Published:Updated:

கூட்டணி கட்சியினர்மீது நடவடிக்கை... ஸ்டாலின் க்ரீன் சிக்னல்; மாஃபாவை புறக்கணித்த ராஜேந்திர பாலாஜி!

கழுகார் அப்டேட்ஸ்

`உள்ளாட்சி நிலவரங்களை கவனிக்க செல்கிறேன்’ மெயில் செக் செய்யவும் என்று உட்கார கூட நேரம் இல்லாமல் பறந்தார் கழுகார். மெயிலில் குவிந்தது கழுகாரின் குறிப்புகள்...!

கூட்டணி கட்சியினர்மீது நடவடிக்கை... ஸ்டாலின் க்ரீன் சிக்னல்; மாஃபாவை புறக்கணித்த ராஜேந்திர பாலாஜி!

`உள்ளாட்சி நிலவரங்களை கவனிக்க செல்கிறேன்’ மெயில் செக் செய்யவும் என்று உட்கார கூட நேரம் இல்லாமல் பறந்தார் கழுகார். மெயிலில் குவிந்தது கழுகாரின் குறிப்புகள்...!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
``யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்!’’
முதல்வர் கொடுத்த க்ரீன் சிக்னல்

பிப்ரவரி 7-ம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, காவல்துறை தரப்பில் முதல்வரிடம், ``தி.மு.க கூட்டணியிலுள்ள சில கட்சிகள் காவல்துறையிடம் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்கள் இதைச் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களிடம் சொல்லி கண்டிக்க வேண்டும்’’ என்று சொல்லப்பட... ‘‘நான் சொல்வது இருக்கட்டும்... யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்’’ என்று முதல்வர் தரப்பில் சொல்லப்பட்டதாம். வி.சி.க மற்றும் சி.பி.எம் கட்சியினரை மனதில் வைத்துதான் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

``லாபம் வந்தால் உங்களுக்கு... நஷ்டம் வந்தால் எங்களுக்கா?’’

அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ மற்றும் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான ‘நியூஸ் ஜெ’ ஆகியவற்றின் நிர்வாகத்தைத் தற்போதுவரை வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர் என்பவரே கவனித்துவந்தார். அ.தி.மு.க ஆட்சியிலிருந்தபோது இந்த இரண்டு நிறுவனங்களும் லாபத்தில் இயங்கிவந்தன. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இரண்டு நிறுவனங்களுக்கும் போதிய வருமானம் இல்லையாம்.

கூட்டணி கட்சியினர்மீது நடவடிக்கை... ஸ்டாலின் க்ரீன் சிக்னல்; மாஃபாவை புறக்கணித்த ராஜேந்திர பாலாஜி!

இதனால், ‘‘இரண்டு நிறுவனங்களையும் அ.தி.மு.க-வே நடத்திக்கொள்ளட்டும்’’ என்று சந்திரசேகர் தரப்பு சொல்ல, ‘‘லாபம் வரும்போது நீங்கள் வைத்துக்கொண்டு, நஷ்டத்தில் இயங்கும்போது கட்சிக்குத் தள்ளிவிடுகிறீர்களா?” என்று பன்னீர் சீறிவிட்டாராம். ‘நமது அம்மா’ பத்திரிகையின் ஆசிரியர் மருது அழகுராஜும், பணியாற்ற விருப்பம் இல்லாமல் இருப்பதால், பத்திரிகையின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று தவிப்பில் இருக்கிறார்கள் ஊழியர்கள்!

மாநகராட்சித் தேர்தலில் அழகிரி ஆதரவாளர்!

மதுரை மாநகராட்சித் தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிடலாம் என்று மு.க.அழகிரி ஆதரவாளர்கள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், அவர்கள் யாரையும் கடைசி வரையில் கட்சியில் இணைக்கவில்லை. இதையடுத்து, ‘அழகிரி ஆதரவாளர்கள் தனித்துப் போட்டியிடப்போகிறார்கள்’ என்று சலசலப்பு கிளம்பவே... அவர்களை அழைத்து தி.மு.க நிர்வாகிகள் சமாதானம் செய்துள்ளார்கள்.

அழகிரி
அழகிரி

எதிர்காலத்தில் கட்சிப் பொறுப்பு, வாரியத்தில் பதவி கிடைக்கும் என்று பலரும் சமரசமான நிலையிலும், அழகிரி முரட்டு ஆதரவாளராக அறியப்படும் இசக்கிமுத்து மட்டும் இறங்கி வராமல் தன் மனைவியை 14-வது வார்டில் சுயேச்சையாக நிறுத்தியுள்ளார். அழகிரி தரப்புக்கு இந்தத் தகவல் சொல்லப்பட... ஆச்சர்யப்பட்டவர், “எப்படியாவது அவரை ஜெயிக்க வெச்சிடுங்கப்பா” என்று தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் சொன்னாராம். ஆனாலும், மனம் தளராத தி.மு.க-வினர், “இசக்கிமுத்தெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை” முஷ்டியை முறுக்குகிறார்கள்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கோ.க.மணி - ராமதாஸ் இடையே மனவருத்தமா?

பா.ம.க தலைவர் கோ.க.மணிக்கும் அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டுள்ளதாக சில மாதங்களாகவே தகவல்கள் கசிகின்றன. சமீபத்தில் தமிழக அரசு நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், பா.ம.க சார்பில் வெங்கடேசன் எம்.எல்.ஏ கலந்துகொண்டார். அதே நேரம் செய்தியாளர்களைச் தொடர்புகொண்ட பா.ம.க நிர்வாகிகள், “கோ.க.மணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று வலியச் சென்று செய்தி கொடுத்துள்ளார்கள்.

கூட்டணி கட்சியினர்மீது நடவடிக்கை... ஸ்டாலின் க்ரீன் சிக்னல்; மாஃபாவை புறக்கணித்த ராஜேந்திர பாலாஜி!

ஆனால், மணி தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை. இதுபற்றி விசாரித்தால், “ஆளும் தரப்பின் வாரிசுடன் மணியின் மகன் காட்டிய நெருக்கம் தலைமைக்கு பிடிக்காமல் போனதுதான் மனவருத்தத்துக்குக் காரணம்” என்று கிசுகிசுக்கிறார்கள் தைலாபுரம் வட்டாரத்தில்!

‘‘பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும்!’’
நெல்லையில் அ.தி.மு.க வியூகம்

பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியது அல்லவா. அவரது பேச்சுக்கு அ.தி.மு.க தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தன் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார். இருப்பினும், நெல்லை மாவட்ட அ.தி.மு.க-வினர் நயினார் நாகேந்திரன் மீது கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

“அ.தி.மு.க மூலம் அரசியல் வெளிச்சம் பெற்றவர்தான் நயினார் நாகேந்திரன். தனக்கு அடையாளம் தேடித் தந்த தாய் கட்சியையே அவர் அவமானப்படுத்திவிட்டார்” என்று பொங்கும் நெல்லை அ.தி.மு.க-வினர் உள்ளாட்சித் தேர்தலில் அவர் பகுதிக்கு உட்பட்ட பா.ஜ.க வேட்பாளர்களை வெற்றிபெற விடக்கூடாது என்று தீவிரமாக உள்ளடி வேலையில் இறங்கியிருக்கிறார்கள்!

விருதுநகர் பிரசாரத்துக்கு வந்த மாஃபா...
கண்சிவந்த ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க எம்.எல்.ஏ-வாக இருந்து அ.தி.மு.க-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை விருதுநகர் மாவட்டத்துக்குள் நுழையவிடாமல் பார்த்துக்கொண்டார் ராஜேந்திர பாலாஜி. சென்னையிலேயே முடங்கியிருந்த மாஃபா, தற்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதாகச் சொல்லி விருதுநகருக்குள் வலம் வருகிறார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இதையடுத்து, ‘``அவர் பின்னால யாராச்சும் போனா கட்சியில பதவி இருக்காது’’ என்று கட்சி நிர்வாகிகளை எச்சரித்த ராஜேந்திர பாலாஜி, ‘‘இத்தனை நாளு மாவட்டத்துக்குள்ள வராத மாஃபா, இப்போ வந்திருக்காருன்னா என்ன அர்த்தம்? இந்த கேஸ்ல திரும்பவும் நான் உள்ள போவேன். அப்படியே புறவாசல் வழியா விருதுநகருக்குள்ள வந்து கட்சியைக் கைப்பத்தலாம்னு நினைக்கிறாரா?’’ என்று கொந்தளித்திருக்கிறார். இதனால், விருதுநகர் நகராட்சியில் பிரசாரத்துக்கு சென்ற பாண்டியராஜன் பின்னால் பத்து பேர்கூடச் செல்லவில்லை!

பனையூர் சந்திப்பு எதற்காக?

நடிகர் விஜய்யை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்த விவகாரம் அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. ரங்கசாமி தரப்பே அமைதியாக இருக்கும் நிலையில், ``நடிகர் விஜய்யை முதல்வர் சந்தித்ததில் அரசியல் இல்லை’’ என்கிறது பா.ஜ.க. ஆனால், அந்தச் சந்திப்பின் சமாசாரமே வேறு என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கூட்டணி கட்சியினர்மீது நடவடிக்கை... ஸ்டாலின் க்ரீன் சிக்னல்; மாஃபாவை புறக்கணித்த ராஜேந்திர பாலாஜி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமை கொடுத்த தேர்தல் நிதியை வாங்க மறுத்துவிட்ட ரங்கசாமி, அனைத்து செலவுகளையும், தானே பார்த்துக்கொண்டார். அந்த வகையில் ஐந்து ஸ்வீட் பாக்ஸ்கள் பனையூரிலிருந்து புதுச்சேரிக்கு வந்ததாம். ஸ்வீட் பாக்ஸ்கள் வந்து எட்டு மாதங்களாகிவிட்டதால் அதுகுறித்துதான் பேசுவதற்குச் சென்றாராம் நடிகர்.