Published:Updated:

கரூர் மேயரைக் காக்கவைத்த செந்தில் பாலாஜி முதல் மணப்பாறையைக் கோட்டைவிட்ட மகேஷ் வரை |கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

பி.டி.ஆருக்கு எதிராகத் திரும்பிய மதுரை தி.மு.க!; ‘‘அமைச்சரின் திருவிளையாடல்கள் அறிவாலயத்துக்குத் தெரியாதா?”; கரூர் மேயரைக் கலங்கடித்த செந்தில் பாலாஜி...; மணப்பாறையைக் கோட்டைவிட்ட அன்பில் மகேஷ்!; தி.மு.க-வை வீழ்த்திய காங்கிரஸ்!

கரூர் மேயரைக் காக்கவைத்த செந்தில் பாலாஜி முதல் மணப்பாறையைக் கோட்டைவிட்ட மகேஷ் வரை |கழுகார் அப்டேட்ஸ்

பி.டி.ஆருக்கு எதிராகத் திரும்பிய மதுரை தி.மு.க!; ‘‘அமைச்சரின் திருவிளையாடல்கள் அறிவாலயத்துக்குத் தெரியாதா?”; கரூர் மேயரைக் கலங்கடித்த செந்தில் பாலாஜி...; மணப்பாறையைக் கோட்டைவிட்ட அன்பில் மகேஷ்!; தி.மு.க-வை வீழ்த்திய காங்கிரஸ்!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
பி.டி.ஆருக்கு எதிராகத் திரும்பிய மதுரை தி.மு.க!

மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி, மணிமாறன் ஆகியோர் அனைவருமே கம்பு சுற்றுகிறார்கள். “கடந்தமுறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோது கட்சி விஷயங்களில் அதிகம் தலையிடாமல் இருந்தவர், அமைச்சரான பின்பு கடுமையாக ஆதிக்கம் செலுத்துகிறார். கட்சி நிர்வாகிகளிடம் ஜமீன்தார்போல நடந்துகொள்கிறார். தனக்கு அடிமையாகச் சேவகம் செய்பவர்களுக்கு மட்டுமே கட்சிப் பதவிகளில் வாய்ப்பு தருகிறார்” என்று குமுறுகிறார்கள் மதுரை தி.மு.க நிர்வாகிகள். சமீபத்தில் மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன்வசந்த் பொறுப்பேற்ற நிகழ்ச்சிக்குக்கூட மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு மேயர் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை.

மதுரை மேயர்
மதுரை மேயர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்குக் காரணம், பழனிவேல் தியாகராஜன்தான் என்று சொல்லும் கட்சி நிர்வாகிகள், “இதே நிலைமை தொடர்ந்தால், அமைச்சருக்கு எதிராக உள்ளூர் கட்சியினரே போராட்டம் நடத்துவார்கள்” என்றும் எச்சரிக்கிறார்கள்!

ராஜினாமா செய்த கணவன், மனைவி!
மயிலாடுதுறை மல்லுக்கட்டு!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியின் தி.மு.க செயலாளர் வெற்றிவேல் தனது கட்சிப் பதவியையும், தரங்கம்பாடி பேரூராட்சியில் கவுன்சிலராக வெற்றிபெற்ற அவரின் மனைவி சரஸ்வதி தனது கவுன்சிலர் பதவியையும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்திருப்பது உள்ளூர் உடன்பிறப்புகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி விசாரித்தால், ‘‘கடந்த 2001, 2006 ஆண்டுகளில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு நேரடியாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று பத்து ஆண்டுக்காலம் பதவியில் இருந்தவர் சரஸ்வதி.

கரூர் மேயரைக் காக்கவைத்த செந்தில் பாலாஜி முதல் மணப்பாறையைக் கோட்டைவிட்ட மகேஷ் வரை |கழுகார் அப்டேட்ஸ்

இந்த முறையும் அவர் பேரூராட்சித் தலைவர் பதவியை எதிர்பார்க்க... பூம்புகார் எம்.எல்.ஏ-வும், மாவட்டக் கழகப் பொறுப்பாளருமான நிவேதா முருகனின் மைத்துனர் மனைவி சங்கரிக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டது. துணைத் தலைவர் பதவியாவது சரஸ்வதிக்குக் கிடைக்கும் என்று அமைச்சர் மெய்யநாதன் தரப்பு உறுதி அளித்திருந்த நிலையில், அந்தப் பதவியையும் நிவேதா முருகனின் ஆதரவாளர் பொன்.ராஜேந்திரனுக்கு வழங்கிவிட்டார்கள். இந்தக் கோபத்தால்தான் தம்பதியர் இருவருமே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டார்கள்” என்கிறார்கள் உள்ளூர் தி.மு.க நிர்வாகிகள்!

‘‘அமைச்சரின் திருவிளையாடல்கள் அறிவாலயத்துக்குத் தெரியாதா?”

கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில், சொந்தக் கட்சி கவுன்சிலர்களைக் கடத்திய குற்றச்சாட்டில் எம்.எல்.ஏ அய்யப்பனை கட்சிப் பொறுப்புகளிலிருந்து சஸ்பெண்ட் செய்தது தி.மு.க தலைமை. இந்த விவகாரத்தால் கொதித்துப்போன அய்யப்பனின் ஆதரவாளர்கள், ‘‘அய்யப்பன் செய்தது தவறென்றால், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தது மட்டும் சரியா? பண்ருட்டி நகராட்சித் தலைவர் வேட்பாளராக சிவா என்பவரைத்தான் கட்சித் தலைமை அறிவித்திருந்தது. ஆனால், அவருக்கு எதிராக, தன் ஆதரவாளரான பண்ருட்டி நகரச் செயலாளர் ராஜேந்திரனை நிறுத்தி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவைத்து கட்சிக்கு துரோகம் செய்திருக்கிறார் அமைச்சர்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அதேபோல, சிதம்பரம் நகரச் செயலாளரான செந்தில்குமார், அமைச்சரின் சொந்த அக்காள் மகன். கட்சி தொடர்பான எந்த நிகழ்சிக்கும் அவர் வருவதில்லை. ஆனால், அவரைத்தான் சிதம்பரம் நகராட்சிக்குத் தலைவராக்கியிருக்கிறார். அதேபோல ஶ்ரீமுஷ்ணம் பேருராட்சித் தலைவர் தங்க ஆனந்த், வடலூர் நகராட்சித் தலைவர் சிவக்குமார் என எல்லோருமே அமைச்சரின் சொந்தக்காரர்கள். இவையெல்லாம் தலைமைக்குத் தெரியாதா?’’ என்று கொந்தளிக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நான்கு மணி நேரம் காத்திருப்பு
கரூர் மேயரைக் கலங்கடித்த செந்தில் பாலாஜி...

கரூர் மாநகராட்சியின் முதல் மேயராகியிருக்கிறார் கவிதா கணேசன். மாவட்டப் பொறுப்பாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, தனக்கு வேண்டியவரின் உறவினர் பெண்ணைத்தான் மேயர் பதவிக்கு ‘டிக்’ அடித்திருந்தாராம். ஆனால், கவிதா கணேசன் ஐ.பெரியசாமியின் ஆதரவாளர் என்பதால், அவர் மூலமாகக் காய்நகர்த்தியதோடு, கே.என்.நேரு வழியாகவும் மூவ் செய்து மேயராகியிருக்கிறார் என்கிறார்கள்.

கரூர் மேயர்
கரூர் மேயர்

இதை அமைச்சர் செந்தில் பாலாஜி கொஞ்சமும் ரசிக்கவில்லை என்கிறார்கள் கருர் கட்சி நிர்வாகிகள்... அது குறித்துப் பேசியவர்கள், ‘‘அனைத்து மாநகராட்சிகளிலும் மேயராகப் பதவியேற்றவுடனேயே மேயருக்கு கெளரவம்மிக்க மேயர் அங்கி, வெள்ளிச் செங்கோல் வழங்கப்பட்டன. ஆனால், கரூரில் கவிதா மேயராக பதவியேற்றும் அங்கியும் வரவில்லை... செங்கோலும் தரவில்லை. மாநகராட்சி ஆணையரும் பாராமுகம் காட்டி தனது அறைக்குச் சென்றுவிட்டார். இதனால், கவிதா தவிப்போடு நான்கு மணி நேரம் காத்திருந்தார். செந்தில் பாலாஜி உள்ளூரில் இருந்தாலும், மேயர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஒருவழியாக செந்தில் பாலாஜியிடமிருந்து சிக்னல் வந்த பிறகே நான்கு மணி நேரத்துக்கு பிறகு கவிதாவுக்கு அங்கி, வெள்ளிச் செங்கோலை வழங்கினார் ஆணையர். மேயரை ஆரம்பத்திலேயே தட்டிவைக்க வேண்டும் என்பதே செந்தில் பாலாஜியின் நோக்கம்” என்கிறார்கள்

மணப்பாறையைக் கோட்டைவிட்ட அன்பில் மகேஷ்!

அன்பில் மகேஷ் மாவட்டச் செயலாளராக இருக்கும் பகுதிக்கு உட்பட்ட மணப்பாறை நகராட்சியில், தி.மு.க-வுக்கு மெஜாரிட்டி இருந்தும், மணப்பாறை நகராட்சித் தலைவர் பதவியை அ.தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. அந்த நகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் தலா 11 வார்டுகளைப் பிடிக்க, ஐந்து வார்டுகளில் தி.மு.க அதிருப்தி சுயேச்சைகள் வெற்றிபெற்றிருந்தார்கள். இந்த ஐந்து பேரும் அமைச்சர் கே.என்.நேரு, மகேஷ் இருவரையும் சந்தித்து தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுப்பதாகச் சொல்லியிருந்தார்கள்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

அப்படியிருந்தும் மணப்பாறை நகராட்சித் தலைவர் பதவியை தி.மு.க இழந்திருக்கிறது. ‘‘தனது ஏரியாவாக இருந்திருந்தால் மணப்பாறை நகராட்சியை கே.என்.நேரு எப்படியாவது கைப்பற்றியிருப்பார்’’ என்று நேருவின் ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டிருக்க... ‘‘சுயேச்சைகள் ஐந்து பேரும் நேருவைச் சந்தித்து ஆதரவு கொடுப்பதாகச் சொன்னார்கள். ஒருவேளை மகேஷைப் பழிவாங்க நேருகூட இந்த விவகாரத்தில் உள்ளடி வேலை பார்த்திருக்கலாம்’’ என்று கொதித்துக்கிடக்கிறது மகேஷ் தரப்பு!

தி.மு.க-வை வீழ்த்திய காங்கிரஸ்!
நீலகிரி கலாட்டா...

கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க தலைமை ஒதுக்கீடுசெய்த தலைவர், துணைத் தலைவர் பதவிகளை பல இடங்களில் தி.மு.க-வினரே கைப்பற்றிய விவகாரமே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், சொந்தக் கட்சிக்குத் தலைமை ஒதுக்கீடு செய்த பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கைப்பற்றி, கூட்டணிக் கட்சிக்கே ஷாக் கொடுத்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பிக்கட்டி பேரூராட்சித் தலைவர் பதவியை, காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்து தி.மு.க தலைமை அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சந்திரலேகா தலைவராகப் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.

துணைத் தலைவர் பதவி தி.மு.க கவுன்சிலர் சுகுமாரனுக்கு அறிவிக்கப்பட்டது. போட்டியின்றி இவர் துணைத் தலைவராகும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தி.மு.க கவுன்சிலரை எதிர்த்து காங்கிரஸ் கவுன்சிலர் ஜெயக்குமார் போட்டியிட்டார். மறைமுகத் தேர்தல் முடிவில் ஒன்பது வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் துணைத் தலைவராகத் தேர்வானார். இதையடுத்து “கூட்டணி தர்மம் குறித்து தி.மு.க நிர்வாகிகளைக் கண்டித்த தலைவர் ஸ்டாலின், இந்த விவகாரத்திலும் தலையிட வேண்டும்” என்று குமுறுகிறார்கள் நீலகிரி தி.மு.க நிர்வாகிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism