Published:Updated:

திவாகரனுக்கு சசிகலா அட்வைஸ் முதல் பவர்ஃபுல் அமைச்சரின் பலே திட்டம் வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

``பவர்ஃபுல் அமைச்சரின் புதிய திட்டம்...; சீறும் கமலாலய சீனியர்கள்!; பின்னணியில் தி.மு.க பிரமுகரா?; கன்ட்ரோல் எடுத்த அமைச்சர் நாசர்...; திவாகரனுக்கு சசிகலா அட்வைஸ்...; சுயேச்சை கொடுத்த ஷாக்! - கழுகார் அப்டேட்ஸ்

திவாகரனுக்கு சசிகலா அட்வைஸ் முதல் பவர்ஃபுல் அமைச்சரின் பலே திட்டம் வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

``பவர்ஃபுல் அமைச்சரின் புதிய திட்டம்...; சீறும் கமலாலய சீனியர்கள்!; பின்னணியில் தி.மு.க பிரமுகரா?; கன்ட்ரோல் எடுத்த அமைச்சர் நாசர்...; திவாகரனுக்கு சசிகலா அட்வைஸ்...; சுயேச்சை கொடுத்த ஷாக்! - கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
ஒப்பந்ததாரர்களுக்கு மாதச் சம்பளம்!
பவர்ஃபுல் அமைச்சரின் புதிய திட்டம்...

சமீபத்தில் கொங்கு மண்டலத்தின் பொதுப்பணித்துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளில் டெண்டர் எடுத்துவரும் ஒப்பந்ததாரர்களை அழைத்த அந்த பவர்ஃபுல் அமைச்சர், “உங்க ஏரியாவுல விடப்படுற சின்னச் சின்ன டெண்டரையெல்லாம் நீங்க எடுத்துக்கோங்க... ‘கோடிகள்’ தாண்டுற டெண்டர்கள்ல தலையிட வேணாம். அதுக்கு பதிலா உங்களுக்கு ஆளுக்கு ஏத்த மாதிரி மாசா மாசம் ஒரு தொகையைச் சம்பளம் மாதிரி கொடுத்துடறேன். உங்க தொழிலுக்கு எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படாது” என்று சொன்னாராம். ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும், ‘சரி... மாதம் பிறந்தால் ஒரு தொகை வருகிறதே’ என்று இந்தப் புது ‘ஒப்பந்தத்துக்கு’த் தலையாட்டினார்களாம் ஒப்பந்ததாரர்கள்!

சூர்யா ஸ்கெட்ச்... சுதாரித்த போலீஸ்!
பின்னணியில் தி.மு.க பிரமுகரா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரபல ரெளடி நெடுங்குன்றம் சூர்யா சில தினங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அதற்குள், சேலையூரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் பிரமுகர் முருகன் என்பவருக்கு ஸ்கெட்ச் போட மார்ச் 4-ம் தேதி சூர்யா டீம் களமிறங்கிய தகவல் தெரிந்து காக்கிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீஸார் சம்பந்தப்பட்ட ஏரியாக்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க... கொலைத் திட்டத்தைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறது சூர்யா டீம். ‘ஸ்கிராப்’ தொழில் செய்பவர்கள் யாரும் இப்போது ரெளடிகளுக்கு மாமூல் தருவதில்லையாம்.

ரியல் எஸ்டேட் அதிபர் முருகனும் ஸ்கிராப் தொழிலைச் செய்துவருகிறார். ‘முருகனை தீர்த்துக்கட்டினால், அதைப் பார்த்து மற்றவர்களுக்கு பயம் வரும். மாமூலும் தடையில்லாமல் கிடைக்கும்’ என்று திட்டம்போட்டு நெடுங்குன்றம் சூர்யா தரப்பு களமிறங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த ஸ்கெட்சைப் போட்டுக் கொடுத்ததே தி.மு.க பிரமுகர்தான் என்பது போலீஸாருக்குக் கிடைத்திருக்கும் கூடுதல் தகவல்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆவடியின் பொம்மை மேயர்!
கன்ட்ரோல் எடுத்த அமைச்சர் நாசர்...

அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜாவுக்குத் துணை மேயர் பதவி கொடுத்தால், மாவட்டத்தில் கட்சியை நடத்த முடியாது என்று திருவள்ளூர் மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தலைமைக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்கள். அதோடு காங்கிரஸ் கட்சியினரும், ம.தி.மு.க-வினரும் ஆவடி மாநகராட்சியின் துணை மேயர் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்திவந்தனர்.

