Published:Updated:

கர்நாடகா: ``வளர்ந்துவரும் மதப் பிளவை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்!" - கிரண் மஜும்தார் ஷா

கிரண் மஜும்தார் ஷா ( ட்விட்டர் )

`கர்நாடகம் எப்போதுமே உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது போன்ற வகுப்புவாதத்தை நாம் அனுமதிக்கக் கூடாது. இது வகுப்புவாதமாக மாறினால் அது நமது உலகளாவிய தலைமையை அழித்துவிடும்.' - கிரண் மஜும்தார் ஷா.

கர்நாடகா: ``வளர்ந்துவரும் மதப் பிளவை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்!" - கிரண் மஜும்தார் ஷா

`கர்நாடகம் எப்போதுமே உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது போன்ற வகுப்புவாதத்தை நாம் அனுமதிக்கக் கூடாது. இது வகுப்புவாதமாக மாறினால் அது நமது உலகளாவிய தலைமையை அழித்துவிடும்.' - கிரண் மஜும்தார் ஷா.

Published:Updated:
கிரண் மஜும்தார் ஷா ( ட்விட்டர் )

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்திய தொழிலதிபர் கிரண் மஜும்தார் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாகக் கருத்து பதிவிட்டிருக்கிறார்.

பயோகான் தலைவர் கிரண் மஜும்தார் ஷா நேற்றைய தினம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையைத் தனது ட்விட்டரில் டேக் செய்து, ``கர்நாடகம் எப்போதுமே உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியுள்ளது, இது போன்ற வகுப்புவாதத்தை நாம் அனுமதிக்கக் கூடாது. இது வகுப்புவாதமாக மாறினால் அது நமது உலகளாவிய தலைமையை அழித்துவிடும். வளர்ந்துவரும் இந்த மதப் பிளவை பசவராஜ் பொம்மை தயவுசெய்து தீர்க்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

அமித் மல்வியா
அமித் மல்வியா
ட்விட்டர்

இதைத் தொடர்ந்து கிரண் மஜும்தார் ஷா பல ட்விட்டர் பயனாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் இந்துக் கடைக்காரர்கள் மசூதிகளுக்கு வெளியே கடை வைக்க அனுமதிக்கப்படுகிறார்களா என்று ட்விட்டர் பயனர் ஒருவர் கேட்டதற்கு மஜும்தார் ஷா, "பெங்களூரு முழுவதும் உள்ள மசூதிகளுக்கு அருகில் பல இந்துக் கடை உரிமையாளர்களை நான் பார்த்திருக்கிறேன். மேலும், எப்போது முதல் நாம் மதத்தின் அடிப்படையில் கடை உரிமையாளர்களை அடையாளம் காண ஆரம்பித்தோம்?" எனக் கேள்வி எழுப்பினார்.

கிரண் மஜும்தார் ஷா-வின் பதிவுக்கு பா.ஜ.க தலைவர் அமித் மல்வியா, ``கிரண் ஷா போன்றவர்கள் தங்களுடைய தனிப்பட்ட, அரசியல் சாயலான கருத்தைத் திணிப்பதும், ITBT துறையில் இந்தியாவின் தலைமையுடன் அதைக் குழப்புவதும் துரதிர்ஷ்டவசமானது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism