Election bannerElection banner
Published:Updated:

அருப்புக்கோட்டை: 9-வது முறையாக வென்ற கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் #TNelections2021

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

சாத்தூர் தொகுதியில் ஆறு முறையும், விளாத்திகுளம் மற்றும் அருப்புக்கோட்டைத் தொகுதிகளில் தலா ஒரு முறையும் என அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் சார்பாகவும் எட்டு முறை எல்.எல்.ஏ-வாகியிருக்கிறார் ராமச்சந்திரன்.

1977-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரைத் தேர்ந்தெடுத்து தமிழக முதல்வராக்கிய சிறப்புபெற்றது அருப்புக்கோட்டை தொகுதி. இந்தத் தொகுதியில் அனைத்திந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி ஒரு முறையும், 6 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. திருச்சுழி தொகுதி உருவாக்கப்பட்டதற்கு முன்பு அருப்புக்கோட்டை தொகுதியில் 2006-ல் திமுக-வில் தங்கம் தென்னரசுவும், 2011-ல் அதிமுக-வைச் சேர்ந்த வைகைச்செல்வனும் வெற்றிபெற்றனர். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளராக இந்தத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இந்த முறையும் மீண்டும் அங்கு தி.மு.க சார்பில் களமிறங்கினார். விருதுநகரில் தங்கியிருந்தாலும், அடிக்கடி தொகுதிக்குள் வலம்வந்த ராமச்சந்திரன், கடந்த காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடான பகுதிகளில் சொந்தச் செலவில் லாரியில் குடிநீர் விநியோகம் செய்தது, கொரோனா காலத்தில் தொகுதி மக்களுக்கு நிவாரணம் அளித்தது, மக்களின் நல்லது கெட்டது நிகழ்வுகளில் கலந்துகொண்டது போன்றவை அவரது வெற்றிக்குச் சாதகமான அம்சங்களாக இருந்தன. அவரை எதிர்த்து அதிமுக சார்பில் மூன்றாம் முறையாகக் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் மீது தேர்தல் நேரத்தில் மட்டுமே தொகுதிக்குள் தலைகாட்டுகிறார் என்றும், கொரோனா காலத்தில்கூட எட்டிப் பார்க்கவில்லை என்றும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ராமச்சந்திரனுக்குக் கூடுதல் ப்ளஸ் பாயின்ட்டாக பார்க்கப்பட்டது.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

மக்கள் நீதி மய்ய வேட்பாளராகப் போட்டியிட்ட ஜெயவிலாஸ் நூற்பாலை நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான உமாதேவிக்கு அவர் சார்ந்த நாயக்கர் சமுதாய மக்கள் மற்றும் அந்த நிறுவன தொழிலாளர்களின் வாக்குகள் மட்டுமே சாதகமாக இருந்தன. கடந்த காலங்களில் சாத்தூர் தொகுதியில் ஆறு முறையும், விளாத்திகுளம் மற்றும் அருப்புக்கோட்டைத் தொகுதிகளில் தலா ஒரு முறையும் என அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் சார்பாகவும் எட்டு முறை எல்.எல்.ஏ-வாகியிருக்கிறார் ராமச்சந்திரன்.

எட்டுமுறை எம்.எல்.ஏ வாக இருந்த ராமச்சந்திரனுக்கு ஒன்பதாவது முறை எம்.எல்.ஏ ஆவதற்கான அனைத்துச் சாதகமான அம்சங்களும் வாக்கு எண்ணிக்கையில் காணப்பட்டன. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே முன்னிலையில் இருந்தார் ராமச்சந்திரன். அவருக்கு பெரிய அளவில் போட்டியைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வைகைச்செல்வன் தொடர்ந்து பின்னடைவில் இருந்தார். அனைத்துச் சுற்றுகள் முடிவில் காலை முதலே முன்னிலையில் இருந்த ராமச்சந்திரன் அதிமுக-வின் வைகைச் செல்வனைவிட 37,134 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு