Published:Updated:

கேரளா: கொலைசெய்யப்பட்ட அட்டப்பாடி மதுவின் வீட்டுக்குச் சென்ற கவர்னர் - நடந்தது என்ன?!

அட்டப்பாடி மது வீட்டில் கவர்னர்

அட்டப்பாடி மது கொலை வழக்கில் சாட்சிகள் பலரும் கோர்ட்டில் வாக்குமூலத்தை மாற்றிக் கூறிவருகின்றனர். மேலும் சாட்சிகள் மிரட்டப்படுவதாக மதுவின் குடும்பத்தினர் தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர்.

கேரளா: கொலைசெய்யப்பட்ட அட்டப்பாடி மதுவின் வீட்டுக்குச் சென்ற கவர்னர் - நடந்தது என்ன?!

அட்டப்பாடி மது கொலை வழக்கில் சாட்சிகள் பலரும் கோர்ட்டில் வாக்குமூலத்தை மாற்றிக் கூறிவருகின்றனர். மேலும் சாட்சிகள் மிரட்டப்படுவதாக மதுவின் குடும்பத்தினர் தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர்.

Published:Updated:
அட்டப்பாடி மது வீட்டில் கவர்னர்

கேரள மாநிலம், பாலக்காடு முக்காலி பகுதியில் பசிக்காக கடையிலிருந்து உணவு திருடியதாகக் கூறி பழங்குடியினத்தைச் சேர்ந்த அட்டப்பாடி மது 2018-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 22-ம் தேதி அடித்துக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்பகுதி வியாபாரிகள், கார் டிரைவர்கள் மற்றும் சிலர் ஈடுபட்டதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. எஃப்.ஐ.ஆரில் முதல் குற்றவாளியாக இருக்கும் பட்டியலிலுள்ள ஹுசைன், மூன்றாவது குற்றவாளியான சம்சுதீன், 16-ம் குற்றவாளியான முனீர் ஆகியோர் சேர்ந்து மதுவைத் தாக்கியதாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 16 பேர் மீது கொலை, பழங்குடியினர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. உணவு திருடியதாகக் கூறி மதுவைப் பிடித்து அஜமுடி பகுதியில்வைத்து தாக்குதல் நடத்தியதற்கு முக்கியக் காரணமான ஆறுபேரும் இந்தக் குற்றவாளிகள் பட்டியலில் உண்டு. அதில் சி.ஐ.டி.யூ நிர்வாகியும், டாக்ஸி டிரைவருமான சம்சுதீன் கம்பால் தாக்கியதில் மதுவின் விலா எலும்பு முறிந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 15 இடங்களில் ஏற்பட்ட காயங்களால் மது இறந்ததாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது.

கொலைசெய்யப்பட்ட அட்டப்பாடி மது
கொலைசெய்யப்பட்ட அட்டப்பாடி மது

அட்டப்பாடி மது கொலை வழக்கில் சாட்சிகள் பலரும் கோர்ட்டில் வாக்குமூலத்தை மாற்றிக் கூறிவருகின்றனர். மேலும் சாட்சிகள் மிரட்டப்படுவதாக மதுவின் குடும்பத்தினர் தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர். இது பற்றி மதுவின் தாய் மல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், ``மது வழக்கில் சாட்சிகள் பல்டியடித்துவரும் நிலையில் மத்திய அரசு உதவ வேண்டும்" என அமித் ஷாவுக்கு அளித்த மனுவில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் மதுவின் குடும்பத்தினரை நேற்று அவர்களது வீட்டுக்கே சென்று திடீரெனச் சந்தித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மதுவின் தாயுடன் கவர்னர் ஆரிப் முகமது கான்
மதுவின் தாயுடன் கவர்னர் ஆரிப் முகமது கான்

பாலக்காடு மாவட்டம், சிட்டக்கி பகுதியிலுள்ள மதுவின் வீட்டுக்குச் சென்ற கவர்னர் ஆரிப் முகமதுகான் அங்கு அவரது தாய் மல்லியிடம் பேசியிருக்கிறார். `மதுவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்’ எனவும், மதுவின் குடும்பத்தினரின் வேதனையில் பங்கெடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மதுவின் குடும்பத்தினர் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதை எழுத்துபூர்வமாக அளிக்கும்படி கூறியதாக கவர்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கவர்னர் வருகையால் மதுவின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக மதுவின் சகோதரி சரசு தெரிவித்திருக்கிறார்.