திவாகரனுக்கு சசிகலா அட்வைஸ் முதல் பவர்ஃபுல் அமைச்சரின் பலே திட்டம் வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

இதையடுத்து உட்கட்சிப்பூசல் வேண்டாம் என்று நினைத்த கட்சித் தலைமை துணை மேயர் பதவியை ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கியது. இதனால் அதிருப்தியடைந்த நாசர் அப்போதும் அசராமல், மேயர் பதவிக்குத் தனது விசுவாசியான 9-வது வார்டு கவுன்சிலர் உதயகுமாரை முன்னிறுத்தி, அவரை மேயராக்கிவிட்டார். இதையடுத்து, “உதயகுமார் பொம்மை மேயராக மட்டுமே செயல்பட முடியும். மொத்த கன்ட்ரோலும் நாசரிடம்தான் இருக்கும்” என்று புலம்புகிறார்கள் உள்ளூர் எம்.எல்.ஏ-க்கள்!

“அவசரப்பட வேண்டாம்!”
திவாகரனுக்கு சசிகலா அட்வைஸ்...

சசிகலா கட்சிக்குள் என்ட்ரி ஆகும் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில் திவாகரன் தனக்கு நெருக்கமானவர்களிடம், “சசிகலாவுக்குக் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியைப் பேசி முடித்துவிட்டோம். அடுத்த வாரத்தில் நல்ல செய்தி வரும்” என்று கூறிவருகிறார். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடமும் இது பற்றி போனில் பேசியவர், “இனியும் தாமதிக்க வேண்டாம்.

சசிகலா-திவாகரன்
சசிகலா-திவாகரன்

அக்காவுக்கு மீண்டும் இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது; தவறவிட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டாராம். ஒருவேளை இந்த முறையும் சசிகலாவைக் கட்சியில் சேர்க்கவில்லையென்றால், செய்தியாளர்களைச் சந்தித்து கடந்த காலங்களில் எடப்பாடி தரப்பினர் திரைமறைவில் செய்த சில விஷயங்களை அம்பலப்படுத்தும் முடிவிலும் திவாகரன் இருக்கிறார் என்கிறார்கள். இந்தத் தகவல் சசிகலா கவனத்துக்குச் செல்ல... இளவரசி மகன் விவேக்கிடம், “இவ்வளவு நாள் பொறுமையா இருந்துட்டோம்... எல்லாம் கைகூடி வர்ற நேரத்துல அவசரப்படக் கூடாதுன்னு அவருக்கு எடுத்துச் சொல்லு” என்று அட்வைஸ் செய்தாராம்!

சுயேச்சை கொடுத்த ஷாக்!
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க ஏமாற்றம்...

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளுக்குமே ஷாக் கொடுத்திருக்கிறார் அங்கு சுயேச்சையாக வெற்றிபெற்ற விஜய்கண்ணன். காரணம், மூன்று கட்சிகள் மீதான ரிவெஞ்ச்-தானாம். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது பா.ஜ.க வர்த்தகப் பிரிவில் மாவட்டப் பொறுப்பில் இருந்தார்.

திவாகரனுக்கு சசிகலா அட்வைஸ் முதல் பவர்ஃபுல் அமைச்சரின் பலே திட்டம் வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

அப்போது, மனைகளுக்கு அப்ரூவல் வாங்குவதில் அமைச்சராக இருந்த தங்கமணி இவருக்குக் குடைச்சல் கொடுத்தாராம். அதை பா.ஜ.க-வும் கண்டுகொள்ளவில்லை என்ற கோபத்தில்தான் தி.மு.க-வுக்குக் கட்சி மாறியிருக்கிறார் விஜய்கண்ணன். ஆனால், தி.மு.க நகரச் செயலாளர் செல்வம், விஜய்கண்ணனை ஓரங்கட்டியதால் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றதோடு, மற்ற கவுன்சிலர்களுக்கு தாராளமாக வாரியிறைத்து நகராட்சி சேர்மன் பதவியையும் கைப்பற்றியிருக்கிறார். அநேகமாக அவர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் தி.மு.க-வில் இணைவார் என்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்!

ஒரு நம்பர் லாட்டரி
சவால்விட்ட ‘கேப்டன்’ பிரமுகர்!

தாம்பரம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் இருக்கும் சங்கர்நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி பிசினஸ் நடந்துகொண்டிருந்தது. நாள் ஒன்றுக்கு பல லட்சங்கள் புரண்ட இந்தத் தொழிலில் உள்ளூர் காக்கிகளுக்கும், உளவு காக்கிகளுக்கும் மாமூல் வெயிட்டாகச் சென்றதால் அவர்களும் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர். கேப்டன் கட்சியின் பழனியாண்டவர் பெயர்கொண்ட பிரமுகர்தான் இந்தத் தொழிலின் முக்கியப்புள்ளி என்கிறார்கள்.

லாட்டரி
லாட்டரி
மாதிரி படம்

இந்த நிலையில்தான் தற்போது புகார் மேலிடம் வரை சென்று, தற்காலிகமாகத் தொழிலை மூட்டைகட்டியவர், “கவனிக்க வேண்டியவங்களை கவனிச்சுட்டு, திரும்பவும் தொழிலை ஆரம்பிக்காம விட மாட்டேன்...” என்று சவால்விட்டிருக்கிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism