல்லும் உடன்பிறப்பு!

மேற்கே தி.மு.க மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர், பெண்கள் விஷயத்தில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டேயிருக்கிறார். ஏற்கெனவே கட்சிக்குள் பல பெண்கள் அவர்மீது புகார் தெரிவித்திருந்தனர். தற்போது தன்னிடம் புகார் தெரிவிக்க வந்த திருமணமான பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாக, அவர்மீது மீண்டும் புகார் கிளம்பியிருக்கிறது. அவரது வயதில் பாதிதான் அந்தப் பெண்ணின் வயது.

திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில், தன்னுடன் பழக்கமான பிறகு, அந்தப் பெண்ணைக் கணவனிடமிருந்து பிரித்து, தனியாக வீடு எடுத்துக் கொடுத்திருக்கிறாராம் அந்த உடன்பிறப்பு. ‘என் சம்சாரத்தை அபகரிச்சுட்டார்’ என அந்தப் பெண்ணின் கணவர், தலைமைக் கழகம் வரை முறையிட்டுவருகிறாராம்.

தூதுவிட்ட பெண் தொழிலதிபர்...

மேற்கே அ.தி.மு.க முன்னாள் அமைச்சரிடம் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர் அந்தப் பெண் தொழிலதிபர். ஆட்சி மாறியதும் அந்த முன்னாள் அமைச்சர் குறிவைக்கப்பட்டதால், அந்தப் பெண் ஆளுங்கட்சிப் பக்கம் சாய்ந்தார். அதன் பிறகும் மாஜி தொடர்புடைய ரெய்டின்போது, அந்தப் பெண் தொழிலதிபர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதைத் துளியும் எதிர்பாராத அந்தத் தொழிலதிபர், முதன்மையானவரின் குடும்பத்துக்கு சமரசம் பேச தொடர்ந்து தூது அனுப்பிவந்தாராம். தூது வெற்றியில் முடிய சகோதரி நிர்வாகியை, அந்தப் பெண் தொழிலதிபரின் நிர்வாகம் சார்ந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினாராக அனுப்பிவைத்திருக்கிறது மேலிடம். இதனால் குஷியில் இருக்கிறாராம் அந்தப் பெண் தொழிலதிபர்.