Published:Updated:

``தரமான கல்வியை வழங்குவது இலவசம் அல்ல... தயவு செய்து அப்படி அழைக்காதீர்கள்!" - அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``மத்திய அரசுக்கு நான் ஒரு திட்டத்தை முன்வைக்கிறேன். அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு எங்களின் சேவைகளைப் பயன்படுத்துங்கள்." - அரவிந்த் கெஜ்ரிவால்

``தரமான கல்வியை வழங்குவது இலவசம் அல்ல... தயவு செய்து அப்படி அழைக்காதீர்கள்!" - அரவிந்த் கெஜ்ரிவால்

``மத்திய அரசுக்கு நான் ஒரு திட்டத்தை முன்வைக்கிறேன். அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு எங்களின் சேவைகளைப் பயன்படுத்துங்கள்." - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே, மக்களுக்கு இலவசங்கள் வழங்குவது குறித்து பா.ஜ.க பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. பிரதமர் மோடியும், இலவசம் வழங்குவதை `ரேவடி கலாசாரம்' என்று விமர்சித்திருந்தார். இலவசங்கள் தொடர்பான பா.ஜ.க-வினரின் விமர்சனங்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பதிலளித்து வருகிறார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ``இலவசம் என்பது வேறு, சமூக நலத்திட்டங்கள் என்பது வேறு" எனக்கூறியிருந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் இலவசங்கள் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். தன்னுடைய பிறந்தநாளான இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால், ``டெல்லி அரசு தங்களுடைய மக்களுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்குவதற்காக ஆண்டுதோறும் சராசரியாக ஒரு நபருக்கு ரூ.2,000 செலவிடுகிறது. இதனை நாடு முழுவதும் உள்ள 1.3 பில்லியன் மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி செலவில் வழங்க முடியும். பிற வளர்ந்த நாடுகளைப் போல நாமும் பணக்காரர்களாக இருக்க வேண்டுமானால், முதலில் நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டும்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

முதலாவதாக அரசுப் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் மேம்படுத்தப்பட வேண்டும். அடுத்ததாக, கூடுதலாக அரசுப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கடுத்ததாக, தற்காலிக ஆசிரியர்களை முறைப்படுத்தவேண்டும். அதோடு பெரிய அளவில் ஆசிரியர் ஆள்சேர்ப்பு நடத்தப்பட வேண்டும். மேலும் இறுதியாக, ஆசிரியர்களுக்குத் தரமான பயிற்சி அளிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அவர்களையும் டெல்லியில் செய்தது போல் வெளிநாடுகளுக்கு அனுப்பவேண்டும்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், நார்வே, ஸ்வீடன் போன்ற வளர்ந்த நாடுகள், தரமான கல்வி மற்றும் சுகாதார சேவைகளை இலவசமாக வழங்குகின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல கல்வியைக் கொடுப்பதாலேயே இந்த நாடுகள் பணக்கார நாடுகளாக இருக்கின்றன. மத்திய அரசுக்கு நான் ஒரு திட்டத்தை முன்வைக்கிறேன். அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு எங்களின் சேவைகளைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு மாநிலத்தின் சேவைகளையும் பயன்படுத்துங்கள். நாம் அனைவரும் சேர்ந்து இதைச் செய்வோம். அதோடு, தயவுசெய்து இலவசங்கள் என்று சொல்வதை நிறுத்துங்கள். தரமான கல்வியை வழங்குவதென்பது இலவசம் அல்ல" என்றார்.