Published:Updated:

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: ``நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்!" - கெஜ்ரிவால்

அர்விந்த் கெஜ்ரிவால்

`நாட்டிற்காக என் உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். நாட்டின் மிகப்பெரிய கட்சியான (பாஜக) இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.' - அரவிந்த் கெஜ்ரிவால்

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: ``நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்!" - கெஜ்ரிவால்

`நாட்டிற்காக என் உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். நாட்டின் மிகப்பெரிய கட்சியான (பாஜக) இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.' - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அர்விந்த் கெஜ்ரிவால்

சமீபத்தில் வெளியான `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் வெளியானதிலிருந்தே, இந்தப் படத்தை பா.ஜ.க வெகுவாக ஆதரித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியும், `தி காஷ்மீர் பைல்ஸ்' படம் அனைவரும் பார்க்க வேண்டியும், இப்படம் உண்மையைக் கூறுகிறது என்றும் வெகுவாகப் பாராட்டியிருந்தார். அதுமட்டுமல்லாமல், காஷ்மீர் பண்டிட்கள் குறித்த கதைக்களம் உள்ள இந்தப் படத்துக்கு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கும் அளிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்துதான், டெல்லியிலும் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிக்க அளிக்க வேண்டும் என்று டெல்லி சட்டசபையில் பா.ஜ.க-வினர் குரலெழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``படத்தை யூடியூபில் வெளியிடுங்கள் அனைவரும் இலவசமாகவே பார்க்கட்டும்" எனக் கூறினார்.

இந்த நிலையில், கெஜ்ரிவாலின் இத்தகைய பேச்சைக் கண்டித்து, அவர் வீட்டின் முன் பா.ஜ.க-வினர் நேற்று போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பா.ஜ.க யுவமோர்ச்சா தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா, ``கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்" எனக் கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

தொடர்ந்து பேசிய தேஜஸ்வி, ``கெஜ்ரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் எப்போதுமே இந்தியா, இந்து விரோத கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். ராமர் கோயிலைக் கேலி செய்கிறார்கள், இந்து கடவுள்களைக் கேலி செய்கிறார்கள்" எனப் பத்திரிகையாளர்கள் முன் பேசினார்.

இந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற இ-ஆட்டோ நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ``நேற்று என்னுடைய வீடு தாக்கப்பட்டது. கெஜ்ரிவால் முக்கியமல்ல, இந்த நாடு தான் எனக்கு முக்கியம். நாட்டிற்காக என் உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். நாட்டின் மிகப்பெரிய கட்சியான (பாஜக) இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது. இது போன்ற குண்டர் ராஜ்ஜியத்தின் மூலம் நாட்டை முன்னேற்றவே முடியாது. இது மாதிரியான செயல்கள் இளைஞர்களுக்கு தவறான செய்தியைக் கடத்துகின்றன. நாட்டில் உள்ள வன்முறையை கலைய வேண்டும். 21-ம் நூற்றாண்டின் இந்தியாவுக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism