Election bannerElection banner
Published:Updated:

திருச்சி மேற்கு:'புதுமுக வேட்பாளரை வென்று அமைச்சர் பதவியை நெருங்கிய கே.என்.நேரு!' #TNelections2021

கே.என்.நேரு
கே.என்.நேரு

கடந்த 25 வருடங்களாக திருச்சி திமுக-வில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வரும் நேரு, 1989 தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரானார். மின்சாரத்துறை, பால்வளம், செய்தித்துறை, தொழிலாளர் நலத்துறைகளைக் கவனித்தவர். 1996 தேர்தலில் வெற்றிபெற்று உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரானார்.

தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் அமைச்சராவது நிச்சயம் என்ற பட்டியலில் இடம்பெற்றவர் திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு வேட்பாளருமான கே.என்.நேரு. அதனாலேயே திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி, நட்சத்திர வேட்பாளர் போட்டியிடும் தொகுதியாகப் பார்க்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு வரை `திருச்சி இரண்டாவது சட்டமன்றத் தொகுதி’ என்று அழைக்கப்பட்டுவந்தது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு `திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகுதியை 1957 முதல் ஏழு முறை தி.மு.க-வும், ஆறு முறை அ.தி.மு.க-வும், இரண்டு முறை கம்யூனிஸ்ட் கட்சியும் கைப்பற்றியிருந்தன.

கே.என்.நேரு
கே.என்.நேரு

கடந்த 25 வருடங்களாக திருச்சி திமுக-வில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வரும் நேரு, 1989 தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரானார். மின்சாரத் துறை, பால்வளம், செய்தித்துறை, தொழிலாளர் நலத்துறைகளைக் கவனித்துவந்தவர், 1996 தேர்தலில் வெற்றிபெற்று உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரானார். 2006-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று போக்குவரத்துத்துறை அமைச்சரானார். 2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தவர், 2016-ல் நடந்த தேர்தலில் 92,049 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.மனோகரன் 63,634 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இந்த முறை கே.என்.நேருவை எதிர்த்து அதிமுக சார்பில் வி.பத்மநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் வினோத், அமமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ சார்பில் ஆர்.அப்துல்லா ஹஸ்ஸான், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அபுபக்கர் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். வழக்கமாக அதிமுக வேட்பாளர்தான் நேருவுக்குக் கடும் போட்டியாளராக இருப்பார். ஆனால், இந்த முறை அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வி.பத்மநாதன் புதுமுகம் என்பதால், அவர் நேருவுக்குச் சாதகமாக பார்க்கப்பட்டார்.

மூத்த அரசியல்வாதியான கே.என்.நேருவை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் புதுமுகம் என்பதால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதே முன்னிலையில் இருந்தார் நேரு. அனைத்துச் சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையின்போதும் தொடர்ந்து முன்னிலை வகித்தார். இதன் காரணமாக தன்னை எதிர்த்து போட்டியிட்ட வி.பத்மநாதனைவிட 85,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். பெரிய அளவிலான போட்டி எதுவும் இல்லாமல் எளிதில் வென்றார் கே.என்.நேரு. இதன் மூலம் மீண்டும் தனது தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் .

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு