Published:Updated:

"உங்கள் வீடுகளில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள்!" - பாஜக எம்.பி பிரக்யா சிங் சர்ச்சைப் பேச்சு

பிரக்யா சிங் தாகூர்

``லவ் ஜிஹாதில் ஈடுபடுபவர்களுக்கு அதே வழியில் பதில்தாருங்கள். உங்கள் மகள்களைப் பாதுகாத்து அவர்களுக்குள் நன்மதிப்பை விதையுங்கள்" - பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர்

"உங்கள் வீடுகளில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள்!" - பாஜக எம்.பி பிரக்யா சிங் சர்ச்சைப் பேச்சு

``லவ் ஜிஹாதில் ஈடுபடுபவர்களுக்கு அதே வழியில் பதில்தாருங்கள். உங்கள் மகள்களைப் பாதுகாத்து அவர்களுக்குள் நன்மதிப்பை விதையுங்கள்" - பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர்

Published:Updated:
பிரக்யா சிங் தாகூர்

அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தும் பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர், தற்போது `அனைவரும் வீட்டில் ஆயுதங்களை வைத்துக்கொள்ளுங்கள்' என புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

கர்நாடகாவின் ஷிவமோகாவில் நேற்று நடைபெற்ற இந்து ஜாகரனா வேதிகேயின் தென் மண்டல ஆண்டு மாநாட்டில் பேசிய பிரக்யா சிங் தாகூர், ``உங்களின் வீடுகளில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள். எதுவும் இல்லையென்றாலும் காய்கறிகளை வெட்டுவதற்கு குறைந்தபட்சம் கத்தி போன்ற கூர்மையானவற்றை வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் எப்போது என்ன நிலை வரும் என்று தெரியாது.

பிரக்யா சிங் தாகூர்
பிரக்யா சிங் தாகூர்

ஒவ்வொருவருக்கும் தங்களைத் தற்காத்துக்கொள்ள உரிமை உண்டு. யாராவது நம்மை வீடு புகுந்து தாக்கினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது நம் கடமை. அவர்களுக்கு ஜிஹாத் பாரம்பர்யம் உள்ளது. அவர்கள் காதலித்தாலும் அதில் ஜிஹாத் செய்கிறார்கள். கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில், எல்லா ஒடுக்குமுறையாளர்களும், பாவப்பட்டவர்களும் அகற்றப்படும்வரை அன்பின் உண்மையான விளக்கம் நிலைக்காது.

பிரக்யா சிங் தாகூர்
பிரக்யா சிங் தாகூர்

லவ் ஜிஹாதில் ஈடுபடுபவர்களுக்கு அதே வழியில் பதில்தாருங்கள். உங்கள் மகள்களைப் பாதுகாத்து அவர்களுக்குள் நன்மதிப்பை விதையுங்கள்" என்று கூறினார்.

இதற்கு முன்னதாக, ``இந்தியா இந்துக்களுக்குச் சொந்தமானது", ``தங்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லாதவர்கள்தான் ஹிஜாப் அணிவார்கள்" போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை பிரக்யா சிங் தாகூர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.