Published:Updated:

கறுப்பு நிற காருக்கு மாறிய கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பாதுகாப்பு காரணமா?!

முதல்வர் பினராயி விஜயனின் கறுப்பு நிற கார்
News
முதல்வர் பினராயி விஜயனின் கறுப்பு நிற கார்

பிரதமர் நரேந்திர மோடி பயணிக்க புதிய கார் வாங்கப்பட்ட நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் காரை மாற்றியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

கேரள மாநில முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவி வகித்துவருகிறார் பினராயி விஜயன். கேரளாவில் முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் வெள்ளை நிற காரையே பயன்படுத்திவந்தனர். முதல்வர் பினராயி விஜயன் கடந்த நான்கு ஆண்டுகளாக வெள்ளை நிற இன்னோவா காரைப் பயன்படுத்திவந்தார். கேரளாவில் முதல்வர் காருக்கு 1-ம் எண்ணும், சீனியாரிட்டிபடி அமைச்சர்கள் காருக்கு தனித்தனி நம்பரும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில்தான் இதற்கு முன்பு டி.ஜி.பி-யாக இருந்த லோக்நாத் பெகரா பாதுகாப்பு காரணங்களுக்காக முதல்வர் கறுப்பு நிற காரில் பயணிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். இதையடுத்து முதல்வரின் பழைய நான்கு கார்களை மாற்றிவிட்டு புதிதாக நான்கு கார்கள் வாங்குவது பற்றிப் பரிசீலிகப்பட்டது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கறுப்பு நிற இன்னோவா கிரிஸ்டா கார்கள் மூன்றும், ஒரு டாடா ஹாரியர் கார் என நான்கு கார்களை வாங்குவதற்காக கேரள பொதுப்பணித்துறை ரூ.62.46 லட்சம் ஒதுக்கீடு செய்தது. கடந்த வாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் பயணிப்பதற்கான கறுப்பு நிற இன்னோவா கிரிஸ்டா கார் தயார்நிலையில் திருவனந்தபுரத்துக்கு வந்தது. முன்பக்கமும், பின்பக்கமும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் புதிய கார் அமைந்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாலக்காடு மாவட்ட சி.பி.எம் மாநாட்டை முடித்துவிட்டு, நேற்று திருவனந்தபுரம் வந்த முதல்வர் பினராயி விஜயனை அழைக்க கறுப்பு இன்னோவா கார் சென்றது. விமான நிலையத்திலிருந்து சி.பி.எம் அலுவலகமான ஏ.கே.ஜி சென்டருக்கு முதல் பயணத்தை அமைத்துக்கொண்டார் பினராயி விஜயன். பினராயி விஜயனின் காரைத் தவிர பைலட் வாகனம் உள்ளிட்ட மற்ற கார்கள் அனைத்தும் வெள்ளை நிறத்திலேயே உள்ளன.

முதல்வர் பினராயி விஜயனின் கறுப்பு நிற கார்
முதல்வர் பினராயி விஜயனின் கறுப்பு நிற கார்

இனி பாதுகாப்பு வாகனங்களும் கறுப்பு நிறத்தில் மாற்றப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கறுப்பு நிற காரில் பயணிப்பதால் இரவு நேரத்தில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெகரா அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பயணிக்க புதிய கார் வாங்கப்பட்ட நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் காரை மாற்றியிருப்பது கவனம் பெற்றுள்ளது.