Published:Updated:

`பயந்து ஓடமாட்டேன்.. எப்போதும் நான் அ.தி.மு.க-காரன்!'- ஜாமீனில் வெளிவந்த கே.சி.பழனிசாமி

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

நான் எப்போதும் அ.தி.மு.க-காரன்தான் என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டப் பிறகும், இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்துகிறார், போலி இணையதளம் நடத்துகிறார் என்று முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீது முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தவேல் புகார் அளித்திருந்தார்.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

இதையடுத்து, சூலூர் போலீஸார் 17 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கே.சி.பழனிசாமியை கடந்த ஜனவரி 25-ம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில், கே.சி.பழனிசாமிக்கு நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையடுத்து, இன்று காலை கோவை மத்திய சிறையிலிருந்து வெளிவந்த கே.சி.பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``நேற்று முன்தினம் ஜாமீன் உத்தரவு வந்தும் நேற்று முழுவதும் என்னை வெளியில் விடவில்லை. அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டப் பிறகும் தொடர்ந்து ஊடகங்களில் அ.தி.மு.க-வுக்கு உரிமை கோரியதற்காகத்தான் என்னை கைது செய்தனர்.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

எனக்கு ஜாமீன் கிடைத்தது பற்றிய செய்தி நேற்று காலையே வந்துவிட்டது. அப்படி இருந்தும் ஏன் விடுதலை செய்யவில்லை.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் நியமனம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. `நீங்கள் பொதுச்செயலாளரோ, ஒருங்கிணைப்பாளரோ எப்படி வேண்டுமானால் பெயர் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அடிப்படை உறுப்பினர்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறித்தது தவறு' என்று நீதியரசர் சொல்லியிருக்கிறார்.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

அதைத்தான் நானும் எனது இணையதளத்தில் சொல்லியிருந்தேன். நீதிமன்றத்தின் உத்தரவை வெளியில் பகிரும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது.

ஜாமீனில் விடுதலையான முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, கோவை மத்திய சிறை முன்பு செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

Posted by Vikatan EMagazine on Wednesday, February 12, 2020

இவர்கள் சிறை வைத்தது என்னை இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் கொள்கைகளை இவர்கள் சிறை வைத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய எண்ணங்களிலும் கொள்கைகளிலும் நான் இன்னும் உறுதியாக இருப்பேன். பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் தொண்டர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தரும் வரை என்னுடைய போராட்டம் தொடரும்.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

இன்னும் 100 முறை சிறையிலடைத்தாலும் என்னுடைய கொள்கையிலிருந்து விலக மாட்டேன். பயந்து வேறு கட்சிக்கும் போக மாட்டேன். நான் என்றைக்கும் அ.தி.மு.க-காரன்தான்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு