Published:Updated:

கேரளாவில் பொங்கல் விடுமுறை: முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை... உத்தரவை மாற்றிய பினராயி அரசு!

பினராயி விஜயன் - ஸ்டாலின்
News
பினராயி விஜயன் - ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு, உடனடியாக கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு நாளை (ஜனவரி 14) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் தமிழ் மொழி அதிகம் பேசும் மக்களைக்கொண்ட ஆறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி உள்ளுர் விடுமுறை என்று கேரள அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ``கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14-ம் நாள் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை அறிவித்துவருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14-ம் தேதி தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும். ஆனால் 2022 -ம் ஆண்டில் ஜனவரி 15-ம் நாள் இந்த ஆறு மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ஜனவரி 14-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக பொங்கல் விடுமுறை அளிக்க வேண்டும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இதையடுத்து முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு, முன்னதாக ஜனவரி 15-ம் தேதி விடுமுறை என்று அறிவித்திருந்ததை மாற்றி உடனடியாக, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையில் குறிப்பிட்டிருந்த ஆறு மாவட்டங்களுக்கு, நாளை, அதாவது ஜனவரி 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவில் விடுமுறை தினத்துக்கான மாற்றுப் பணி நாளாக அடுத்து வரும் சனிக்கிழமை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz