சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கொரோனா பரவல் காரணமாக வட கொரியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஆனால் இத்தகைய சூழலில், வட கொரியா தொடர்ச்சியாக ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
``தென் கொரியாவின் ராணுவத்திடமும் ஏவுகணைகள் இருக்கின்றன. வட கொரியா எங்களுக்கு எதிராக ஏவுகணையைப் பயன்படுத்தினால் நாங்களும் பயன்படுத்துவோம்" என தென் கொரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அண்மையில் வட கொரியாவின் தொடர் ஏவுகணைச் சோதனைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தென் கொரிய அதிபருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜோங் இது தொடர்பாக கூறியதாவது, ``தென் கொரியா எங்களின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், நாங்கள் அவர்களின் மீது அணு ஆயுதங்களை உபயோகப்படுத்துவோம். அதைத்தவிர எங்களுக்கு வேறு எந்த வழியும் கிடையாது. எதிரிகளின் படைகளை அழிப்பதற்காக மட்டுமே இது பயன்படுத்தப்படும்'' என்று கூறியிருக்கிறார்.
