Published:Updated:

`தெலங்கானா ராஷ்டிர சமிதி' இனி `பாரத் ராஷ்டிர சமிதி' - கே.சி.ஆருக்குத் தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்

சந்திரசேகர ராவ்

முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா ராஷ்டிர சமிதியை, பாரத் ராஷ்டிர சமிதி எனப் பெயர் மாற்றம் செய்ததற்குத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

`தெலங்கானா ராஷ்டிர சமிதி' இனி `பாரத் ராஷ்டிர சமிதி' - கே.சி.ஆருக்குத் தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்

முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா ராஷ்டிர சமிதியை, பாரத் ராஷ்டிர சமிதி எனப் பெயர் மாற்றம் செய்ததற்குத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

Published:Updated:
சந்திரசேகர ராவ்

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு எதிராக தீவிரமாக எதிர்ப்பு அரசியல் செய்துவரும் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.க மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார். தற்போதுகூட, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க-வினர் விலைக்கு வாங்க முயன்றதாக எழுந்த புகார் குறித்த விசாரணை நடைபெற்றுவருகிறது.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

இப்படியிருக்க 2024-ல் நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலைக் குறித்துவைத்திருக்கும் சந்திரசேகர ராவ், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, தன் சொந்தக் கட்சியான `தெலங்கானா ராஷ்டிர சமிதி' எனும் மாநிலக் கட்சியை, தேசியக் கட்சி என அறிவிப்பதாக `பாரத ராஷ்டிர சமிதி' எனப் பெயர் மாற்றம் செய்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு முறையான ஆவணங்களோடு கடிதமும் அனுப்பியிருந்தார். இருப்பினும், தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்காமல் பரிசீலனையில் வைத்திருந்தது.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

இந்த நிலையில் தேர்தல் ஆணையம், சந்திரசேகர ராவின் கடிதத்துக்கு நேற்று அனுமதி வழங்கியிருக்கிறது. அதைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ் தனது கட்சி அலுவலகத்தில் இன்று `பாரத ராஷ்டிர சமிதி' கட்சிக் கொடியை கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.