Published:Updated:

கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கேரள கவர்னர்... பினராயி விஜயன் அதிரடி!

கவர்னர் அரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன்

இனி ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்தும் கவர்னரை நீக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம், கவர்னரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கேரள கவர்னர்... பினராயி விஜயன் அதிரடி!

இனி ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்தும் கவர்னரை நீக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம், கவர்னரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

Published:Updated:
கவர்னர் அரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன்

கேரள மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்திலும், முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஷயத்திலும் கவர்னர் ஆரிஃப் முகமது கானின் செயல்பாடுகள் முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளும் சி.பி.எம் கட்சிக்கும் அதிருப்தியை எற்படுத்தின. கவர்னரின் நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போடும்விதமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கவர்னரை மாற்றுவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் எனவும், அதற்காக வரும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சட்டசபைக் கூட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. சட்ட பல்கலைக்கழகம் தவிர, மாநிலத்திலுள்ள 15 பல்கலைக்கழகங்களிலும் வேந்தராக கவர்னர் இருந்துவருகிறார். இந்த நிலையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் இருக்கும் விதிகளிலும் மாற்றம் ஏற்படுத்தி தனித்தனி மசோதாக்கள் கொண்டுவர அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

கேரள கலாமண்டலம் கல்ப்பித பல்கலைக்கழகம்
கேரள கலாமண்டலம் கல்ப்பித பல்கலைக்கழகம்

வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை மாற்றிவிட்டு அமைச்சரையோ, கல்வியாளர்களையோ வேந்தராக நியமிக்க வேண்டும் என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் கலாமண்டலம் கல்ப்பித பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து கவர்னர் ஆரிஃப் முகமது கான் நீக்கப்பட்டிருக்கிறார். கேரள கலாசாரதுறையின் கீழ் கலாமண்டலம் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. மாநில கலாசாரத்துறை அமைச்சர் வி.என்.வாசவன் இந்தப் பல்கலைகழக துணைவேந்தராக இருக்கிறார்.

2006-ம் ஆண்டிலிருந்து கவர்னர் இந்தப் பல்கலைகழக வேந்தராக இருந்துவருகிறார். கவர்னரை வேந்தர் பதவியிலிருந்து நீக்கி கலாசாரத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கலாமண்டலம் பல்கலைக்கழக விதிகளின்படி வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்கிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வேந்தர் பதவியிலிருந்து கவர்னர் நீக்கப்பட்டிருக்கிறார்.

ஆரிஃப் முகமது கான்
ஆரிஃப் முகமது கான்

அந்தப் பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் விரைவில் நியமிக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இனி ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்தும் கவர்னரை நீக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம் கவர்னரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.