Published:Updated:

`நாங்கள் சொன்னதை தமிழக அரசு கேட்டிருந்தால்?!' -கொரோனா விவகாரத்தில் கே.என்.நேரு ஆதங்கம்

கொரோனா விவகாரத்தில் ஆதங்கப்படும்  கே.என்.நேரு
கொரோனா விவகாரத்தில் ஆதங்கப்படும் கே.என்.நேரு

``கொரோனா விவகாரத்தில், நாங்கள் சொன்னதை தமிழக அரசு கேட்கவில்லை. அதனால்தான் தமிழகம் இவ்வளவு பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளது" என ஆதங்கப்படுகிறார் கே.என்.நேரு

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேவேகத்துக்கு எதிர்க்கட்சியினரும் பொதுமக்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திருச்சி மாவட்டத்தில் அவருக்கே உரித்தான பாணியில் அதிரடி காட்டிவருகிறார். கொரோனா தாக்கம் குறித்த தகவல்கள் வெளியான சில தினங்களில், தனது தொகுதி மக்களுக்கு மாஸ்க், சானிடைஸர் உள்ளிட்ட உபகரணங்களை அனுப்பிவைத்தார்.

கொரோனா விவகாரத்தில் ஆதங்கப்படும்  கே.என்.நேரு
கொரோனா விவகாரத்தில் ஆதங்கப்படும் கே.என்.நேரு

அடுத்து, கொரோனா சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கருவிகள் வாங்குவதற்குத் தனது திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்கியதுடன், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கலைஞர் அறிவாலயத்தை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட கலெக்டரிடம் ஒப்புதல் கடிதம் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு திருச்சி தி.மு.க சார்பில் அரிசி மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

திருச்சி மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதிச் செயலாளர்களான கண்ணன், காஜாமலை விஜய் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் முன்னிலையில் 100 டன் அரிசி மூட்டைகளைத் திருச்சியில் உள்ள 34 வார்டுகளுக்கும் தலா 250 மூட்டைகள் வீதம் தி.மு.க பகுதிச் செயலாளர்கள் மற்றும் வட்ட பிரதிநிதிகள் வசம் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழங்கினார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு
`வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது!' -7 நாளில் 1000 கிமீ கடந்து வந்த தமிழக இளைஞர்கள்

அவர்கள் மூலம் ஒவ்வொரு பகுதிகளில் இருக்கும் நலிவடைந்த மக்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்படுமாம்.

ஆரம்பத்திலேயே எச்சரித்தோம்..!

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, ``தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தார்.

அதைத்தொடர்ந்து சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்ததுடன், இதுகுறித்து கோரிக்கை வைத்தார். ஆனால், தமிழக அரசு, அப்போது, தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறியதுடன், எந்த நடவடிக்கைகளும் எடுக்காததால்தான் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கும் நிலைவரை ஏற்பட்டுள்ளது. மேலும், இவ்வளவு பெரிய பிரச்னையை தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற எங்கள் தலைவர் ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். அதை தமிழக அரசு நிராகரித்துவிட்டது. ஆனால், கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட உள்ளது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க-வும் கலந்துகொள்கிறது
கே.என்.நேரு.

கொரோனா விவகாரத்தில் தி.மு.க எச்சரித்தபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தளவுக்குப் பிரச்னை ஏற்பட்டிருக்காது.

மேலும், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தமிழக மக்களை மீட்கவும், காப்பாற்றவும் தமிழக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவில்லை. ஆனால், மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய அரசு தி.மு.க-வுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொள்ள இருக்கிறார்” எனக் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு