Published:Updated:

கிராவல் கொள்ளையில் டெல்லி பிரதிநிதி முதல் வாடிவாசல் தாண்டாத காளையான ஆளுநர் வரை - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

அபகரிப்பு வழக்கில் சிக்கிய மாஜி | பர்மிட் ஓரிடம்... அள்ளுவது வேறிடம் | தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன் | வாடிவாசல் தாண்டாத காளை... ஆளுநர் நிகழ்ச்சி ரத்தான பின்னணி! | “அந்தப் பாட்டை ஏன்ய்யா போட்ட...” டென்ஷனான அமைச்சர் நாசர்! | கழுகார் அப்டேட்ஸ்

கிராவல் கொள்ளையில் டெல்லி பிரதிநிதி முதல் வாடிவாசல் தாண்டாத காளையான ஆளுநர் வரை - கழுகார் அப்டேட்ஸ்

அபகரிப்பு வழக்கில் சிக்கிய மாஜி | பர்மிட் ஓரிடம்... அள்ளுவது வேறிடம் | தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன் | வாடிவாசல் தாண்டாத காளை... ஆளுநர் நிகழ்ச்சி ரத்தான பின்னணி! | “அந்தப் பாட்டை ஏன்ய்யா போட்ட...” டென்ஷனான அமைச்சர் நாசர்! | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
அபகரிப்பு வழக்கில் சிக்கிய மாஜி...
காப்பாற்றிய கொங்கு அமைச்சர்!

மலை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க மாஜி அமைச்சர் ஒருவர், தனது பக்கத்துத் தோட்டத்தை அத்துமீறி அபரிக்க முயன்றிருக்கிறார். தோட்ட உரிமையாளர்கள் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் மாஜி மீது நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சொந்த ஊர் ஸ்டேஷனில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பதறிப்போன மாஜி, தனது பழைய நண்பரும், தற்போது அமைச்சராக இருப்பவருமான கொங்குப் பிரமுகரிடம் உதவி கேட்டு மன்றாடியிருக்கிறார். “தாய்க் கழகத்தைச் சேர்ந்த ஆள் நீங்க. உங்களுக்கு இந்த உதவிகூடச் செய்யலைன்னா எப்படி...” என கூலாகச் சொன்ன கொங்கு அமைச்சர், உடனடியாகக் காவல் அதிகாரிகளுக்கு போன் போட்டு கைது நடவடிக்கையைத் தடுத்துவிட்டாராம். கைதிலிருந்து தப்பிய மாஜி, கொங்கு அமைச்சரின் ‘பவர்’ பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கிறாராம்.

பர்மிட் ஓரிடம்... அள்ளுவது வேறிடம்...
கிராவல் கொள்ளைக்கு உதவும் டெல்லி பிரதிநிதி!

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியத்திலுள்ள வரதராஜபுரத்திலுள்ள பட்டா நிலத்தில் மண் எடுப்பதாக பர்மிட் வாங்கிக்கொண்டு, வெண்ணந்தூர் ஒன்றியத்திலுள்ள கோம்பைக்காடு என்ற பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கிராவல் மண்ணைக் கொள்ளையடிப்பதாக `பகீர்’ புகார் கிளம்பியிருக்கிறது. இந்த மண் கொள்ளையில், அங்கிருக்கும் எளிய மக்களுக்கு அரசு வழங்கிய வீட்டுமனை இடங்களும் தப்பவில்லை. இதற்காக, 250 மரங்கள் வெட்டப்பட்டிருப்பதோடு, பாறைகளும் உடைக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

கிராவல் கொள்ளையில் டெல்லி பிரதிநிதி முதல் வாடிவாசல் தாண்டாத காளையான ஆளுநர் வரை - கழுகார் அப்டேட்ஸ்

“பெரிய குடும்பத்தின் ஆன்மிகப் பயணங்களுக்குத் துணை நின்றே பெரிய பதவி வாங்கிய டெல்லி பிரதிநிதி ஒருவர், இந்த மண் கொள்ளையர்களுக்கு அரணாக இருக்கிறார்” என்கிறது அதிகாரிகள் வட்டாரம். பிரச்னை பெரிதானால் கடைசியில் தங்கள் தலைதான் உருளும் என முன்னெச்சரிக்கையாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த வருவாய் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரிடம் இது பற்றிப் புகார் செய்திருக்கிறார்களாம். ஆனால், நடவடிக்கைதான் இல்லை!

தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்...
உட்கட்சிப்பூசலா... தேர்தல் கணக்கா?

தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல்போல முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளையும் பொங்கலிட்டுக் கொண்டாடுவது மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளின் வழக்கம். இப்படி தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிலுள்ள அவரின் நினைவு மண்டபத்தில் நடந்த விழாவுக்கு பொறுப்பு அமைச்சரான ஐ.பெரியசாமி வந்தபோது, தெற்கு மாவட்டச் செயலாளரும், கம்பம் எம்.எல்.ஏ-வுமான ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், கம்பம் செல்வேந்திரன் ஆகியோரும் உடன் வந்திருந்திருந்தனர்.

கிராவல் கொள்ளையில் டெல்லி பிரதிநிதி முதல் வாடிவாசல் தாண்டாத காளையான ஆளுநர் வரை - கழுகார் அப்டேட்ஸ்

இதில் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மட்டும் மிஸ்ஸிங். “மாநிலங்களவை எம்.பி சீட்தான் கிடைக்கவில்லை... 2024 எம்.பி தேர்தலிலாவது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் தங்க தமிழ்ச்செல்வன். அந்த சீட்டையும் முன்னாள் எம்.பி ஒருவருக்குத் தள்ளிவிடப் பார்க்கிறார்கள். அந்தக் கடுப்பில்தான், இவர்களோடு அவர் வரவில்லை. தன்னுடைய ஆதரவாளர்களுடன் தனியாக பொங்கல் கொண்டாடியிருக்கிறார்” என்கிறது தேனி தி.மு.க வட்டாரம்.

வாடிவாசல் தாண்டாத காளை...
ஆளுநர் நிகழ்ச்சி ரத்தான பின்னணி!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டிலும் சில அரசியல் கூத்துகளை அரங்கேற்றலாம் என்ற கனவோடு திட்டமிடப்பட்ட, ஆளுநர் ரவி-யின் வருகை ரத்துசெய்யப்பட்டதன் பின்னணியில் பல விஷயங்கள் பேசப்படுகின்றன. தமிழகம் முழுவதுமுள்ள பா.ஜ.க-வினர் மதுரைக்கு வர உத்தரவிடப்பட்டிருப்பதை அறிந்த அறிவாலயம் தரப்பு, `ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஆளுநருக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு ஏற்பாடுகளைச் செய்யுங்கள்’ என்று தென் மாவட்ட அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

கூடவே, கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும், பெரியாரிய, தமிழ் உணர்வாளர்களும் ஆளுநருக்கு எதிராக முழக்கமிடவும், பதாகைகள் காட்டவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம்’ என்று மத்திய உளவுத்துறையினர் தகவல் கொடுத்ததால்தான், ஆளுநரின் அவனியாபுரம் வருகை ரத்துசெய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்!

``அந்தப் பாட்டை ஏன்ய்யா போட்ட...”
டென்ஷனான அமைச்சர் நாசர்!

திருவேற்காடு நகர தி.மு.க சார்பில் சமீபத்தில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. விழாவில் அமைச்சர் நாசர் தமிழ் மொழியின் அருமை பெருமைகளையெல்லாம் அள்ளிவிட்டிருக்கிறார். அதன் பிறகு நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் ஒலிப்பரப்பட்ட பாடலால் (சம்ஸ்கிருதம்) அமைச்சர் டென்ஷனாகிவிட்டாராம். மைக்கைப் பிடித்தவர், “இவ்வளவு நேரம் தமிழ் தமிழ்னு பேசினேன். ஆனா, இப்படிப் பிற மொழி பாடலைப் போட்டு தமிழை அவமானப்படுத்துறீங்க.

நாசர்
நாசர்

அதைச் செய்யாதீங்க” என விழா நிர்வாகிகளை கடிந்துகொண்டிருக்கிறார். “நிலைமை புரியாம அந்தப் பாட்டை ஏன்ய்யா போட்ட... அமைச்சர் ரசித்தார்னு நாளைக்கு பேப்பர்ல வர்றதுக்கா...” எனத் தனியாக சில நிர்வாகிகளுக்கு டோஸ் விட்டதாகவும் சொல்கிறார்கள். அமைச்சர் படு உஷாரான ஆளுதான் என்கிறார்கள் உடன்பிறப்புகள்!