Published:Updated:

வசூல் பொறுப்பாளர்களை நியமித்த அமைச்சர் டு அரசை விமர்சிக்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ |கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்! பின்னணி என்ன? | அரசை விமர்சிக்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ... | பரிந்துரைக் கடிதம் தந்த எம்.எல்.ஏ... ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நிர்வாகி! | கடுப்பேற்றிய கோயில் நிர்வாகம்... கடுகடுத்த அமைச்சர்! | கழுகார் அப்டேட்ஸ்

வசூல் பொறுப்பாளர்களை நியமித்த அமைச்சர் டு அரசை விமர்சிக்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ |கழுகார் அப்டேட்ஸ்

ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்! பின்னணி என்ன? | அரசை விமர்சிக்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ... | பரிந்துரைக் கடிதம் தந்த எம்.எல்.ஏ... ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நிர்வாகி! | கடுப்பேற்றிய கோயில் நிர்வாகம்... கடுகடுத்த அமைச்சர்! | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
‘வசூல் பொறுப்பாளர்’களை நியமித்த அமைச்சர்...
புலம்பும் உடன்பிறப்புகள்!

லாபி அமைச்சர் பொறுப்பில் வரும் ஊரில், அனைத்து விஷயங்களையும் கவனிக்க அவரின் சொந்த ஊர்க்காரர்களையே நியமித்திருக்கிறாராம். கடந்த ஆட்சிக்காலத்தில் மாதம் 50,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரைதான் டாஸ்மாக் பார்களிலிருந்து கட்டிங் சென்றுகொண்டிருந்ததாம்.

லஞ்சம்
லஞ்சம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், தற்போது அதே பார்களுக்குக் குறைந்தபட்சம் மாதம் 3,00,000 ரூபாய் வரை கட்டிங் கேட்டு கறார் காட்டுகிறார்களாம் அமைச்சரின் ஊர்க்காரர்கள். ‘அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என இவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளைத் தாங்கமுடியவில்லை’ என அந்த மண்டலம் முழுவதும் புலம்பல் சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது!

ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்!
பின்னணி என்ன?

ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாறுதலுக்கு உளவுத்துறை கொடுத்திருந்த ரிப்போர்ட்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். தென்சென்னை பொறுப்பிலிருந்த அவதாரப் பெயர்கொண்ட அதிகாரி, ஏற்கெனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தனியார் பல்கலைக்கழகத்தோடு தொடர்புடைய ஒருவரிடம் இரிடியம் டீலிங் வைத்திருந்ததுதான் இவர் இடம் மாற்றப்பட்டதற்கான பின்னணி என்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் எஸ்.பி ஒருவர் இடம் மாற்றப்பட்டிருக்கிறார். கொங்கு மண்டலத்தின் அதிகார மையமான அமைச்சருடன் நெருக்கமாக இருந்து மணல் முதல் அனைத்து டீலிங்குகளிலும் விசுவாசமாகவே செயல்பட்டாராம். ஆனாலும், சமீபத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அசைன்மென்ட்டைச் சரிவரச் செய்யவில்லையாம். இதனால் அமைச்சர் தரப்பு கடுப்பானதாலும், ஏற்கெனவே இவர் குறித்து ஏராளமான புகார்கள் உயரதிகாரிகளுக்குச் சென்றிருந்ததாலும் சட்டம்-ஒழுங்கிலிருந்து வேறொரு பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க ஆர்ப்பாட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்ட ஐ.பி.எஸ் அதிகாரியும் இடம் மாற்றப்பட்டிருக்கிறார்.

இது தவிர, துறை சார்ந்து புதிதாகச் சில பணியிடங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதில், சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகமாக நடப்பதால், அவற்றை விசாரிப்பதற்கென்றே தனியாகத் துணை கமிஷனர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

அரசை விமர்சிக்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ...
பதவியைப் பறிக்கத் தயாராகும் தலைமை!

தலைநகரை ஒட்டிய மாவட்டத்தின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வும், அவரின் குடும்பத்தினரும் சொந்தக் கட்சியினரிடமே அதிக கெடுபிடி காட்டிவருகிறார்களாம். இவர்கள் வைப்பதுதான் சட்டம் என்கிற ரேஞ்சில், கொடிகட்டிப் பறக்கும் அதிகாரத்தைக் கண்டு சொந்தக் கட்சியினரே கடும் அதிருப்தியிலிருக்கிறார்களாம். மேலும், அரசு விழாக்களில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல், ஆளும் அரசை விமர்சித்து எம்.எல்.ஏ பேசியிருப்பதும் இப்போது கூடுதல் சர்ச்சையாகியிருக்கிறது. இது குறித்தெல்லாம் தலைமைக்குப் புகார்களைப் பறக்கவிட்டிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். இதனால் விரைவில் அவரின் மா.செ பதவி பறிபோகலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பரிந்துரைக் கடிதம் தந்த எம்.எல்.ஏ...
ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நிர்வாகி!

