Published:Updated:

"மோடி அரசின், ஜனநாயகத்தைக் கொல்லும் முயற்சி இது" - தேஜஸ்விக்கு எதிரான சோதனை குறித்து கார்கே காட்டம்

மல்லிகார்ஜுன கார்கே

"நெருங்கிய நண்பனின் சொத்து மதிப்பு விண்ணைத் தொட்டபோதும், விசாரணைகள் ஏன் நடத்தப்படவில்லை... இந்தச் சர்வாதிகார போக்குக்கு மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள்." - கார்கே

Published:Updated:

"மோடி அரசின், ஜனநாயகத்தைக் கொல்லும் முயற்சி இது" - தேஜஸ்விக்கு எதிரான சோதனை குறித்து கார்கே காட்டம்

"நெருங்கிய நண்பனின் சொத்து மதிப்பு விண்ணைத் தொட்டபோதும், விசாரணைகள் ஏன் நடத்தப்படவில்லை... இந்தச் சர்வாதிகார போக்குக்கு மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள்." - கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

ரயில்வே பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களிடம் நிலத்தை எழுதி வாங்கிய முறைகேடு வழக்கில், பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரின் மனைவி ராப்ரி தேவி ஆகியோர் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று (10-3-23) அமலாக்கத்துறையினர் டெல்லி, பீகார் ஆகிய இடங்களில் லாலு பிரசாத் யாதவுக்குச் சொந்தமான பல இடங்களில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதோடு பாட்னா, புல்வாரி ஷெரீப், டெல்லி-என்சிஆர், ராஞ்சி, மும்பை ஆகிய இடங்களில் அவர் மகள்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது. அப்போது ரூ.53 லட்சம் பணம், அமெரிக்க டாலர் 1,900, சுமார் 540 கிராம் தங்கம், 1.5 கிலோ தங்க நகைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை கூறியிருக்கிறது. அதோடு லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்
ட்விட்டர்

இந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் வீட்டில் நடந்த சோதனைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "பண மோசடி விசாரணை என்னும் பெயரில் தேஜஸ்வி யாதவின் மனைவி, சகோதரிகள் ஆகியோர் துன்புறுத்தப்படுகிறார்கள். லாலு பிரசாத் வயதானவர், உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இருந்தும்கூட மோடி அரசு அவரிடம் மனிதாபிமானம் காட்டவில்லை. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தைக் கொல்ல மோடி அரசு ஒரு மோசமான முயற்சியை மேற்கொள்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், ``கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடியபோது மோடி அரசின் அமலாக்கத்துறை எங்கு போனது?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதோடு தொழிலதிபர் கௌதம் அதானியைக் குறிப்பிட்டு, "நெருங்கிய நண்பனின் சொத்து மதிப்பு விண்ணைத் தொட்டபோதும், விசாரணைகள் ஏன் நடத்தப்படவில்லை... இந்தச் சர்வாதிகாரப் போக்குக்கு மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள்" என்றும் பதிவிட்டிருக்கிறார்.