Published:Updated:

"பாஜக மக்களிடையே வகுப்புரீதியான பிளவை ஏற்படுத்துகிறது!" - பினராயி விஜயன்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

``சிறுபான்மையினரைப் பிரிக்கும் சங்பரிவார் நடவடிக்கையை எதிர்க்கவோ அல்லது அதற்கெதிராக ஒன்றுபட்ட குரல் எழுப்பவோ தேவை ஏற்படும்போது, அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டும்." - பினராயி விஜயன்

"பாஜக மக்களிடையே வகுப்புரீதியான பிளவை ஏற்படுத்துகிறது!" - பினராயி விஜயன்

``சிறுபான்மையினரைப் பிரிக்கும் சங்பரிவார் நடவடிக்கையை எதிர்க்கவோ அல்லது அதற்கெதிராக ஒன்றுபட்ட குரல் எழுப்பவோ தேவை ஏற்படும்போது, அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டும்." - பினராயி விஜயன்

Published:Updated:
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சிறுபான்மையினரைப் பிரிக்கும் சங்பரிவார் நடவடிக்கைக்கு எதிராக யாரும் ஊமை சாட்சியாக இருந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.

கோழிக்கோட்டில் நடைபெற்ற முஜாஹித் மாநில மாநாட்டின் நிறைவுக் கூட்டத்தில் உரையாற்றிய பினராயி விஜயன், ``பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றன. வகுப்புவாத அச்சுறுத்தலைத் தாங்களாகவே எதிர்கொள்ள முடியும் என நினைப்பது தற்கொலைக்குச் சமமானது. சின்னச் சின்ன வேறுபாடுகளையெல்லாம் மறந்துவிட்டு ஒன்றாக நிற்பது அவசியம்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

இங்கு முக்கியமாக விவாதிக்கவேண்டியது, வகுப்புவாதத்தின்மீது நாம் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை. எனவே, மதச்சார்பற்ற சிந்தனைகொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஏனெனில், வேறுபாடுகளை அதிகரிக்கும் எந்தவொரு தலையீடும் உதவாது. அதோடு, சிறுபான்மையினரைப் பிரிக்கும் சங்பரிவார் நடவடிக்கையை எதிர்க்கவோ அல்லது அதற்கெதிராக ஒன்றுபட்ட குரல் எழுப்பவோ தேவை ஏற்படும்போது, அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டும். மாறாக யாரும் ஊமைச் சாட்சியாக இருக்கக் கூடாது. மதத்தை வகுப்புவாதத்துடன் அடையாளப்படுத்த முடியாது. ஆனால், பா.ஜ.க மக்களிடையே வகுப்புரீதியான பிளவை ஏற்படுத்துகிறது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இந்தியாவில் எந்தவொரு மதமும் ஒன்றைவிட மேலானதோ, கீழானதோ அல்ல. ஆனால், குடியுரிமைச் சட்டம் அல்லது அதிகாரத்தின் மூலமாக இதைத் தகர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்தியாவில் மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மிக அவசியம். அனைத்துக் குடிமக்களும் அச்சமின்றி வாழ வேண்டும். நாடு எந்தவிதப் பாகுபாடும் இல்லாத இடமாக மாற வேண்டும்" என்று கூறினார்.