Published:Updated:

அக்னிபத்: ``பாஜக அலுவலகத்துக்கு காவல் இருக்க இளைஞர்கள் இரவு பகலாக உழைக்கவில்லை” -அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என நினைக்கும் இளைஞர்களை அவமரியாதை செய்ய வேண்டாம்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

அக்னிபத்: ``பாஜக அலுவலகத்துக்கு காவல் இருக்க இளைஞர்கள் இரவு பகலாக உழைக்கவில்லை” -அரவிந்த் கெஜ்ரிவால்

``ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என நினைக்கும் இளைஞர்களை அவமரியாதை செய்ய வேண்டாம்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

பாதுகாப்புப் படைக்கு `அக்னிபத்’ என்ற பெயரில் புதிய முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதற்கு மக்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்துவருகின்றனர். உத்தரப்பிரதேசம், தெலங்கானா, பீகார் எனப் பல மாநிலங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன. போராட்டங்களுக்கு மத்தியில் மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், அக்னிபத் தொடர்பாக பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா பேசுகையில், ``அக்னிபத் ஒரு நல்ல திட்டம். அக்னி வீரராக ஒருவர் நான்கு ஆண்டுகள் வரை பாதுகாப்புப் படையில் பணி செய்யலாம். நான்கு வருடங்களுக்குப் பிறகு, பணியிலிருந்து வெளியேறும்போது, ​​ரூ.11 லட்சம் பெற்று, அக்னி வீரன் பேட்ஜ் அணிந்துகொள்வார்.

பா.ஜ.க அலுவலகத்துக்கு நான் காவலர்களாக அமர்த்த விரும்பினால், அக்னி வீரனுக்கு முன்னுரிமை கொடுப்பேன்” என்று கூறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நிலையில். பல அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தக் கருத்துக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், ``நம் நாட்டு இளைஞர்கள் உடல் தேர்வில் தேர்ச்சி பெற இரவு பகலாகக் கடுமையாக உழைக்கிறார்கள். ராணுவத்தில் சேர்ந்து இளைஞர்கள் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என உழைக்கிறார்கள். பாஜக அலுவலகத்துக்கு வெளியே காவலராக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல'' எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism