Published:Updated:

கேரள ஆளுநர் Vs முதல்வர் மோதல்... பின்னணியில் மோகன் பகவத்?

ஆளுநர், முதல்வர்
பிரீமியம் ஸ்டோரி
ஆளுநர், முதல்வர்

இதுவரை நடந்த மோதலில் மறைமுகமாக பதிலடி கொடுத்துவந்த முதல்வர் பினராயி விஜயன் இந்த முறை ஆளுநரின் பெயரைச் சொல்லியே பதிலடி கொடுத்தார்

கேரள ஆளுநர் Vs முதல்வர் மோதல்... பின்னணியில் மோகன் பகவத்?

இதுவரை நடந்த மோதலில் மறைமுகமாக பதிலடி கொடுத்துவந்த முதல்வர் பினராயி விஜயன் இந்த முறை ஆளுநரின் பெயரைச் சொல்லியே பதிலடி கொடுத்தார்

Published:Updated:
ஆளுநர், முதல்வர்
பிரீமியம் ஸ்டோரி
ஆளுநர், முதல்வர்

தமிழ்நாட்டைப்போலன்றி, கேரளாவில் ஆளுநரும் முதல்வரும் நேரடியாகப் பெயரைச் சொல்லியே மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்!

பல்கலைக்கழகங்களில் விதிமுறை மீறிய நியமனங்கள் தொடர்பாக கேரள முதல்வருக்கு எதிரான ஆதாரம் வெளியிடுவதாகக் கூறி கடந்த 19-ம் தேதி ராஜ்பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆளுநர் ஆரிப் முகமது கான். “கண்ணூர் பல்கலைக்கழக வரலாற்று மாநாட்டில் குடியுரிமைச் சட்டம் பற்றிப் பேசியபோது, வரலாற்று ஆசிரியர் இர்ஃபான் ஹபீப் மேடையிலேயே என்னைத் தாக்க முயன்றார். அதைத் தடுக்க முயன்ற போலீஸாரை முதல்வர் பினராயி விஜயனின் உதவியாளரான கே.கே.ராகேஷ் தடுத்து நிறுத்தினார். இந்தச் சம்பவத்தில் காவல்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதற்கு, முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. லோக் ஆயுக்தா மற்றும் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதாக்களில் கையெழுத்து போட மாட்டேன்” என்றார்.

கேரள ஆளுநர் Vs முதல்வர் மோதல்... பின்னணியில் மோகன் பகவத்?

முதல்வருக்கு எதிரான ஆதாரம் என்று, கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடந்த பழைய வீடியோவை கவர்னர் வெளியிட்டார். அது ஏற்கெனவே தொலைக்காட்சிகளில் வெளியான வீடியோ என்பதால், ‘இதற்காகவா கவர்னர் இவ்வளவு பில்டப் கொடுத்தார்?’ என்ற விமர்சனம் எழுந்தது. “மலையாள சினிமாப் படம் ஒன்றில், ‘ரேகை’ (ஆதாரம்) என்னிடம் உள்ளது என பில்டப் கொடுக்கும் காமெடி நடிகர், இறுதியில் கைரேகையைக் காண்பித்து இதுதான் ரேகை எனக் கூறி சிரிக்கவைப்பார். அது போன்ற செயல் இது” என கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கிண்டலடித்தார்.

இதுவரை நடந்த மோதலில் மறைமுகமாக பதிலடி கொடுத்துவந்த முதல்வர் பினராயி விஜயன் இந்த முறை ஆளுநரின் பெயரைச் சொல்லியே பதிலடி கொடுத்தார். “கவர்னர் பதவியிலிருந்து உங்களைத் தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். கம்யூனிஸ்ட்டுக்கு எதிராகப் பேசுவதை அரசியல் கட்சியினர் செய்துகொள்வார்கள். கவர்னர் பதவியில் இருந்துகொண்டு நீங்கள் அதைச் செய்ய வேண்டாம்” எனக் காட்டமானார் பினராயி விஜயன்.

“பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலும், லோக் ஆயுக்தாவில் சில மாற்றங்கள் ஏற்படுத்தியும் கேரள சட்டசபையில் சட்டத் திருத்த மசோதாக் கள் நிறைவேற்றப்பட்டன. அந்த இரண்டு மசோதாக்களிலும் கையெழுத்து போட மாட்டேன் என கவர்னர் சொல்கிறார். அதில் குறை இருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சர் அல்லது துறைச் செயலாளரை அழைத்து விளக்கம் கேட்டிருக்கலாம். ஆனால் அரசியல் தலைவரைப் போன்று செய்தியாளர்களைச் சந்தித்தது தவறு” என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

ஆளும் சி.பி.எம் தரப்போ, “திருச்சூருக்கு வந்திருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை கடந்த 17-ம் தேதி சந்தித்துவிட்டு வந்த கையோடு, 19-ம் தேதி செய்தி யாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறார் ஆளுநர். அவர் செய்தி யாளர்களைச் சந்தித்ததன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இருக்கிறார். பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் கவர்னர் மூலம் குடைச்சல் கொடுக்கும் செயலின் உச்சகட்டம் இது” என்கிறது.

பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் ஆளுநர்-முதல்வர் யுத்தம் எப்போதுதான் முடிவுக்கு வருமோ?