Published:Updated:

'வாரிசு' செய்த சிபாரிசு முதல் அணி மாறத் தயாராகும் வேல்முருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்!

தி.மு.க ஆதரவு ஐ.டி அதிகாரிதான் காரணமா? | அமைச்சர் செயலைப் பார்த்துப் புலம்பும் உ.பி-க்கள்! | இருட்டுக்குள் காத்திருந்த கலெக்டர், எஸ்.பி! | மாஜியைக் கைகாட்டும் இன்னாள் எம்.எல்.ஏ! | முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டல்! |

'வாரிசு' செய்த சிபாரிசு முதல் அணி மாறத் தயாராகும் வேல்முருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

தி.மு.க ஆதரவு ஐ.டி அதிகாரிதான் காரணமா? | அமைச்சர் செயலைப் பார்த்துப் புலம்பும் உ.பி-க்கள்! | இருட்டுக்குள் காத்திருந்த கலெக்டர், எஸ்.பி! | மாஜியைக் கைகாட்டும் இன்னாள் எம்.எல்.ஏ! | முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டல்! |

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்!
அ.தி.மு.க-வினர் மீதான ரெய்டு...
தி.மு.க ஆதரவு ஐ.டி அதிகாரிதான் காரணமா?

அ.தி.மு.க-வை கதிகலங்கவைத்த சமீபத்திய ரெய்டுக்கு, ‘நெஞ்சுக்குள் ராமரை வைத்திருக்கும்’ கடவுளின் பெயர்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிதான் மூளையாகச் செயல்பட்டாராம். 10 ஆண்டுகளுக்கு மேல் சென்னையிலேயே பணியில் இருக்கும் அவர்மீது, ‘தி.மு.க முக்கியப்புள்ளியோடு நெருக்கமாக இருக்கிறார்’ என்று புகார் மேல் புகார் அனுப்பியிருக்கிறார்கள் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர். அடுத்த ஆண்டு மார்ச்சில் ஓய்வுபெறவிருக்கும் அவரை அதற்கு முன்பே மாற்றிவிட வேண்டும் என்ற திட்டத்தோடு தீயாய் வேலை செய்கிறார்களாம் சிலர்.

ஒலிம்பியாட் டெண்டர்...
‘வாரிசு’ செய்த சிபாரிசு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாக டெண்டர் விடப்படும்போது, குறைந்த தொகையை யார் ‘கோட்’ செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் டெண்டர் ஒதுக்கப்படும். சில சமயம், ஆளுங்கட்சிக்கு நெருக்கமான நிறுவனம் என்றால், டெண்டர் விதியே திடீரென மாற்றியமைக்கப்படும். புதுவிதமான கூத்து சமீபத்தில் நடந்திருக்கிறது. உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கும் அரங்கில், லைட் செட்டிங் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டது. அதில், குறைவான தொகையை ‘கோட்’ செய்து முதலிடத்தில் ஒரு நிறுவனம் இருந்ததாம்.

'வாரிசு' செய்த சிபாரிசு முதல் அணி மாறத் தயாராகும் வேல்முருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

அதைப் புறக்கணித்துவிட்டு மூன்றாம் இடத்தில் இருந்த ஒரு பெண் நடத்திவரும் நிறுவனத்துக்கு டெண்டர் இறுதிசெய்யப்பட்டுவிட்டதாம். சினிமா விழாக்களுக்கு அரங்கு மற்றும் லைட் செட் அமைக்கும் அந்தப் பெண், ‘வாரிசு’ வழியாகவே இந்த வாய்ப்பைப் பெற்றதாகச் சொல்கிறார்கள்!

இதெல்லாம் நல்லாவா இருக்கு?
அமைச்சர் செயலைப் பார்த்துப் புலம்பும் உ.பி-க்கள்!

வட மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இனிஷியல் அமைச்சர், மாவட்டத் தலைநகருக்கு வரும்போதெல்லாம் விருந்தினர் இல்லத்தில்தான் இளைப்பாறுவாராம். அப்படி பத்து நாள்களுக்கு முன்பு வந்த அமைச்சருக்கு, ‘சீறும்’ கட்சியில் புதிதாகச் சேர்ந்த ஒரு பெண் கவுன்சிலர், வீட்டு உணவைக் கொண்டுவந்து பரிமாறியிருக்கிறார். அந்த அன்பை அங்கீகரிக்கும்விதமாக, சமீபத்தில் நடைபெற்ற ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்கிற அரசு நிகழ்ச்சியில், மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, அந்தப் பெண் கவுன்சிலரை தனதருகில் நிற்கவைத்தாராம் அமைச்சர். புரோட்டாகாலை மீறி அமைச்சர் இப்படி நடந்துகொண்டதற்கு ‘சீறும்’ கட்சி நிர்வாகிகளே முகம் சுளிக்கிறார்களாம். ‘இதெல்லாம் நல்லாவா இருக்கு?’ என்று அமைச்சரின் ஆதரவாளர்களும் புலம்பிவருகிறார்களாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உதயநிதி வருகை...
இருட்டுக்குள் காத்திருந்த கலெக்டர், எஸ்.பி!

ஜூலை 13-ம் தேதி இரவு, வேலூர் மாவட்டம், அணைக்கட்டுப் பகுதியில் நடைபெற்ற தி.மு.க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு தி.மு.க-வினர் வழிநெடுக பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

'வாரிசு' செய்த சிபாரிசு முதல் அணி மாறத் தயாராகும் வேல்முருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதியின் வழியாக உதயநிதி விழா அரங்குக்குச் சென்றுகொண்டிருந்தபோது, இருள் சூழ்ந்த பகுதியில் நின்றிருந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனும், எஸ்.பி ராஜேஸ்கண்ணனும் உதயநிதியை வரவேற்றிருக்கிறார்கள். இந்த விவகாரம் வெளியில் கசியவே, உதயநிதியுடன் வந்த கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை வரவேற்பதற்காகவே காத்திருந்ததாகக் காரணம் சொல்லியிருக்கிறார்கள்!

நகரைச் சூழ்ந்த வெள்ளம்...
மாஜியைக் கைகாட்டும் இன்னாள் எம்.எல்.ஏ!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு நகரைச் சமீபத்தில் வெள்ளம் சூழ்ந்தது. “செயல்படாத முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-தான் இந்த அவலநிலைக்குக் காரணம்” என்று விமர்சித்திருக்கிறார் இன்றைய அ.தி.மு.க எம்.எல்.ஏ. “நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. எனக்கு எந்த ஃபண்டும் கிடைப்பதில்லை” எனச் சொல்லியே அந்த தி.மு.க எம்.எல்.ஏ கடந்த 10 ஆண்டுகளை ஒப்பேற்றினாராம்.

'வாரிசு' செய்த சிபாரிசு முதல் அணி மாறத் தயாராகும் வேல்முருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

“அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவரைக் கொண்டுவந்தால், இவரும் காரணம் சொல்லியே கடுப்பேத்துகிறாரே...” என்று புலம்புகிறார்கள் தொகுதி மக்கள்.

”பார் நடத்த இடம் தராவிட்டால்...”
முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டல்!

தஞ்சை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில், ராஜராஜசோழன் மணிமண்டபம் அருகே ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. செம கூட்டம், நல்ல வருமானமுள்ள கடை இது. இந்தக் கடை அருகிலேயே பார் போட விரும்பிய ஒருவர், நில உரிமையாளரிடம் பேசியிருக்கிறார். “அதெல்லாம் வேணாமுங்க... விருப்பம் இல்லை” என்று நாகரிகமாக மறுத்திருக்கிறார் உரிமையாளர். “நான் யார் தெரியுமா... என்னுடைய மச்சான் முதல்வர் வீட்டில் வேலை பார்க்கிறார்... ஜாக்கிரதை!” என்று சொல்லி மிரட்டுகிறாராம் அந்தப் புள்ளி.

“நிலத்தைக் கொடுத்தால் திரும்பக் கிடைக்குமா... போலீஸுக்குப் போகலாமா... அல்லது நேரடியாக முதல்வரிடமே முறையிடலாமா?” என்று புலம்பித் தவிக்கிறார் நிலத்தின் உரிமையாளர்!

“தி.மு.க-வுக்கு ‘சிங் சாங்’ அடிக்க மாட்டேன்...”
அணி மாறத் தயாராகும் வேல்முருகன்!

பண்ருட்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வான தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், நெய்வேலி எம்.எல்.ஏ சபாராஜேந்திரன் ஆகியோரைத் தாண்டி எதுவுமே செய்ய முடியாததுதான் அதற்குக் காரணமாம். கடந்த 10-ம் தேதி சேத்தியாதோப்பில் என்.எல்.சி நிர்வாகத்துக்கு எதிரான கூட்டத்தில் ஆட்சிக்கு எதிராக வெடித்துவிட்டார் வேல்முருகன்.

வேல்முருகன்
வேல்முருகன்

“திராவிட மாடலுக்கு அடித்தளமிட்டு தி.மு.க-வைத் தூக்கிச் சுமந்த வன்னியர் சமுதாயத்துக்கு கலெக்டர், ஐ.ஜி., எஸ்.பி., வாரியத் தலைவர் என எந்தப் பதவியும் வழங்கப்படுவதில்லை. சீட்டுக்காக, நோட்டுக்காக, பதவிக்காக என் கண்முன்னால் அநியாயங்கள் நடந்தால் அதைப் பொறுத்துக்கொண்டு கூட்டணிக் கட்சிக்காக ‘சிங் சாங்’ அடிக்க மாட்டேன்” என்று பொரிந்து தள்ளிவிட்டார். ஒரு கட்டத்தில், “ராமதாஸ் செய்த தவற்றுக்காக இரண்டு கோடி வன்னியர்களை ஒதுக்குவது, அவர்களுக்கு அரசியல் உரிமைகளைத் தர மறுப்பது எந்த வகையில் நியாயம்?” என்றும் பொங்கினார். 2024 தேர்தலுக்குள் அவர் அணி மாறக்கூடும் என்கிறார்கள்!