Published:Updated:

`ஓ.பி.எஸ் முல்லைப் பெரியாறு நிகழ்ச்சியில் ட்ரோன் பறக்க விட்டது ஏன்?’ - விளக்கம் கேட்கும் கேரளா!

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது, ட்ரோன் பறக்கவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதகுப் பகுதியில் பறக்கும் ட்ரோன்
மதகுப் பகுதியில் பறக்கும் ட்ரோன்

தேனி மாவட்டத்தில் உள்ள 14,707 ஏக்கர் விளைநிலங்களின் முதல் போக சாகுபடிக்காக நேற்று முன் தினம், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 300 கன அடி வீதம் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். தண்ணீர் திறப்பதற்காக, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள அணையின் மதகுப் பகுதிக்குச் சென்றார்.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை
Vikatan

அந்நிகழ்வை வீடியோ எடுப்பதற்காக ட்ரோன் பறக்கவிடப்பட்டது. இது, தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இரண்டு நாள்களாக கேரள ஊடகங்கள் இவ்விவகாரத்தை காரசாரமாக விவாதித்துக்கொண்டிருக்கின்றன.

அந்த இடம், முல்லைப்பெரியாறு அணைக்கு கட்டுப்பட்ட இடம். அதை நாம் 999 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். அதற்காக, இப்போதுவரை பணம் கட்டிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.
தமிழக விவசாயிகள்

`ஷட்டர் இருக்கும் பகுதி, பாதுகாக்கப்பட்ட பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதி. முல்லைப்பெரியாறு அணையின் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது’ என்று கூறி, பெரியாறு புலிகள் சரணாலய இணை இயக்குநர் சில்பா, ட்ரோன் பறக்கவிட்டது ஏன்? என விளக்கம் கேட்டு, தமிழக பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மதகுப் பகுதியில் பறக்கும் ட்ரோன்
மதகுப் பகுதியில் பறக்கும் ட்ரோன்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், ``ட்ரோன் இயக்கப்போகிறார்கள் என எங்களுக்கு முன்பே கூறியிருந்தால், ஒரு கடிதம் எழுதி அவர்களிடம் கொடுத்திருக்கலாம். கேரள ஊடகங்கள் இததை பெரிய விவாதப் பொருளாக மாற்றிவிட்டன. அதனால், வேறு வழியின்றி பெரியாறு புலிகள் சரணாலய நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது” என்றார்.

ஏதாவது பிரச்னை செய்ய வேண்டும் என்பதற்காகவே, கேரள வனத்துறையும் கேரள ஊடகங்களும் திட்டமிட்டே இவ்விவகாரத்தை ஊதி பெரிதாக்கியிருக்கின்றன.
தமிழக விவசாயிகள்

``முன் அனுமதி இல்லாமல் ட்ரோன் பறக்கவிட்டது தவறுதான். அந்த இடம், முல்லைப்பெரியாறு அணைக்கு கட்டுப்பட்ட இடம். அதை நாம் 999 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். அதற்காக, இப்போதுவரை பணம் கட்டிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. ட்ரோன் பறக்கவிடும்போது, அங்கே பாதுகாப்பில் இருந்தார்களே கேரள போலீஸார், அவர்களின் சம்பளம் உட்பட, செலவுகளை தமிழக அரசுதான் இன்றுவரை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

`இனி ஓ.பி.எஸ் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பேன்!'- ஆண்டிபட்டி எம்.எல்.ஏ கொந்தளிக்க என்ன காரணம்?

அங்கிருந்த கேரள போலீஸாரோ கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளோ எதுவும் பேசவில்லை. ஏதாவது பிரச்னை செய்ய வேண்டும் என்பதற்காகவே, கேரள வனத்துறையும் கேரள ஊடகங்களும் திட்டமிட்டே இவ்விவகாரத்தை ஊதி பெரிதாக்கியிருக்கின்றன” என்று கொதிக்கிறார்கள், முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள்.