Published:Updated:

காங்கிரஸ் Vs சி.பி.எம்: தொடரும் 'அரசியல் படுகொலை’களால் பற்றி எரியும் கேரளா! - என்ன நடக்கிறது அங்கு?

கொலையான எஸ்.எஃப்.ஐ மாணவர் செயற்பாட்டாளர் தீரஜ்
News
கொலையான எஸ்.எஃப்.ஐ மாணவர் செயற்பாட்டாளர் தீரஜ்

இந்தச் சம்பவம் தொடர்பாக கே.எஸ்.யூ மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிகில் பைலியை கேரள காவல்துறை கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகிறது. மேலும், தப்பியோடிய பிற மாணவர்களையும் காவல்துறையினர் மிகத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

அடுத்தடுத்து தொடரும் அரசியல் படுகொலைகளால், கொலைக்களமாக மாறிவருகிறது கேரளா. கடந்த மாதம்தான் ஆலப்புழா மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ - பா.ஜ.க இடையே நிலவிவந்த பிரச்னையின் காரணமாக இரு தரப்பிலும் அரசியல் படுகொலைகள் நடந்து கேரளாவையே பதறவைத்தன. இந்தச் சூடு தணிவதற்குள், தற்போது காங்கிரஸ் - சி.பி.எம் கட்சிகளுக்கு இடையேயான மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கொலைசெய்யப்பட்ட எஸ்.எஃப்.ஐ மாணவர்  தீரஜ்
கொலைசெய்யப்பட்ட எஸ்.எஃப்.ஐ மாணவர் தீரஜ்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியில் மாணவர் பிரிவான கே.எஸ்.யூ-வுக்கும் (Kerala Students Union -KSU), சி.பி.எம் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ-க்கும் (Students' Federation of India-SFI) இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில், எஸ்.எஃப்.ஐ மாணவர் செயற்பாட்டாளரும், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவருமான தீரஜ் என்ற மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். படுகாயமடைந்த மேலும் மூன்று எஸ்.எஃப்.ஐ மாணவர்களில் ஒருவர் உயிருக்குப் போராடிவரும் நிலையில், சிகிச்சைபெற்றுவருகிறார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

படுகொலை எதிரொலி:

இருப்பினும் இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் - சி.பி.எம் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, படுகொலையான மாணவன் தீரஜின் சொந்த மாவட்டத்திலுள்ள காங்கிரஸ் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள மகாராஜா கல்லூரியிலும் எஸ்.எஃப்.ஐ - கே.எஸ்.யூ மாணவர் அமைப்பினருக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, எட்டுப் பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். தொடர்ந்து கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலும் பதற்றம் நிலவுவதால், காவல்துறை கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டிருக்கிறது.

தீரஜ்
தீரஜ்

முதல்வர் கண்டனம்:

இந்தச் சம்பவம் குறித்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ``இடுக்கியிலுள்ள அரசுப் பொறியியல் கல்லூரி மாணவரும், எஸ்.எஃப்.ஐ செயல்பாட்டாளருமான தீரஜ் ராஜேந்திரன் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வருத்தம் தருகிறது. இந்தக் கொலைச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. கல்லூரிகளில் கலவரத்தை உருவாக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது. தீரஜ் கொலையாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

சி.பி.எம் குற்றச்சாட்டு:

இந்தச் சம்பவம் குறித்து சி.பி.எம் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், ``இது திட்டமிட்ட கொலை. மாநிலத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் 21-வது இடதுசாரி கட்சி நிா்வாகி கொலை இது. இந்த வன்முறை அரசியலை பா.ஜ.க., காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலையைச் சீா்குலைக்க காங்கிரஸ் முயல்கிறது" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், சி.பி.எம் கட்சியின் கல்வித்துறை அமைச்சர் பிந்து பேசியபோது, ``இளைஞா் காங்கிரஸ் தலைவா் தலைமையிலான கும்பல் பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவா்கள் மீதான இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றிருக்கிறார்.

கேரளா
கேரளா

காங்கிரஸ் மறுப்பு:

ஆனால் கேரள மாநில காங்கிரஸ் தலைவரான கே.சுதாகரன், ``இது போன்ற வன்முறைகளை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது. கேரளாவில் எந்தக் கட்சி அதிகமான வன்முறையில் ஈடுபட்டுவருகிறது என்பதை மக்களே தீா்மானிக்கட்டும். மாநிலத்தில் நடைபெறும் அனைத்துத் தாக்குதல்களுக்கும் பின்னணியில் யாா் இருக்கின்றனர் என்பதை மக்கள் அறிவார்கள். எனவே, எங்கள்மீது குற்றம்சாட்ட சி.பி.எம் கட்சிக்கு எந்த உரிமையும் இல்லை. இந்தக் கொலைக்கான பின்னணி குறித்து சி.பி.எம் கட்சியினர் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்!" என காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கே.எஸ்.யூ மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிகில் பைலியை கேரள காவல்துறை கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகிறது. மேலும், தப்பியோடிய பிற மாணவர்களையும் காவல்துறையினர் மிகத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.