Published:Updated:

சி.பி.எம்: விலகிய கொடியேரி பாலகிருஷ்ணன்... கேரள மாநிலச் செயலாளரானார் கோவிந்தன் மாஸ்டர் - யார் இவர்?

சி.பி.எம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர்

சி.பி.எம் மாநிலச் செயலாளராக எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகவும், இதனால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

சி.பி.எம்: விலகிய கொடியேரி பாலகிருஷ்ணன்... கேரள மாநிலச் செயலாளரானார் கோவிந்தன் மாஸ்டர் - யார் இவர்?

சி.பி.எம் மாநிலச் செயலாளராக எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகவும், இதனால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
சி.பி.எம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர்

கேரள மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சி.பி.எம் கட்சியைப் பொறுத்தமட்டில் முதல்வர் பதவியைவிட பவர்ஃபுல் பதவியாக மாநிலச் செயலாளர் பதவி பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு மாநிலச் செயலாளராக பினராயி விஜயன் முதல்வர் ஆனதைத் தொடர்ந்து கொடியேரி பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் ஆனார். எஸ்.எஃப்.ஐ மாநிலச் செயலாளர், கண்ணூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் கொடியேரி பாலகிருஷ்ணன். பின்னர் தொடர்ச்சியாக மூன்று முறை சி.பி.எம் மாநிலச் செயலாளராக இருந்துவந்தார். கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. இடையில் மருத்துவச் சிகிச்சைக்காகச் சில மாதங்கள் விடுப்பு எடுத்துச் சென்றிருந்தார் கொடியேரி பாலகிருஷ்ணன்.

எம்.வி.கோவிந்தன் மாஸ்டர்
எம்.வி.கோவிந்தன் மாஸ்டர்

அப்போது ஏ.விஜயராகவன் பொறுப்பு மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் மாநிலச் செயலாளர் பதவியை சில மாதங்களுக்கு முன்பு ஏற்றுக்கொண்டார் கொடியேரி பாலகிருஷ்ணன். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைமையிடம் கூறியிருக்கிறார் கொடியேரி பாலகிருஷ்ணன். இதையடுத்து பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் திருவனந்தபுரம் ஏ.கே.ஜி சென்டரில் ஆலோசனை நடத்தி மாநில உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் எம்.வி.கோவிந்தன் மாஸ்டரை மாநிலச் செயலாளராக்கத் தீர்மானித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பிறகு நடந்த சி.பி.எம் மாநிலகுழுக் கூட்டத்தில் புதிய மாநிலச் செயலாளராக எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பை சி.பி.எம் மாநிலக்குழு வெளியிட்டது. 1991-ம் ஆண்டு முதல் சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினராக இருக்கிறார் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர். 1996 முதல் 2006 வரை தளிப்பறம்பு தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ ஆனார். கடந்த தேர்தலில் மீண்டும் எம்.எல்.ஏ ஆன கோவிந்தன் மாஸ்டர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். தலைமை ஆசிரியராக இருந்தவர். புத்தகங்களும் எழுதியிருக்கிறார். இப்போது சி.பி.எம் தேசியக்குழு உறுப்பினராக இருக்கிறார் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர். கோவிந்தன் மாஸ்டரின் மனைவி சியாமளா, கண்ணூர் மாவட்டக்குழு உறுப்பினராக இருக்கிறார்.

சி.பி.எம் மாநில ச்செயலாளர் பதவியிலலிருந்து விலகிய கொடியேரி பாலகிருஷ்ணன்
சி.பி.எம் மாநில ச்செயலாளர் பதவியிலலிருந்து விலகிய கொடியேரி பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்ற எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் கூறும்போது, "கட்சி பலகட்டங்களிலும் பல பொறுப்புகளை வழங்கியிருக்கிறது. இப்போது கட்சித் தீர்மானத்தின்படி மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கட்சிக் கொள்கையின்படி அனைவரையும் ஒருங்கிணைத்து முன்னேற்றப் பாதையில் செல்வோம்" என்றார்.

எம்.வி.கோவிந்தன் மாஸ்டர், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கிறார். சி.பி.எம் மாநிலச் செயலாளராக எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகவும், இதனால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.