அருவி மாவட்டத்திலுள்ள கோயில் தொகுதி எம்.எல்.ஏ., சமீபத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரிக்குக் கொடுத்த சிபாரிசுக் கடிதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ‘சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடக்கும் இரு பணிகளுக்கான ஒப்பந்தங்களை, பல்லவ அரசர் பெயர்கொண்டவருக்கு ஒதுக்கீடு செய்துகொடுங்கள்’ எனக் குறிப்பிட்டுக் கடிதம் கொடுத்திருக்கிறார் எம்.எல்.ஏ. மேலும், இந்தச் சிபாரிசுக் கடிதத்தையும் அதே பல்லவ அரசர் மூலமாகவே வட்டார வளர்ச்சி அதிகாரிக்குக் கொடுத்தனுப்பியிருக்கிறார் எம்.எல்.ஏ. தனக்காக எம்.எல்.ஏ செய்த உதவியால் உற்சாகத்தின் உச்சிக்கே போன பல்லவ அரசர், எம்.எல்.ஏ-வுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி, ‘இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்’ என காமெடிக் கதையாக ஃபேஸ்புக்கிலும் அதைப் பதிவிட்டுவிட்டார்.

இப்போது எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து விளாசி வருகிறார்கள். ‘‘உனக்கு உதவி செஞ்சதுக்கு என்னைய நல்லா வெச்சுசெஞ்சுட்டீல்ல... இனி யாரும் எந்த உதவியும் கேட்டு என் வீட்டுப்பக்கம் வந்துடாதீங்க’’ என கொதித்திருக்கிறார் எம்.எல்.ஏ!

டாஸ்மாக் கொண்டுவர மக்கள் எதிர்ப்பு...
என்ன செய்தும் கொண்டுவரத் துடிக்கும் எம்.எல்.ஏ!

அரிதான மாவட்டத்திலிருக்கும் வெற்றித் தொகுதி எம்.எல்.ஏ., தன் தொகுதியில் மக்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடையைக் கொண்டுவர தீவிர முனைப்பு காட்டிவருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களும், தமிழ் அமைப்பினரும், சில கட்சியினரும் வீதியில் வந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனால், ‘யார் என்ன செய்தாலும் எனக்குக் கவலை இல்லை’ என்கிற நோக்கில், ‘டாஸ்மாக்கைக் கொண்டுவந்தே தீருவது’ என்று காவல்துறையிலிருக்கும் ஓர் உச்ச அதிகாரி, கலால், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் எம்.எல்.ஏ. கடந்த ஆட்சியின்போது, ‘இந்த இடத்தில் டாஸ்மாக் வராது’ என்று உத்தரவாதம் கொடுத்தவர்களே, இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு ‘கடையைக் கொண்டுவரத் துடிக்கிறார்களே...’ என விசனப்படுகிறார்கள் மக்கள்!

கடுப்பேற்றிய கோயில் நிர்வாகம்...
கடுகடுத்த அமைச்சர்!

பவனி சர்ச்சையை அடுத்து, சம்பந்தப்பட்ட கோயிலுக்கு ஆய்வுக்குச் சென்ற அமைச்சருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லையாம். சந்நிதானம் அமர்வதற்குப் பலகை இருக்கையை அமைத்திருந்தவர்கள் அமைச்சர் அமர்வதற்கு எந்தவித இருக்கை வசதியையும் செய்யவில்லையாம். இதனால் கோபப்பட்ட அமைச்சர், தனக்கும் ஒரு பலகையைப் போடச் சொன்னதோடு ‘கோயிலை ஏன் சரியாகப் பராமரிக்கவில்லை...’ எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொதித்துவிட்டாராம். “ஆய்வு முடியும் வரையிலும் ‘இருக்கை டென்ஷன் விவகாரத்தால்’ மிகக் கடுப்பாகவே நடந்துகொண்டார் அமைச்சர்” என்கிறார்கள்!

அ.தி.மு.க கொடிகளைக் கிழித்தெறிந்த
முன்னாள் அமைச்சர்!

விழுப்புரம் மாவட்டத்தில் இலைக் கட்சி நிர்வாகி ஒருவர், அண்மையில் சின்ன தலைவி தரப்புக்குத் தாவியிருந்தார். இந்த நிலையில், தனது இல்லத் திருமண விழாவுக்கு வருகைதந்த சின்ன தலைவிக்கு வரவேற்பளிக்க, இலைக் கட்சியின் கொடிகளை வழியெங்கும் நட்டுவைத்திருந்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த மாவட்டத்திலிருக்கும் முன்னாள் அமைச்சர் தரப்பினர், கட்சிக் கொடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, வரவேற்பு பேனர்களையும் கிழித்தெறிந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்ன தலைவியிடம் இந்த விஷயம் சொல்லப்பட, ‘‘கட்சிக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. எல்லாவற்றையும் மீறி விரைவில் நான் கட்சியை ஒருங்கிணைப்பேன்’’ என வழக்கமான வசனத்தைப் பேசிவிட்டுக் கிளம்பினாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism