Published:Updated:

`தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாட்டோம்!' - அதிரடித்த கேரள அரசு

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

புதுப்பிக்கப்பட்ட குடியுரிமை சட்டத்திற்காகப் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்படும் என பொதுமக்கள் அஞ்சுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட மசோதாவை கேரளத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் எதிர்க் கட்சியான காங்கிரசுடன் இணைந்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார் பினராயி விஜயன். அதே சமயம், வன்முறையைத் தூண்டும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் போன்றவற்றை நடத்துவதையும் தடுத்து நிறுத்தினார்.

குடியுஐமை சட்டத்திற்கு எதிராக பினராயி விஜயன் - ரமேஷ் சென்னிதலா
குடியுஐமை சட்டத்திற்கு எதிராக பினராயி விஜயன் - ரமேஷ் சென்னிதலா

இந்த நிலையில், 'குடியுரிமைச் சட்டத்திற்கு பயன்படும் என்பதால் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தபோவதில்லை' என்று அறிவித்துள்ளது கேரள அரசு. 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான நடவடிக்கைகள் இப்போது நடந்துவரும் நிலையில், கேரள அரசு இப்படி அதிரடி முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து கேரள அரசு முதன்மைச் செயலர் கே.ஆர்.ஜோதிலால் வெளியிட்டுள்ள உத்தரவில், புதுப்பிக்கப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்காகப் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்படும் என பொதுமக்கள் அஞ்சுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தேசிய மக்கள்தொகை பதிவிற்கு ஒத்துழைப்பதில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவித்துள்ளார். இந்த நிலையில், கேரள அரசும் அதுபோன்று முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு கேரள அரசு ஒத்துழைத்துவந்துள்ளது. அதுபோன்று, 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கும் முழு ஒத்துழைப்பு நல்க முடிவுசெய்திருந்தோம்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

அதேசமயம், இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய குடியுரிமைப் பதிவேட்டிற்குப் பயன்படுத்தப்படும் என்று தெரியவருகிறது. எனவே ,தேசிய மக்கள்தொகைப் பட்டியலைப் புதுப்பிக்க கேரள அரசு ஒருபோதும் உதவி செய்யாது. எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான நடவடிக்கைகளை மாநில அரசு நிறுத்திவைக்கிறது” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு