Published:Updated:

வெயிட்டாக கவனித்த வேலுமணி, தங்கமணி முதல் முதல்வர் ஸ்டாலின் அதிரடி வரை.... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்!

தீபாவளி பலகாரங்களுடன் நேரில் வந்திருந்த கழுகார் பலகாரங்களைப் பரிமாறியபடியே, “மெயில் பாக்ஸை செக் செய்யும்... சிலரை சந்திக்க வேண்டியிருக்கிறது” என்று சொல்லிவிட்டு பறந்தார்... மெயிலை நிறைத்திருந்தன கழுகாரின் செய்திகள்!

வெயிட்டாக கவனித்த வேலுமணி, தங்கமணி முதல் முதல்வர் ஸ்டாலின் அதிரடி வரை.... கழுகார் அப்டேட்ஸ்!

தீபாவளி பலகாரங்களுடன் நேரில் வந்திருந்த கழுகார் பலகாரங்களைப் பரிமாறியபடியே, “மெயில் பாக்ஸை செக் செய்யும்... சிலரை சந்திக்க வேண்டியிருக்கிறது” என்று சொல்லிவிட்டு பறந்தார்... மெயிலை நிறைத்திருந்தன கழுகாரின் செய்திகள்!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்!
சூர்யாவின் சந்திப்பும்... ஸ்டாலினின் அதிரடியும்!!

நவம்பர் 4-ம் தேதி தீபாவளி அன்று இருளர் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். சூர்யா முதல்வரை சந்தித்து ஒரு கோடி ரூபாயை இருளர் மாணவர்களின் கல்வி நலத்திட்டங்களுக்காக வழங்கியபோதே உருவானதாம் இந்தத் திட்டம். முதல்வருடன் நடந்த அந்த சந்திப்பின்போது, பழங்குடிகளுக்காக குரல்கொடுத்துவரும் சமூக ஆர்வலர்கள் சிலர், “அந்த படத்தில் காட்டப்படும் சூழலே இப்போதும் இருளர் சமூகத்தில் நிலவுகிறது” என்று சொல்ல, “நானே இதைப்பற்றி விசாரிக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார் முதல்வர்.

வெயிட்டாக கவனித்த வேலுமணி, தங்கமணி முதல் முதல்வர் ஸ்டாலின் அதிரடி வரை.... கழுகார் அப்டேட்ஸ்!

தொடர்ந்து அதிகாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் வசிக்கும் இருளர் உள்ளிட்ட பழங்குடிகளின் பிரச்னைகளை சேகரித்தவர், அதன் பிறகே செங்கல்பட்டுக்கு நேரில் சென்று இருளர் சமுக மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் தொடர்ச்சியாகவே ஆனைமலை கல்லார்குடி தெப்பக்குளமேடு காடர் பழங்குடி மக்களுக்கும் நவம்பர் 7-ம் தேதி நில உரிமை பட்டா வழங்க உத்தரவிடப்பட்டதாம்!

சசிகலா வீட்டை நோட்டமிட வந்தாரா காந்தி?

அ.தி.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட மாணவரணிச் செயலாளரும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் ஒன்றியத்தின் தலைவருமான காந்தி, வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக வலம்வந்தவர். இடையில் கொடுக்கல் - வாங்கலில் ஏற்பட்ட மனக்கசப்பில் சில மாதங்களாகவே வைத்திலிங்கம் மீது காந்தி அதிருப்தியில் இருந்தாராம். இதையறிந்த எடப்பாடி தரப்பு, காந்தியை தங்கள் பக்கம் இழுத்துள்ளது என்கிறார்கள். கடந்த வாரம் சசிகலா தஞ்சாவூரில் தன் ஆதரவாளர்களைச் சந்திக்க தயாராகிக்கொண்டிருந்தபோது, சசிகலா வீட்டருகே தமிழ்நாடு அரசு முத்திரை பொறிக்கப்பட்ட காருக்குள் காந்தி அமர்ந்திருந்ததைப் பார்த்த சசிகலா ஆதரவாளர்கள், அவர் சசிகலாவைதான் சந்திக்க வருகிறார் என்று பரபரப்படைந்தனர்.

வீட்டில் ஆதரவாளர்களை  சந்தித்த சசிகலா
வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்த சசிகலா
ம.அரவிந்த்

ஆனால், கார் நிற்காமல் மெதுவாக சசிகலா வீட்டை கடந்து சென்றிருக்கிறது. இதையடுத்து, சசிகலா வீட்டில் என்ன நடக்கிறது என்பதை நோட்டமிட்டு எடப்பாடி தரப்புக்கு தகவல் பாஸ் செய்யவே காந்தி வந்துசென்றார் என்று கிசுகிசுக்கிறார்கள் டெல்டா மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள்!

கைவிட்ட எடப்பாடி, பன்னீர்...
வெயிட்டாக கவனித்த வேலுமணி, தங்கமணி!

தீபாவளிப் பண்டிகைக்காக திருச்சி மாவட்ட அமைச்சர்கள் நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கட்சி நிர்வாகிகளை போட்டி போட்டுக்கொண்டு கவனித்தது அனைவரும் அறிந்ததே. இந்தநிலையில், அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சரும் மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜனை கட்சி நிர்வாகிகள் சந்தித்தித்தபோது, “நம்ம கட்சி ஆட்சியிலயும் இல்லை... நானும் எம்.எல்.ஏ-வாவும் இல்லை... ரொம்ப சிரமத்துல இருக்கேன்பா” என்று அலுத்துக்கொண்டாலும் ஆறுதல் பரிசாக சின்னதாக ஒரு கவர் கொடுத்து அனுப்பினாராம். சென்னையிலோ முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் தீபாவளி பரிசு வாங்கலாம் என்று நிர்வாகிகள் சென்றபோது “அம்மா ஊருல இல்லை” என்றே பதில் வந்ததாம்.

அமைச்சர்கள் வேலுமணி தங்கமணி
அமைச்சர்கள் வேலுமணி தங்கமணி

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை தேடிச் சென்ற கட்சி நிர்வாகிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதேசமயம், கொங்கு மண்டலத்தில் வேலுமணி, தங்கமணி மட்டுமே வெயிட்டாக பரிசுகளை அளித்து கட்சி நிர்வாகிகளைக் குஷிப்படுத்தியிருக்கிறார்கள்!

என்ன சொல்லப்போகிறார் ஸ்வப்னா?

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகம் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் ஓராண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த ஸ்வப்னாவுக்கு, நவம்பர் 2-ம் தேதி ஜாமின் கிடைத்துள்ளது. அவர் வெளியே வந்த பிறகு செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாக அவரின் அம்மா கூறியிருக்கிறார். இதையடுத்து “ ஸ்வப்னா, முதல்வர் பினராய் விஜயனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் பெரிய ஸ்டேட்மென்ட் விடக் காத்திருக்கிறார்;

ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்

இது கேரள பா.ஜ.க-வில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்” என்கிறார்கள் இந்த வழக்கு தொடர்புடைய வழக்கறிஞர்கள் சிலர். இதையடுத்து ஸ்வப்னாவை பேசவிடக் கூடாது என்று தீவிரமாக செயல்பட்டுவருகிறதாம் மத்திய அரசு தரப்பு!

அனிதாவுக்கு ஆறுதல் கூறிய மீசை அமைச்சர்!

மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் துறைரீதியான செயல்பாடுகளில் முதல்வர் அதிருப்தியாக இருப்பது குறித்து ஏற்கெனவே சொல்லியிருந்தோம். இந்தநிலையில்தான், கோட்டை ஊரின் மீசைக்கார அமைச்சர் தரப்பிலிருந்து அனிதாவுக்கு ஆறுதல் அளிக்கும் தகவல் ஒன்று பாஸானதாம்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

“நீங்க அ.தி.மு.க-வுல இருந்த குறுகிய காலக்கட்டதுலயே மாவட்டச் செயலாளர், அமைச்சர் என உயர்ந்தவர். ‘என் நம்பிக்கைக்கு உரியவர் அனிதா’னு ஜெயலலிதாவே சொல்லியிருக்கிறார். உங்க துறைகளின் மேல கவனம் செலுத்துங்க. மீனவர் சங்கங்கள் கொஞ்சம் அதிருப்தியில இருக்காங்க. எல்லாத்தையும் சரி பண்ணுங்க. முதல்வர்கிட்ட நானே பேசி சரி பண்றேன்” என்று ஆறுதல் சொல்ல... கண்கலங்கிவிட்டாராம் அனிதா!

தி.மு.க ஒன்றியத் தலைவர் ராஜினாமா!
குரல் உயர்த்திய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி...

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மறைமுகத் தேர்தலில் ஏராளமாக ‘வாரியிறைத்து’ தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் தோல்வியடைந்து, போட்டி வேட்பாளராகக் களமிறங்கிய தி.மு.க-வின் செல்லம்மாள் வெற்றிபெற்றார். இதனால் அதிருப்தியடைந்த மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் கொடுத்த நெருக்கடியால் செல்லம்மாள் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

ஜெயக்குமார் ஏற்கெனவே புதிய தமிழகம் கட்சியில் மாவட்டச் செயலாளராக இருந்து, தி.மு.க-வுக்குச் சென்றதால் அந்தக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார். இதையடுத்து, “செல்லம்மாளின் ராஜினாமாவை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்று கிருஷ்ணசாமி வலியுறுத்தியதுடன், ராஜினாமாவை எதிர்த்து தென்காசி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். தன்னை தவிக்கவிட்டு போனவர் பதவியில் அமர்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் கிருஷ்ணசாமி!