Published:Updated:

பால் விலை, பேருந்து, மின் கட்டணம்: ``விலையேற்றம் வேண்டுமென்றே திணிப்பதில்லை” - கே.என்.நேரு விளக்கம்

கே.என்.நேரு

``அண்ணாமலை எங்களை ‘வாழ்க’-ன்னா சொல்வாரு. அப்புறம் எப்படி அவர் கட்சி நடத்துறது... அவர் பாட்டுக்கு ஏதாவது சொல்லிட்டுப் போகட்டும். ஜனங்கதானே சார் முடிவு பண்றது?” - அமைச்சர் கே.என்.நேரு

பால் விலை, பேருந்து, மின் கட்டணம்: ``விலையேற்றம் வேண்டுமென்றே திணிப்பதில்லை” - கே.என்.நேரு விளக்கம்

``அண்ணாமலை எங்களை ‘வாழ்க’-ன்னா சொல்வாரு. அப்புறம் எப்படி அவர் கட்சி நடத்துறது... அவர் பாட்டுக்கு ஏதாவது சொல்லிட்டுப் போகட்டும். ஜனங்கதானே சார் முடிவு பண்றது?” - அமைச்சர் கே.என்.நேரு

Published:Updated:
கே.என்.நேரு

திருச்சி தில்லை நகரிலுள்ள மக்கள் மன்றத்தில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி நடைபெற்ற, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் திறந்துவைத்தனர். மேலும், இந்நிகழ்ச்சியில் ரூ.2.7 கோடி மதிப்பிலான பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்த கே.என்.நேரு
புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்த கே.என்.நேரு

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேருவிடம், `முதல்வர் துபாய்க்குப் போனது எதுக்குன்னு ஆண்டவனுக்குத்தான் தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறாரே!’ எனச் செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப, அதற்கு பதிலளித்த கே.என்.நேரு, ``ஆண்டவனுக்கு தெரிஞ்சுதானே அவரே திருச்சிக்குக் கையெழுத்து போட வந்தாரு. முதலீட்டாளர்களைக் கவர்வதற்கும், தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காகவும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்காகவும்தான் தமிழக முதல்வர் துபாய் சென்றுள்ளார். அதைக் கொச்சைப்படுத்துவதுதான் இவர்களுடைய வேலை.

அண்ணாமலை அதிகமா திட்டுறாரா, நாம (ஜெயக்குமார்) அதிகமா திட்டுறோமான்னு அவங்களுக்குள்ள போட்டி நடக்கிறது. அண்ணாமலை எங்களை ‘வாழ்க’-ன்னா சொல்வாரு... அப்புறம் எப்படி அவர் கட்சி நடத்துறது... அவர் பாட்டுக்கு ஏதாவது சொல்லிட்டு போகட்டும். ஜனங்கதானே சார் முடிவு பண்றது. யார் என்ன பேசுனாலும் இறுதி முடிவு ஜனங்ககிட்ட இருக்கு. ஜனங்க தி.மு.க பக்கமும், முதல்வர் பக்கமும் இருக்காங்க. அவங்க எங்க இடத்துக்கு வர்றதுக்கு முயற்சி பண்றதுக்குத் தொடர்ந்து இப்படி ஏதாவது பேசிக்கிட்டே இருக்காங்க. அதுதான் விஷயம்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புகைப்படக் கண்காட்சி
புகைப்படக் கண்காட்சி

தொடர்ந்து பேசியவர், ``திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கான விரிவான திட்ட இறுதி வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்துக்குள்ளாகவே அது டெண்டர் பணிக்கு வந்துவிடும். திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கும் பணி ரூ.438 கோடி மதிப்பீட்டில் நடக்கவிருக்கிறது. காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக ஜங்ஷன் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கும் திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்தக்கூடிய காரணத்தால் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவருவதற்கான பரிசீலனையில் இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாலைகள், கூட்டுக் குடிநீர்த் திட்டம், விடுபட்ட இடங்களில் பாதாளச் சாக்கடைத் திட்டம் இவை அத்தனையும் படிப்படியாக இந்த ஆண்டுக்குள் நிறைவேறும். மற்ற நகரங்களைக் காட்டிலும் ஒரு முன்மாதிரி மாவட்டமாக திருச்சியைக் கொண்டுவருவதற்கான பணிகள் அனைத்தும் நடைபெறும். திருச்சியினுடைய முகம் மாறும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவித்திருக்கிறோம். முதற்கட்டமாக கோவையில் ஆய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. படிப்படியாக திருச்சிக்கும் வரும். மலைக்கோட்டை - வயலூர் - ஸ்ரீரங்கம் - சமயபுரம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த மெட்ரோ திட்டத்தை கொண்டுவருவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்றவரிடம், `பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு விரைவில் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறாரே...’ எனச் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “ஏன் அவங்க ஆட்சியில எதுக்கும் விலை ஏத்தவே இல்லையா... ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு காலத்திலும் பொருளாதாரரீதியாக ஏற்றம் பெருகின்றபோது மக்கள் அதைச் சந்திக்கவேண்டியிருக்குமே தவிர, வேண்டுமென்றே திணிப்பதில்லை. தனியார் கொள்முதல் செய்யும்போது கட்டுப்படியாகவில்லை, விலையேற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். அதிகாரிகள் சம்பளம் அதிகமாக வேண்டுமென்று கேட்கிறார்கள். எவ்வளவுதான் அரசு மானியம் கொடுத்தாலும் சிறு அளவாவது மாறுதல் வரும். அது முதலமைச்சர் முடிவெடுக்கவேண்டியது!” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism