Published:Updated:

காங்கிரஸ்: `East to West; அடுத்த பாரத் ஜோடோவுக்குத் திட்டம்!' - கே.சி.வேணுகோபால் தகவல்

ராகுல் காந்தி

``இந்த கர்நாடக வெற்றி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான செய்தியாகும். மேலும், தேசிய அளவில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்." - கே.சி.வேணுகோபால்

Published:Updated:

காங்கிரஸ்: `East to West; அடுத்த பாரத் ஜோடோவுக்குத் திட்டம்!' - கே.சி.வேணுகோபால் தகவல்

``இந்த கர்நாடக வெற்றி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான செய்தியாகும். மேலும், தேசிய அளவில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்." - கே.சி.வேணுகோபால்

ராகுல் காந்தி

கர்நாடகத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி முடிவுசெய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பிரபல ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், ``கர்நாடகத் தேர்தல் வெற்றியில் பாரத் ஜோடோ யாத்திரையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத் தேர்தல்
கர்நாடகத் தேர்தல்

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக, ராஜஸ்தானின் உயர்மட்டத் தலைவர்களுக்கிடையேயான பூசலை சரிசெய்வதிலும் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறோம். இந்த கர்நாடக வெற்றி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான செய்தியாகும், மேலும், தேசிய அளவில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ஆனால், கேரளாவில் சி.பி.ஐ-எம், தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைக்க முடியாது. மற்ற மாநிலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியையும் சில சமயங்களில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியையும் வைத்திருக்க சாத்தியமிருக்கிறது, கர்நாடக முதல்வர் யார் என்பதைக் குறிப்பிட சிறிது காலம் எடுக்கும்.

கே.சி.வேணுகோபால்
கே.சி.வேணுகோபால்

மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக முதல்வராக பரிசீலிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்கிறேன். வதந்திகளை நம்பவேண்டாம். மேலும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மற்றொரு பாரத் ஜோடோ யாத்திரையைத் திட்டமிட்டிருக்கிறோம். கர்நாடகாவில் அதன் பலன்களைக் கண்டிருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.